எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, September 26, 2006

32. ஓம் நமச்சிவாயா-3

திரு கைலை மனோஹரிடம் முக்கியமான குறைகள் இரண்டு. மொழிப் பிரச்னை. ஹிந்தி சுத்தமாகத் தெரிய வில்லை. ஆங்கிலமும் சுமார்தான். (இவர் எப்படி 8 முறை கைலை யாத்திரை போய் வந்திருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. 8 முறை ஏற்பாடு செய்து அழைத்தும் போய் இருக்கிறார்.) ஆகவே அவர் ஒண்ணு சொல்ல ஏர்போர்ட்காரர்கள் வேறே மாதிரிப் புரிந்து கொள்ளச் சற்று நேரம் குழப்பமான சூழ்நிலை நிலவியது. திடீரென நாங்கள் 12 பேரும் அங்கிருந்த செக்யூரிட்டியிடம் நாங்கள் மேலே வருவதை தொலைபேசியில் சொல்லச் சொல்லிவிட்டுப் படை எடுத்தோம். மனோஹரும் உடன் வந்தார். அவர் பக்க விவாதம் குழுவாக வந்திருக்கையில் எல்லாருக்கும் கூப்பிட்டு முத்திரை வைத்திருக்க வேண்டும் என்பது. ஏர்போர்ட் காரர்கள் குழுவில் எத்தனை பேர் என்று தெரியாதபோது முன்னால் போனவர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எங்களுக்கு எப்படித் தெரியும் என்பது. திரு மனோஹர் சொன்னது சரியில்லை என எங்களுக்குத் தெரிய நாங்கள் அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டோம். இந்தப் புதிய நடைமுறை பற்றி மனோஹர் அவர்கள் டெல்லியிலேயோ அல்லது இறங்கும் முன்போ தெரிவித்திருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ஒருவழியாக அதிகாரி சமாதானம் ஆகி எங்கள் எல்லாருக்கும் ஸ்டாம்ப் ஒட்டி அனுமதி முத்திரை போட்டுத் தந்தார்.

நேபாளத்தில் உள்ள 'ECO TREK' என்னும் நிறுவனம் நேபாளத்தில் இருந்து திருக்கைலாயம் வரை சென்று திரும்பி வரும் வரை யாத்திரீகர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. திரு மனோஹர் அதன் சென்னை ஏஜெண்ட் மட்டும் தான். நாம் முன்னதாக மனோஹரிடம் 5,000 ரூபாய் முன்பணம் கட்டிப் பதிவு செய்து கொண்டால் அதை வைத்து அவர்கள் காட்மாண்டு சென்று குழுவில் எத்தனை பேர் சேருகிறார்களோ அத்தனை பேருக்கும் குழுவாக விசா ஏற்பாடு செய்கிறார்கள். சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்மாண்டு சென்று அங்கிருந்து கைலை சென்று பின் திரும்பி ரெயில் மூலமே சென்னை திரும்பக் கட்டணம் முன் பதிவையும் சேர்த்துரூ.52,900/-. சென்னையில் இருந்து டெல்லி ரெயிலில் சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் காட்மாண்டு சென்று கைலை தரிசனம் முடித்துப் பின் அதே மாதிரி திரும்பி வரக் கட்டணம் ரூ.58,400/-. நாங்கள் டெல்லி வரை சொந்தச் செலவிலும் பின் அங்கிருந்து காட்மாண்டுவிற்கு விமானம் மூலமும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இதை ஏற்று நடத்தும் "எக்கோ ட்ரெக்" காரர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்து எங்களை வரவேற்று ஒரு பஸ்ஸில் எங்களை எல்லாம் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்கள். ஹோட்டல் 3 நட்சத்திர அந்தஸ்து உள்ளது. கணவன், மனைவியராக வந்தவர்களுக்கு ஒரு ரூமும் தனியாக வந்தவர்களுக்கு அவரவர் விரும்பும் நண்பருடன் இரண்டு பேருக்கு ஒரு ரூமுமாக ஏற்பாடு செய்து தந்தார்கள். சாமான்கள் எல்லாம் வந்ததும் எல்லாரும் ரூமுக்குப் போகும்போது திரு மனோஹர் டின்னர் சாப்பிட அழைத்தார். ஏற்கெனவே மணி 11-00P.M. நெருங்கிக் கொண்டிருந்தது. மேலும் விமானத்தில் 9-00P.M.-க்குத் தான் சாப்பிட்டிருந்தோம். ஆகையால் நாங்கள் சாப்பாடு வேண்டாம், பால் மட்டும் போதும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினோம். அவங்க விளம்பரத்தில் பால், ஹார்லிக்ஸ், காபி, டீ, போர்ன்விடா, சாக்லேட் டிரிங்க் என்று எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆகையால் தான் அம்மாதிரி வேண்டுகோள் விடுத்துவிட்டுப் போனோம். அறைக்குப் போய் 1/2 மணி ஆகியும் தண்ணீர் கூட வரவில்லை. என்ன இது என்று அறையைத் திறந்து கண்ணில் எதிர்ப்பட்ட ரூம்பாயிடம் எங்கள் வேண்டுகோளைச் சொன்னோம். அவன் சிரித்து விட்டுப் போனான். என்ன இது? நாம் நல்லாத் தானே ஹிந்தி பேசறோம்? என்று எனக்கு ஆச்சரியம்?

