மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். யாரும் தனியாக முயல வேண்டாம்.
மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.
இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.
இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.
உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.
ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.
உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும்.
இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி
நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.
மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.
உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.
அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி
உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.
9 comments:
ஹும்! கொஞ்சம் விவகாரன விஷயமாகத்தான் இருக்கும் போல.
தெரிந்தாவது வைத்துக்கொள்வோம்.
கீதா மேடம்,
இந்த பக்கத்தை பார்த்தவுடன், உங்க பதிவு ஞாபகம் வந்தது...
ஆகவே இங்கே சென்று பாருங்களேன்...
ஜீவா கொடுத்த சுட்டிக்கு மிக்க நன்றி.
அவசரமாக படிக்கக்கூடியது அல்ல அது.
கீதா மேடம் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனாலும் நீங்க இதை இங்கு தொடாத காரணத்தால் மறந்துவிட்டீர்களோ என்றே இந்தப் பின்னூட்டம். ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.
"ம்ஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹீதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்டானே ஜ்ருதி மருத-மாகாச முபரி
மனோபி ப்ருமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே. "
ஸெளந்தர்ய லஹரி ஒன்பதாவது ஸ்லோகம்.
இங்கு ஆதிசங்கரர் என்ன சொல்கிறார் என்றால், பிருதிவீ தத்வமான மூலாதாரதையும், ஜலதத்வமான மணிபூரத்தையும், அக்னி தத்வமான ஸ்வாதிஷ்ட்டானத்தையும், வாயுத்தத்வமான அனாஹதத்தையும், ஆகாச தத்வமான விசுத்தியையும், ப்ருமத்தியாகிய ஆக்ஞையில் மனஸ்த்தத்வத்தையும் ஊடுருவிச் சென்று ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் (சஹஸ்ராரே பத்மே), ரஹஸ்யமான இடத்தில் (பத்யா ஸ்ஹ) உனது பதியான ஸதாசிவனுடன் விஹரஸ்மாய் இருக்கிறாய் என்று சொல்கிறார்.
அதாவது குண்டலினி மூலமாகவும் அம்பாளை அடையலாம். ஒரு யோகியின் குண்டலினி ஸஹஸ்ராரத்தை எட்டிவிட்டால், அந்த யோகி அம்பாளின் பரஸ்ரேஷ்ட்டமான சிவ-சக்தி இணைந்த ஸ்வரூபத்தை காணலாம்.
மேலும் தேவி மஹாத்மீயத்தில் உள்ள ஒருவரியையும் தருகிறேன்.
"சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா விவர்ஜித: "
அதாவது குண்டலினியிலிருந்து பிரிந்துவிட்டால் சிவனும் சவம் போல் ஆகிறான் என்று அர்த்தம். இது எதற்காக சொல்லப்படுகிறதென்றால், இந்த குண்டலினி சக்தியின் பல ஸ்டேஜகள் அன்னையின் பல வடிவங்களாக கருதப்படுவதால்.
(இன்னும் ஏதேனும் கருத்துக்கள் மனதில் தோன்றினால் மீண்டும் வருகிறேன்.)
மேலே சொல்லப்பட்டதே "ஷட்சக்ரவேதனம்" எனப்படுவது. அந்தர் யாகம் என்றும் கூறுவார்கள்...
கீதா மேடம், க்ரந்திகள் பற்றியும் சொல்லுவீர்கள் என்று நினைக்கிறேன்.
@வடுவூர் குமார், தெரிஞ்சு வச்சுக்கறதோட நிறுத்திக்கிறது தான் நல்லது.
@ஜீவா, ரொம்பவே நன்றி, நீங்கள் கொடுத்து உதவிய சுட்டிக்கு. தினமும் போய்ப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
@மதுரையம்பதி, கடைசியில் வரும் நீங்க சொல்றது எல்லாம். ஆனாலும் இவ்வளவு விளக்குவேனா சந்தேகம் தான். பார்க்கலாம். அப்போது இது என்னை எங்கே இழுத்துப் போகிறதோ அந்த மாதிரித் தான் நடக்கும். ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு.
ஜீவா கொடுத்த லிங்கைப் போய்ப் பார்த்தேன். இந்த இடத்தில் நிஜமாவே சும்மாப் பார்த்துட்டுத் தான் வந்தேன். என் கணவர் தான் படித்தார். நான் இன்னும் படிக்கவில்லை. பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். தற்சமயம் அவ்வளவு நேரம் செலவு செய்ய முடியாது. பலபேர் பல கேள்விகள் கேட்கிறார்கள். ஆனால் என்னுடைய ஒரே பதில் "குண்டலினியை" யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்பதே!
மிக ஆழமான விஷயம். எளிமையாக எல்லாருக்கும் புரியும்படி எழுதுகிறீர்கள்.
இந்த சக்கரங்களுக்கும் நாளமில்லச் சுரப்பிகளுக்கும்( endocrine glands) பல நேரடித் தொடர்புகள் உண்டு.
மூலாதாரம் - adrenal gland
அனாஹதம் - thymus
ஆக்ஞா -pieneal
சஹஸ்ராரா - pitutary
விஷுத்தி - thyroid(இதை நீங்களும்
குறிப்பிட்டிருக்கிறீர்கள்)
மணிபூரம் - solar plexus (இதுநாளமில்லாச் சுரப்பி அல்ல. நாபிக்கருகிலுள்ள நரம்புக் கூட்டம் )
ரொம்பவே நன்றி ஜெயஸ்ரீ, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம் நானும் அறிந்து கொண்டிருக்கிறேன், ஆனால் பதிவின் நீளம் கருதியும் கூடியவரை சுருக்கமாகத் தகவல்கள் கொடுக்கவேண்டும் (ஏனெனில் பதிவின் நோக்கம் மாறிவிடும் :D) என்றும் கருதித் தான் அதை எழுதவில்லை. உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Post a Comment