எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 05, 2007

சிதம்பர ரகசியம் - சரபர் தோன்றிய காரணம்!


அபி அப்பா சொன்னதின் பேரில் தனிப்பட்டக் குறிப்புக்கள் எதுவும் இல்லாமல் கூடியவரை பதிவின் தலைப்புக்கள் சம்மந்தமாகவே எழுதத் தீர்மானித்து இருக்கேன். இருந்தாலும் சில சமயம் உதவிகள் செய்து வருபவர்களைக் குறிப்பிட வேண்டும். சரபர் பத்தின கதை ஏற்கெனவே தெரியும் என்றாலும், அவ்வளவு விவரமாய்த் தெரியாமல் கூகிளில் ஒரு நாளைச் செலவழித்தபின் வழக்கம் போல் நண்பர் "அகிரா"வின் உதவியை நாடினேன். அவர் கொடுத்த லிங்கில் இருந்து எடுத்த தகவல்கள் பெரிதும் உதவின. "அகிரா"விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
***********************************************************************

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

20 comments:

Padmapriya said...

Geetha Amma,
naa inniku thaan ungaloda inda blog-aa paarthen.... velai ellam odhuki vechutu.. lunch ku apparathula irundhu padikka aarambichen.

Idhu varaikum unga Chidambara Ragasyam ella parts yum padichiten.. inimel thaan mathadha padikkanum.

Really enjoyed reading it.. romba mana niraivaa irundhachu.. good work!!

unga june 22 part la.. Bhramma voda thalaiya Sivan killinadhu pathi ezhutheerndheengalea.. adhu pathi enga paati enaku sonnadhu ennanna,

andha adi-mudi kandupidikkara pottila Bhramma poi sonnadhunala thalaiya sivan killiduvaaraam.. adhuku Bhramma, En thalai un kaiyodave oru thiru ooda ottikum, Nee bikshai eduthu adha nirappinadhaan adhu un kaiya vittu piriyum nu shabichuduvaaraam..

Sivanum melulagam, keezhulagam ellam bhikshai eduthum, anda thalai podaradha ellam vizhungite irukumaam,

Apparam paarvathi sivanukaha avaloda anna Vishnu ta murai iduvaalam idhu pathi,. apo Vishnu Lakshmi ta solli ava ullangai la irundhu thanga kaasu, thaanyam ellam pottu nirappa solluvaaram., Lakshmi ye tired aanadhuku apparama thaan andha thiru oodu nirambumaam.. kaiya vittu pinjadhuku apparamum, sivan than kaiya moodikkaama irundhittadhunala thirumbavum vandhu kaile ottikumaam., apparam thirumbavum Lakshmi kaasu pottu nirappuvaalaam, indha murai Sivan thiru oodu pirinjadhu kaiya nanna moodikuvaaram..so anda thiru oodu keezha vizhundhu sidharidumaam.. anda idam Chidambaram nu sonnaanga enga paatti.

Idhu enga paatti sonna kadhai., proof laam onnum illa :)

Keep penning.,
naa comment podalenaalum thavarama padippen :)

Thanks,
Priya.

Geetha Sambasivam said...

வாங்க பத்மப்ரியா, உங்க பாட்டி சொன்ன கதையிலே மகாலட்சுமி எத்தனை தரம் காசு போட்டும் சிவன் கையில் உள்ள திருவோடு நிரம்பலை என்றும், அந்த ஈஸ்வரியே அன்னபூரணியாக உருவெடுத்து வந்து, சமைத்து அன்னம் இட்டதின் பிறகு தான் திருவோடு கையை விட்டுப் போச்சு என்றும், இது நடந்த இடம் "காசி" என்றும் சொல்வார்கள். மேலும் பிரம்மாவின் கபாலம் உடைந்த இடம் "பத்ரிநாத்" என்றும் சொல்வார்கள். பிரம்ம கபாலம் என்றொரு இடமே அங்கே இருக்கு. அங்கே தான் முன்னோர்களுக்கான திதியும், பிண்டமும் கொடுப்பார்கள். முதல் வருகைக்கும், அருமையான பகிர்தலுக்கும் நன்றி.

