எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Sunday, July 13, 2008
சிதம்பர ரகசியம் - பெருமாள் கோயில்- சில தகவல்கள்!
சிதம்பரம் கோயில், எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும், சிவனடியார்களால் கோயில் எனக் குறிப்பிடப் படும் இடமாகவுமே இருந்து வந்தது. தேவார மூவர் காலத்திலேயும், மாணிக்கவாசகர் காலத்திலேயும், இங்கே ஈசன் மட்டுமே அன்னையோடு குடி இருந்து வந்ததாயும் தெரிய வருகின்றது. பல தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் இந்தக் கோயிலையே தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லியும் இருக்கின்றன.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் போன்றவைகளும் சிதம்பரம் கோயில் சைவத்தின் தலைமைக் கோயில் எனச் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றன. பல கல்வெட்டுக்களும் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றன.
இந்நிலையில் தில்லைக் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள் வந்த வரலாறு என்ன? நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல் கீழே:
"முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப் பட்டது என்று தெரியவருகின்றது. கி.பி726-775 வரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவன், தன் ஆட்சியின் ஆரம்ப காலத்திலே சைவ, வைணவ மதங்களை ஒன்றாகக் கருதி வந்தாலும், பின்னர் திருமங்கை ஆழ்வாரால் பரம வைணவன் ஆகிவிட்டான் என வரலாறு கூறுகின்றது. அவன் வேண்டுகோள் பேரிலும், மன்னனுக்கே இயல்பாக எழுந்த ஆசையினாலுமே, தில்லையில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக சன்னதி எழுப்பப் பட்டு அங்கே பிரதிஷ்டையும் செய்யப் பட்டிருக்கின்றார். இதைத் திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில், இவ்வாறு கூறுகின்றார்.
"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன்பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திரகூடம் சென்று சேர்மின்களே"
(பெரிய திருமொழி 3-2-3)
இதிலே சித்திரகூடம் என்பதற்குத் தெற்றியம்பலம் என அர்த்தம் வருவதாயும், தெற்றி=திண்ணை எனப் பொருள் கொள்ளவேண்டும் எனவும் தமிழறிஞர்கள் சொல்கின்றனர். தெற்றியம்பலம் என்பது சிறிய திண்ணை எனப் பொருள் எனவும், சிறிய திண்ணை போன்ற இடத்திலேயே பெருமாள் கோவில் கொண்டிருந்திருக்கின்றார் எனவும் சொல்லப் படுகின்றது. இந்த அரசன், பற்றிய பட்டயச் செய்திகளில், இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது. தவிர, இங்கே பெருமாள் பிரதிஷ்டை செய்யப் பட்டதில் இருந்தே தில்லையம்பல நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார். ஆகவே, இந்த கோவிந்தராஜரின் வழிபாடுகளையும், தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள், எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இன்றியே!
இதுபோலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும், பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார், என்பதும், "நிலாத்திங்கள் துண்டத்தான்" என அதே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பட்டிருப்பதும், அங்கே இன்றளவும் சிவாச்சாரியார்களாலேயே பெருமாள் பூஜிக்கப் படுகின்றார் என்பதும் கவனிக்கத் தக்கது.
"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
.. தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3.2-8)
"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது, பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும், அப்போது நடந்தவை பற்றியும் நாளை பார்ப்போமா??
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
nalla pathivu
enna geethamma?
wherez the next part?
- ippadikku
Rangaraja Nambi
:))))))))))))))))
//நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சமீபத்தில் சிதம்பரத்தில் தீட்சிதரிடம் பேசி உறுதி செய்து கொண்டதும் ஆன அந்தத் தகவல்//
:-))
இப்போ கேள்விகள்
1.
