எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Tuesday, April 29, 2008
கூடல் குமரனுக்காக ஒரு பதிவு!
அடிகள் காலம்:
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளைத் தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து தருமை ஆதீனத் திருவாசக நூல் வெளியீட்டில் மகாவித்துவான், திரு. ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின் ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.
``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண் டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், G.U.. போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என் றும், சூலின் வின்ஸன் 9 அல்லது 10 - நூற்றாண்டு என்றும், Mr. கௌடி 8 லிருந்து 10 - ஆம் நூற்றாண்டுக்குள் என்றும், Dr. ரோஸ்ட்டு 13 அல்லது 14 - ஆம் நூற்றாண்டு என்றும், நெல்ஸன் 9 - ஆம் நூற்றாண்டு என்றும், K.G. சேஷய்யர் 3 அல்லது 4 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், C.K.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்``.
மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.
தேவாரம்
மற்றபடி நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டவைகள் பற்றிய மேல் அதிகத் தகவல்கள் தேடுகின்றேன். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இவை தான் கீதாம்மா நான் படித்தவற்றின் தொகுப்பு. இந்தக்கருத்துப்படி மூவருக்கும் முதல்வர் வாதவூரார் என்றால் அவர் வாசகத்தில் வரும் குறிப்புகளின் படி தில்லை கோவிந்தன் அவர் காலத்திலேயே இருந்திருக்கிறான் என்று ஆகும். அவர் மூவருக்குப் பிந்தியவர் என்றாலும் நீங்கள் தந்துள்ள குறிப்பின் படி பொருந்தும் என்று தோன்றுகிறது. சமண பௌத்தர்களின் ஆட்சி சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றே அறிகிறேன். தேவார மூவர் காலத்தில் சமணம் வீழ்ந்த பின்னர் மாணிக்கவாசகர் காலத்தில் பௌத்தம் மட்டுமே இருந்திருக்கலாம். அதனால் தான் சமணத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. விநாயகரைப் பற்றிய குறிப்பு தேவாரத்தில் இருக்கிறது; வாசகத்தில் இல்லை என்பதை எந்த விதத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை. விநாயகர் வழிபாடு தேவார காலத்தில் தான் வந்தது என்ற கொள்கையின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து என்று நினைக்கிறேன் - இந்தக் கருத்தில் எனக்கு முழுமையான தெளிவும் உடன்பாடும் இல்லை.
உள்ளேன் அம்மா!
இப்படி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு காலத்தை சுட்டும்போது, நாம் இருப்பதிலேயே பிந்தைய காலத்தைக் கொள்ள வேண்டும் எனபது என் கருத்து!
படிச்சேன்னு மட்டும் சொல்லிக்கறேன்...
சரியா சொன்னிங்க Jeeva Venkataraman
சரியா சொன்னிங்க ஜீவா
புத்தன் முதலாய புல்லுருவி பல்சமயம்..
மாணிக்கவாசகர் மட்டுமின்றி ஆதிசங்கரரின் காலமும் கருத்து வேறுபாடுகளுக்கு உரியதாய் உள்ளது. பிந்தைய காலத்தைக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் உண்டு.
எனக்கு அவர் மோட்சம் தருவாரா. எனக்கு அதில் தான் கவலை யாக உள்ளது.
மனமாரப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இறைவனிடம் வேறுபாடுகளே இல்லை.
அசிகளுக்கு நன்றி..
Post a Comment