Padmapriya said...

Ohh apdiya?!
//வருகைக்கும், அருமையான பகிர்தலுக்கும் நன்றி//
Pleasure is mine :)

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேன்னம்மா... :-)

Geetha Sambasivam said...

@பத்மப்ரியா, மறு வருகைக்கு நன்றி.

@மதுரையம்பதி, சரபர் பற்றிய உங்களின் விரிவான பகிர்தலை எதிர்பார்த்தேன், இப்படி ஒரே வார்த்தையில் சொல்லிட்டுப் போயிட்டீங்களே? :(

அபி அப்பா said...

ஆமாம் கீதாம்மா! திருபுவனம் பக்கத்திலே தான் இருக்கு ஆனாலும் நான் இன்னும் போகவில்லை, ஒவ்வொறு முறையும் போகனுன்னு தோனும் ஆனா விட்டு போயிடும், ஆனா சிதம்பரம் சரபேஸ்வரர் அபிஷேகம் ஞாயிற்று கிழமைல பார்த்தது உண்டு!

மெளலி (மதுரையம்பதி) said...

கீதா மாமி, நானும் பதிய ஆரம்பித்துவிட்டேன்....(ஆனா எந்த திரட்டியிலும் சேரும் எண்ணம் இல்லை.....) அங்கு சொல்கிறேன் எனக்குத் தெரிந்த சரபரை.

தி. ரா. ச.(T.R.C.) said...

சரப வழிபாடு சோழர் காலத்தில்தான் வலுப்பெற்றதாக இருக்கலாம் ஆனால் அதற்கு முன்பே வழிபாடு உண்டு.
சரப புரணம் சொன்னதற்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

சரப வழிபாடு சோழர் காலத்தில்தான் வலுப்பெற்றதாக இருக்கலாம் ஆனால் அதற்கு முன்பே வழிபாடு உண்டு.
சரப புரணம் சொன்னதற்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ கொஞ்சம் தெரிந்ததை எழுதியுள்ளேன் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்...

Yogi said...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில், திருக்கல்யாணம் நடக்கும் இடத்தின் அருகில், ஒரு தூணில் சரபேஸ்வரரின் சிற்பம் உள்ளது. எல்லோரும் விளக்கேற்றி வழிபடுவார்கள்.

Geetha Sambasivam said...

ஒரு வழியா இந்த சரபர் படத்தையாவது ஒழுங்காப் போட முடிஞ்சதே! விநாயகா! நீயே துணை!

@பொன்வண்டு, அது சரபரா? ம்ம்ம்ம்ம், அகோர வீரபத்திரருக்கு மேலேயா? அல்லது அவரையே சொல்றீங்களா? வீரபத்திரர் தான் சரபராக அவதரித்தார், சிவனருளால் எனவும் ஒரு புராணத்தில் சொல்லி இருக்கிறது.

Dhivya Dharsanam said...

மிகவும் அருமை திருமதி கீதா அவர்களே ! இப்புனித பணியை விடாமல் தொடரவும் ! வணக்கங்களுடன், சரவணன்.

Anonymous said...

Geetha madam the posting is about sarabar but the picture is hanuman try to change

Geetha Sambasivam said...

நன்றி காரைக்கால் அவர்களே, திருபுவனம் சரபர் படம் தான் போட்டிருந்தேன். எப்படியோ தவறு நிகழ்ந்திருக்கிறது, கவனிக்கவில்லை. சுட்டியதற்கு நன்றி.

murali said...

தாயே,
சரபேஸ்வரர் அர்ச்சனை மந்திரங்களை இந்த அரிவிலிக்கு அருளவேண்டும்.

murali said...

சரபேஸ்வரர் அர்ச்சனை மந்திரங்களை அருளவேண்டும்

murali said...

சரபேஸ்வரர் அர்ச்சனை மந்திரங்களை அருளவேண்டும்

murali said...

மூர்தியை சம்ரக்ஷணை செய்ய விரும்புகிரேன்

murali said...

மூர்தியை சம்ரக்ஷணை செய்ய விரும்புகிரேன்