//முதன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு எனத் தனியாக ஒரு சன்னதி ஏற்படுத்தப் பட்டது என்று தெரியவருகின்றது//
அதற்கு முன் கோவிந்தராசர் எங்கு இருந்தார்? தனிச் சன்னிதி இல்லையா? இல்லை கோவிந்தராசரே அங்கு இல்லையா? :)
பரமனின் நடனத்தைச் சயனத் திருக்கோலத்தில் மனதால் கண்டு சேவிக்குங்கால், பெருமாளின் பாரம் தாங்காமல், ஆதிசேடன் வினவியதும், பதஞ்சலி வந்ததும்....
இதெல்லாம் இருக்கும் போது.....
தில்லையில் நந்திவர்ம பலவன் செய்தது என்ன? சன்னிதி சமைத்தானா இல்லை கோவிந்தராசனையே சமைத்தானா? :)
2.//அரசன், பற்றிய பட்டயச் செய்திகளில், இறைவன் திருவடிகளைத் தவிர வேறொன்றுக்கும் இவன் தலை வணங்கியதில்லை என்று இருப்பதில் இருந்தே இவன் வைணவனாக மாறியது புலனாகின்றது//
திருவடி வணக்கம் என்றால் அது வைணவம் மட்டும் தானா?
திருவடி வணக்கம் ஒன்றினாலேயே பல்லவன் வைணவனாக மாறினான் என்பது ஆய்வா இல்லை உங்கள் துணிபா?
3. முக்கியமான கேள்வி
//தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்" (குல.தி. 10.2)
என்று பெரிய திருமொழியிலும், குலசேகர ஆழ்வாராலும் பாடப் பட்டு வந்தது//
குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!
திருமங்கை சொல்லித் தான் பல்லவன் தனிச் சன்னிதி அமைத்தான் என்றால், அதுக்கு முன்பே குலசேகரர் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடி இருக்க முடியும்?
தீட்சிதரிடம் இதை வினவினீர்களா கீதாம்மா? :)
//நடராஜரைச் சுற்றி இருக்கும் பரிவார தேவதைகளில் ஒருவராகவே இருந்து வந்திருக்கின்றார்//
உண்மை!
//கோவிந்தராஜரின் வழிபாடுகளையும், தில்லை மூவாயிரவர் எனப்படும் தீட்சிதர்களே செய்து வந்திருக்கின்றார்கள்//
உண்மை
"மூவாயிர" நான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே
என்பதே அதைச் சொல்லும் பாசுரம்!
//பின்னாட்களில் வைணவர்கள் கைக்குப் போனதும்//
ஏன் போனது கீதாம்மா?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?
அடுத்த பதிவுக்கு வெயிட்டீங்க்ஸ் ஆப் அம்பத்தூர் :)))
//இதுபோலவே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும், பரிவார தெய்வமாகவே பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார், என்பதும், "நிலாத்திங்கள் துண்டத்தான்//
உண்மை கீதாம்மா! அந்த திவ்யதேசத்துக்கு நிலாத்திங்கள் துண்டம் என்றே பெயர்!
அதே போல் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திலும் ஒரு திவ்யதேசம் உண்டு! பேரு: திருக்கள்வனூர்
இரண்டிலுமே பெருமாள் பரிவார தேவதை தான்! அவருக்குத் தனியாக விழா எல்லாம் எடுக்க மாட்டார்கள்! வெறுமனே அன்றாடப் பூசை தான்! இதற்காக யாரும் வரிந்து கட்டுவது எல்லாம் கிடையாது! ஒற்றுமையாகவே இருக்கின்றனர்!
அறிந்தோ அறியாமலோ,
108 திவ்யதேசங்களுள் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோயிலும், அன்னை காமாட்சி அம்மன் கோயிலும் கூட வருவது தான் எவ்வளவு சிறப்பு, பாருங்கள்!
//enna geethamma?
wherez the next part?