அதற்குள் எதிர் அறைக்கதவு தற்செயலாகத் திறந்து புனே நகரில் இருந்து வந்திருந்த திரு. ராமச்சந்திரன் எதிர்ப்பட்டார். அவரிடம் "சாப்பிட்டீங்களா? நாளை என்ன ப்ரொக்ராம் சொன்னார்கள்?" என்று கேட்டேன். அவர், "காலை 7-30 மணிக்கு காலை உணவுக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். அங்கே அறிவிப்பார்களாம்." என்றார். உடனேயே நான், "பின் காலை காபிக்கு ரூம் செர்வீஸ் உண்டா?" என்று கேட்டேன். உடனேயே அவர்,"தெரியவில்லை. இப்போ நாங்கள் சாப்பாடு வேண்டாம். பால் போதும் என்று சொன்னோம். பால் கொண்டு கொடுத்துவிட்டு பில் கொடுத்தான். பணம் நாங்கள் தான் கொடுத்தோம்." என்றார். உடனேயே என் கணவரிடம் சொல்ல அவர் ரிசப்ஷனுக்கு போன் செய்து எங்கள் விருப்பத்தையும், இன்னும் பால் வராததையும் சொல்ல அவர்கள் பால் தருவதாகவும் உடனேயே பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பால் என்ன ஆயிரம் ரூபாயா இருக்கப் போகிறது? சரி என்றோம். பால் வந்தது. பில்லும் கூட. அதில் எங்கள் சொத்தையே கேட்பார்கள் போல் பாலுக்கு விலை. நேபாளத்தில் இந்திய 500ரூ. 1,000ரூ செல்லாது. 100ரூ தான் செல்லும். 100ரூபாய்களாகக் கொடுத்துவிட்டு மிச்சம் நேபாள ரூபாயில் சில்லறையாகத் தந்ததை வாங்கிக் கொண்டோம். சரி, யு.எஸ்ஸுக்கு போன் செய்தாவது பேசலாம் என்று ரிசப்ஷனை அழைத்துக் கேட்டால் அவன் சொத்தெல்லாம் போதாது. ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட் இருக்கிறதா? என்று கேட்டான். போனே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டுப் படுத்தோம். காலைக் காப்பி வாயிலும் மண். காலை எழுந்து குளித்து முடித்துவிட்டுக் காலை உணவு அளிக்கும் இடம் சென்றோம். ப்ரெட் டோஸ்ட், சாஃப்ட் ப்ரெட், தோசை என்ற பெயரில் ஒரு வஸ்து, சட்னி, சாம்பார் ஆகியவையும் காப்பி,டீ போன்றவையும் காலை உணவு. யாருமே காலைக் காப்பியைப் பற்றிப் பேசவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்றும் கேட்கவில்லை. நாம் மட்டும் எப்படிக் கேட்பது? எல்லாரும் முக்திநாத் போவது பற்றி மட்டும் விசாரித்தோம். ரெயிலில் வருபவர்கள் அன்று மாலை அளவில் வருவதாகவும் எல்லாரும் வந்த பின்னர் கைலை யாத்திரை முடிந்து திரும்ப வரும்போது முக்திநாத் போகலாம் என்றும் மெம்பர்கள் ஜாஸ்தி ஆக ஆகப் பணம் குறையும் என்றும் சொன்னார்கள். இன்று நேபாளத்தில் உள்ள பசுபதி நாத், குஹேஸ்வரி(சக்தி பீடம்) கோயில், பூடா நீல்கண்ட் கோவில் மற்றும் ஸ்வயம்புநாத் கோவில் ஆகியவை செல்ல பஸ் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்லவே எல்லாரும் மறுபடி உற்சாகம் அடைந்து காலை உணவை முடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.