- ippadikku
Rangaraja Nambi
:))))))))))))))))//
ரங்கராஜ நம்பி, படமா ஐயா அது எடுத்திருக்கீங்க?? பொய்யெல்லாம் சொல்லிட்டு, அதை நிலை நாட்டப் படமும் எடுத்துட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//அதற்கு முன் கோவிந்தராசர் எங்கு இருந்தார்? தனிச் சன்னிதி இல்லையா? இல்லை கோவிந்தராசரே அங்கு இல்லையா? :)//
கோவிந்தராஜரே அங்கு இல்லை, இதைப் பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன், கவனிச்சுப் படிக்கணுமோ?? :P :P :P
//சிதம்பரம் கோயில், எப்போது எனக் காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே ஈசன் கோயிலாகவே இருந்து வந்தது. சிவனடியார்கள் போற்றிப் பாடும் இடமாகவும், சிவனடியார்களால் கோயில்//
ஈசனின் கோயிலாகவே இருந்து வந்த ஒன்றில் பின்னால் வந்த நந்திவர்ம பல்லவனே, பெருமாளுக்கும் இடம் தேடிக் கொடுத்திருக்கின்றான்.
//
//தில்லையில் நந்திவர்ம பலவன் செய்தது என்ன? சன்னிதி சமைத்தானா இல்லை கோவிந்தராசனையே சமைத்தானா? :)//
கோவிந்தராஜனையும், அவனுக்காக அவன் ஒதுங்க ஒரு திண்ணையையும் சமைத்திருப்பதாய் வரலாறு கூறுகின்றதாய்க் கேள்விப் படுகின்றேன்.
//திருவடி வணக்கம் என்றால் அது வைணவம் மட்டும் தானா?
திருவடி வணக்கம் ஒன்றினாலேயே பல்லவன் வைணவனாக மாறினான் என்பது ஆய்வா இல்லை உங்கள் துணிபா?//
ஹிஹிஹி, நல்ல கதையா இருக்கே??? சந்தடி சாக்கிலே திருவடி வணக்கம் வைணவத்துக்கே உரியதுனு சொல்லப் பார்க்கிறீங்களோ?? அதெல்லாம் விட மாட்டோமே?? சும்மா மன்னனின் பெருமையைக் குறிப்பிடவும், அவன் விஷ்ணு ஒருவரையே கடவுளாய் வணங்க ஆரம்பித்துவிட்டான், திருமங்கை ஆழ்வாரால் என்பதினாலேயும் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம். இந்தத் திருமங்கையின் வேடுபறி உற்சவம் முந்தாநாள் "பொதிகை"த் தொலைக்காட்சியில் வேளுக்குடி கீதை சொற்பொழிவின்போது காட்டினாங்க பாருங்க, அசந்துட்டேன், காண இரு கண்களும் போதவில்லை. எழுதணும், அதைப் பத்தியும், அற்புதமான புரவி ஓட்டம்!! அம்மா!! என்ன வேகம், என்ன வேகம்! தொலைக்காட்சியிலிருந்தே வெளியே வந்துடுமோனு தோணித்து!
//குலசேகராழ்வார் காலகட்டம் வேறு!
திருமங்கை காலகட்டம் வேறு! திருமங்கை காலத்தால் பிந்தியவர்!//
ஹிஹிஹி, அ.வ.சி. ஒருவேளை இது என்னுடைய தவறாய் இருக்கலாம், குலசேகர ஆழ்வார் இல்லையோனு நினைக்கிறேன், எதுக்கும் சரி பார்த்துட்டு இந்தக் கேள்விக்கு பதில்! இன்னும் அந்த "ஊரிலேன் காணி இல்லை!" க்கு நீங்க தொண்டரடிப் பொடிதான்னு சொன்னதே சந்தேகமா இருக்கு! ஆகவே வெயிட்டீஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!
//ஏன் போனது கீதாம்மா?
தமிழில் பாசுரங்கள் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஏதாச்சும் தடுத்தார்களா என்ன? அதனால் சண்டை மூண்டு, தனியாக அவர்கள் கைக்குப் போய் விட்டதா என்ன?
அடுத்த பதிவுக்கு வெயிட்டீங்க்ஸ் ஆப் அம்பத்தூர் :)))///
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., அது என்ன தீட்சிதர்கள் தான் எப்போவும் சண்டை போட்டுத் தடுப்பாங்களா என்ன??? அக்கிரமமா இல்லை? :P :P :P அடுத்த பதிவு எழுதறேன் இன்னிக்கே பாருங்க, அப்போ தெரியும் என்னன்னு! ஓகே?? :P :P :P
//இரண்டிலுமே பெருமாள் பரிவார தேவதை தான்! அவருக்குத் தனியாக விழா எல்லாம் எடுக்க மாட்டார்கள்! வெறுமனே அன்றாடப் பூசை தான்! இதற்காக யாரும் வரிந்து கட்டுவது எல்லாம் கிடையாது! ஒற்றுமையாகவே இருக்கின்றனர்!///
இது!!!!! இது!!!!!! இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்!!!! சிதம்பரம் கோயிலிலும் இப்படி ஒற்றுமையாகத் தான் இருந்து வந்திருக்கின்றனர். இப்போ பெருமாளுக்குத் தனியா "பிரமோற்சவம்" பண்ணியே ஆகணும்னு கிளப்பி விடுவது யார்?? கொஞ்சம் யோசிக்க வேண்டாம்??? எல்லாப் பழியையும் தீட்சிதர்கள் தலையிலேயே போடறது என்னமோ ரொம்ப வசதி தான். ஏனெனில் அவங்க சில விஷயங்களில் இன்னும் மாறுதலுக்கு உட்படுவதில்லை, பழைய சம்பிரதாயங்களையே கடைப்பிடிக்க வற்புறுத்திக் கொண்டிருப்பதால், சொல்வது சுலபமே!!!
//ரங்கராஜ நம்பி, படமா ஐயா அது எடுத்திருக்கீங்க?? பொய்யெல்லாம் சொல்லிட்டு, அதை நிலை நாட்டப் படமும் எடுத்துட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
கமலுக்கே கர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆ?
:)
Kamal Hassan & his Naked Lies-ன்னு பதிவு போட்டேனே! படிக்கலையா?
http://madhavipanthal.blogspot.com/2008/05/kamal-haasan-his-naked-lies.html
கோவிந்தராசர் சிலையைக் கடலில் தூக்கி வீசியது=உண்மை
ரங்கராஜ நம்பி=கற்பனைப் பாத்திரம்
கீதா சாம்பசிவம் said...
//அதற்கு முன் கோவிந்தராசர் எங்கு இருந்தார்? தனிச் சன்னிதி இல்லையா? இல்லை கோவிந்தராசரே அங்கு இல்லையா? :)//
//கோவிந்தராஜரே அங்கு இல்லை, இதைப் பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கேன், கவனிச்சுப் படிக்கணுமோ?? :P :P :P//
மாட்டினீங்களா?
கோவிந்தராசர் தில்லையில் அம்பலவாணர் தோன்றிய காலத்தில் இருந்து இருக்காரு! தனிச் சன்னிதி தான் இல்லை!
அம்பலவாணர் நடனத்தை முதலில் கண்டதே கோவிந்தராசர் தான்!
அது தான் பதஞ்சலி வருவதற்கே வழி வகுத்தது!
இதை உங்க முந்தைய பதிவுகளில் நீங்களே சொல்லி இருக்கீங்க! எதுக்கும் இன்னொரு தபா உங்க பதிவை நீங்களே போயி படிச்சிட்டு வாங்க! :)
இதுக்கு I want a direct answer!
//பின்னால் வந்த நந்திவர்ம பல்லவனே, பெருமாளுக்கும் இடம் தேடிக் கொடுத்திருக்கின்றான்//
திருமங்கை பேச்சைக் கேட்டுப் பல்லவன் தனிக் கோயில் சமைத்தான் என்றால்....
திருமங்கைக்கு முந்தைய காலத்தவர்-குலசேகராழ்வார் எப்படி திருச்சித்ரகூடம் என்று பாடினார்?
ஓடாமல், ஒளியாமல், இதுக்கு நேரடிப் பதில் தாங்க பார்க்கலாம்! :)
//ஹிஹிஹி, நல்ல கதையா இருக்கே??? சந்தடி சாக்கிலே திருவடி வணக்கம் வைணவத்துக்கே உரியதுனு சொல்லப் பார்க்கிறீங்களோ?? அதெல்லாம் விட மாட்டோமே??//
நாங்க அப்படிச் சொல்லலையே!