12 comments:

ambi said...

kaasiku ponaalum kazhuthaiyoda paavam tholayumoo?

porathu kailash! ithula kaapi illye!nu oru kuraiyaa? Hhhm. eppa thaan intha ulaga banthathula iruntha vidu pada poraaloo intha manushaa? (ennayum serthu thaan solren) :)

nice writing. but ivloo bekku maathiri emaanthu irukka vendaam. buthishaali saambu mama irunthuma ipdi aachu?
unga aathula madurai rule thaan polirukku!

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrr ஆப்பு, எங்க வீட்டிலே திருச்செங்கோடு. அர்த்தம் தெரியுமா? பேக்கு நான் மட்டும் இல்லை. தகவல் சேகரித்த உங்கள் புத்திசாலி சாம்பு மாமாவே தான். இது எப்படி இருக்கு? நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டார். ஹி,ஹி,ஹி,ஹி.

Geetha Sambasivam said...

வேதா(ள்) இன்னும் போகப் போகப் படிச்சுட்டுச் சொல்லுங்க உங்க கருத்தை.
அப்புறம் சூடான் புலி பேர் மாத்தும் போது ஆன்மீகம் என்பதற்கு ஆன்மிகம்னு போட்டிருக்கு. புலியைக் காணவே காணோமே? என்ன ஆச்சு?

தி. ரா. ச.(T.R.C.) said...

போன இடத்தில் நாலு எடம் பாத்தோமா வந்தோமான்னு இருக்கனும்.சும்மா காபி ,டீ,சாப்பாடு,இட்டிலி,சட்னி, சாம்பார் இதெல்லாம் கிடைக்கலைன்னு ஒரே புலம்பல்.
சரி பசுபதிநாத் கோவிலைப் பத்தி எழுதுங்கள் சீக்கிரம்.அம்பி நீ இப்போல்லாம் சரியா சொல்லரே.

தி. ரா. ச.(T.R.C.) said...

போன இடத்தில் நாலு எடம் பாத்தோமா வந்தோமான்னு இருக்கனும்.சும்மா காபி ,டீ,சாப்பாடு,இட்டிலி,சட்னி, சாம்பார் இதெல்லாம் கிடைக்கலைன்னு ஒரே புலம்பல்.
சரி பசுபதிநாத் கோவிலைப் பத்தி எழுதுங்கள் சீக்கிரம்.அம்பி நீ இப்போல்லாம் சரியா சொல்லரே.

தி. ரா. ச.(T.R.C.) said...

போன இடத்தில் நாலு எடம் பாத்தோமா வந்தோமான்னு இருக்கனும்.சும்மா காபி ,டீ,சாப்பாடு,இட்டிலி,சட்னி, சாம்பார் இதெல்லாம் கிடைக்கலைன்னு ஒரே புலம்பல்.
சரி பசுபதிநாத் கோவிலைப் பத்தி எழுதுங்கள் சீக்கிரம்.அம்பி நீ இப்போல்லாம் சரியா சொல்லரே.

Geetha Sambasivam said...

சார், ஆனாலும் நீங்களும் உங்க சிஷ்யனும் சேர்ந்து தாளம் போட ஆரம்பிச்சிருக்கீங்க. எனக்கு ஆள் இல்லைனு தானே? ம்ஹும், நான் வீர தீர பராக்கிரமசாலியாக்கும். தனியாவே சவாலே, சமாளி.

Geetha Sambasivam said...

புலிக்கு மெயில் கொடுத்தும்ம் பதிலே வரலை. ரொம்பக் கவலையா இருக்கு. பார்ப்போம்.

Porkodi (பொற்கொடி) said...

நல்ல வேளை ஏதோ இந்த மட்டும் யாத்திரை நடந்துதே, சந்தோஷம் :)

ஆமாம்.. புலிய நானும் தேடுறேன்.. பதிலே காணோம் என்னாச்சுனு ஏதும் தெரியுமா??

வல்லிசிம்ஹன் said...

கீதா காலைலே காப்பி இலாம என்ன செய்ய முடியும்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

குளிர் எப்படி இருன்ந்தது. உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்க்கும்,வல்லி

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க அதுவும் பூங்கொத்தோடு. ரொம்ப நன்றி. குளிரா? அது? க்க்க்குகுக்குகுளிளிளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

G.Ragavan said...

அனுபவங்களச் சொல்லும் போது படமும் போட்டா நல்லாயிருக்குமே...நாங்களும் அந்த எடங்கள பாத்துக்கிருவோம்ல.