நீங்க தான் கல்வெட்டில், திருவடியை வணங்குகிறேன்-ன்னு மன்னன் சொன்னதை வச்சிக்கிட்டு, மன்னன் "வைணவன்" என்று முத்திரை குத்தப் பார்த்தீங்க! அது இப்போ உங்களையே குத்திரிச்சி! :)
சொ.செ.சூ :)))
//இப்போ பெருமாளுக்குத் தனியா "பிரமோற்சவம்" பண்ணியே ஆகணும்னு//
தேவையில்லை!
திருச்சித்ரகூடத்தில் பெருமாளுக்குத் தனியா "பிரமோற்சவம்" தேவையே இல்லை!
அங்கு பெருமாள் பரிவார தேவதை தான்! இதைப் பெருமாள் அறிவார்! அடியோங்களும் அறிவோம்!
அறிபவர் அறிய வேண்டும்!
//திருமங்கையின் வேடுபறி உற்சவம் முந்தாநாள் "பொதிகை"த் தொலைக்காட்சியில் வேளுக்குடி கீதை சொற்பொழிவின்போது காட்டினாங்க பாருங்க, அசந்துட்டேன், காண இரு கண்களும் போதவில்லை. எழுதணும், அதைப் பத்தியும், அற்புதமான புரவி ஓட்டம்!! அம்மா!! என்ன வேகம், என்ன வேகம்! தொலைக்காட்சியிலிருந்தே வெளியே வந்துடுமோனு தோணித்து//
ஹிஹி
எழுதுங்க கீதாம்மா, எழுதுங்க!
உங்க பதிவு போடும் வேகத்தை விடவா அந்தப் புரவி வேகம்?
அரங்கனும் திருமங்கையும் ஜாயின்ட்டா ஆடும் வேடுபறி சூப்பரா இருக்கும்! குதிரை 360 degree திரும்பும்! அசைபடம் வேணும்னாச் சொல்லுங்க, அனுப்பி வைக்கிறேன்!
//ஹிஹிஹி, அ.வ.சி. ஒருவேளை இது என்னுடைய தவறாய் இருக்கலாம், குலசேகர ஆழ்வார் இல்லையோனு நினைக்கிறேன்//
என்ன ஹிஹிஹி?
அது குலசேகராழ்வாரே தான்!
திருமங்கைக்கும் முந்தையவர்!
அவரு தான் திருச்சித்ர கூடம்-னு பாடுபவர்!
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒருமூவா யிரவர் ஏத்த
அணிமணி ஆசனத்திருந்த வம்மான் றானே
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
.....
கோழியர்கோன் குடைக்"குலசே கரன்" சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்....
போதுமா? :)
//இன்னும் அந்த "ஊரிலேன் காணி இல்லை!" க்கு நீங்க தொண்டரடிப் பொடிதான்னு சொன்னதே சந்தேகமா இருக்கு! //
அடப்பாவமே!
சந்தேகப் பேய் பிடிச்சி ஆட்டுது போல! என்ன ஆச்சு கீதாம்மா? அடியேன் புதுசா ஏதும் பாசுரம் சொல்லலையே! ஊரிலேன் காணியில்லை - தொண்டரடிப்பொடியின் திருமாலை-ன்னு தானே சொன்னேன்!
http://tamilnation.org/sathyam/east/pirapantam/mp005b.htm
குமரன், இங்கு வருக!
ராகவன், இங்கு வருக!
ஜீவா, இங்கு வருக!
ஷைலஜா, இங்கு வருக!
மெளலி, இங்கு வருக!
அம்பி,
இங்கு வந்து கீதாம்மா ஐயம் தீர்க்க! :)
இந்த ஆட்டைக்கு நான் வரலை.
கீதா....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னாலும்
பரவாயில்லை. எனக்கு எம்மதமும்
சம்மதம்!!
Post a Comment