மூலவர் ஆதிநாதப் பெருமான் என்ற பெயரிலும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்றார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. (நம்ம வல்லி சிம்ஹன் நினைவுக்கு வராங்களா? இது அவங்க ஊரே தான்! :D) கோவிந்த விமானத்தின் கீழே கிழக்கே பார்த்துக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கே மூன்று மைலில் இருக்கும் இந்த ஊருக்கெனத் தனியான ரயில்வே நிலையம் உள்ளது. இங்கே மார்கழியில் அத்யயன உற்சவத்தின் போது நம்மாழ்வாருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் நடை பெறும். மேலும் நம்மாழ்வார் இங்கே தனிச்சன்னதி கொண்டும் விளங்குகின்றார். மார்கழி ராப்பத்து உற்சவத்தின்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் காதாரக் கேட்கும் எம்பிரான் நம்மாழ்வாருடன் ஒரே மண்டபத்திலே எழுந்தருளுகின்றார் எனச் சொல்கின்றனர். பத்தாம் நாள் பத்து அன்று “முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா” என்ற பாசுரம் வரும் என்கின்றனர். அப்போது நம்மாழ்வாரை மெதுவே எழுந்தருளச் செய்து பெருமமளின் பாதாரவிந்தங்களிலே நம்மாழ்வாரின் தலை படும்படியாகச் சமர்ப்பிக்கின்றனர்.
பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கிடக்கும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து, நம்மாழ்வாருக்கு முக்தி கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் சந்தோஷம் கொண்டாலும், மறுபக்கம் நம்மாழ்வாரைத் திரும்பத் தரும்படியும் வேண்டுவார்களாம். அப்போது சுவாமியும் நம்மாழ்வாரைத் "தந்தோம், தந்தோம், தந்தோம், சடகோபனைத் தந்தோம், நம் ஆழ்வானைத் தந்தோம்”, என்று சொல்லி பக்தர்களுக்கு அருள் புரிவார் என்று சொல்லுகின்றனர். ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும். கூட்டத்தை நினைச்சால் பயமா இருக்கு.
இது தவிர, வைகாசி உற்சவத்தின்போது திருக்குருகூரைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எட்டுத் திருப்பதிகளில் இருந்தும் பெருமாள் இங்கே வந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கேட்க வருகின்றனர். நம்மாழ்வாரே முகமன் கூறி அவர்களை வரவேற்பதாக நம்மாழ்வாரின் உற்சவர் சென்று வரவேற்பு அளிக்கும் ஐதீகம் நடை பெறுகிறது. நம்மாவாரின் சந்நதியிலேயே பெருமாள்கள் அத்தனை பேரும் பாசுரங்களுக்காகக் காத்துக்கிடக்கும் அதிசயமும் நடக்கிறது. மதியம் திருமஞ்சனம் முடிந்து இரவு கருட சேவையில் ஒவ்வொரு பெருமாளும் வரிசையாக ஆழ்வாரின் சன்னதியைத் திறந்து கொண்டு வெளியே வருவார்கள். ஆஹா, நினைச்சுப் பார்த்தாலே பார்க்கணும்போல இருக்கு. இதெல்லாம் சொல்லித் தான் கேட்க முடிஞ்சது. ஒன்பது திருப்பதிகளின் பெருமாள்களும் வீதிவலம் வருவார்கள் நம்மாழ்வாரோடு. மதுரகவி ஆழ்வாரும் வீதி வலம் வருவார் என்றார்கள். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பும் ஊர்வலம் மறுநாள் விடியற்காலை ஐந்து, ஆறு மணி வரை நடைபெற்றுப் பின்னர் திருக்குருகூர் கோயிலின் மங்களாசாசன மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள். ஆழ்வார் ஒரு பல்லக்கில் இருப்பார். அப்போது ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்த அந்தப் பெருமாள் மீது பாடிய பாசுரங்கள் இசைக்கப் பட்டு பெருமாளுக்கு நம்மாழ்வார் விடை கொடுத்து அனுப்பும் காட்சி நடை பெறும். பாடலைப் பெற்றுக் கொண்டு பரமானந்தத்துடன் எல்லாப் பெருமாள்களும் தத்தம் இருப்பிடம் சென்றடைவார்களாம். கண்கொள்ளாக் காட்சி என்கின்றனர்.
நம்மாழ்வார் செய்த தவம் தான் என்னே! இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.
டிஸ்கி: இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு நன்றி திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். இத்துடன் நவதிருப்பதிகள் முடிந்தன. நவ கைலாயங்கள் அடுத்து ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.
16 comments:
தொடருங்கள் கீதாம்மா, எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
தொடருங்கள் கீதாம்மா, எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
பதிவிற்கு நன்றி.
ஆனால் ஒரு சிறிய விஷயம்.
ஊர் பெயரே எழுத வில்லை. மூன்றாம் பாரா வில் தான் மற்ற எட்டு இடங்களைக் காட்டிலும் திருக்குருகூர் எனத் தெரிய வருகிறது.
நீங்கள் போயருக்கீறேர்கள் எனவே உங்களுக்கு தெரியும், புதியதாய் படிக்கும் ஒரு வாசகருக்கு எப்படி ஊர் பெயர் தெரியும்.
நவ கயிலாயம் பதிவில் ஊர் பெயரை முதளிழ்க் எழுதி, முடிந்தால் போகும் வழி கூட (அருகில் உள்ள ரயில், பேருந்து மார்க்கம்) எழுத வேண்டுகிறேன்.
இங்கே
ராம்ஜி யாஹூ, இதோ மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் ஆரம்பித்த பதிவு இன்று இந்தப் பதிவில் முடிந்துள்ளது. தொடராக வந்தமையால் ஊர் பெயரைக் குறிப்பிடவில்லை. மன்னிக்கவும். நீங்கள் இந்த ஒரு பதிவை மட்டும் படிச்சதனால் குழப்பமோ?? :( எப்படி இருந்தாலும் மீண்டும் மன்னிக்கவும். கவனத்தில் கொள்கிறேன். நன்றிப்பா.
கைலாஷி ஐயா, வாருங்கள், உங்கள் ஆதரவுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.
கீதம்மா,
ஆஹா பரமானந்தம்.... படிக்கும் போதே நானும் நவ திருப்பதி சென்று எம்பெருமானை சேவித்த உணர்வு. உங்களால் இந்த பாக்கியம் பெற்றேன். இனியும் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம்.
எல்லாம் வல்ல இறை அருள் புரிய வேண்டுகிறேன்.
Has it come to an end so soon? I wish you had continued to write about all 108 Mrs Shivam . Achcha !! Mrs simhan is from nellai district as well? Nice to know:))
Looking forward to read about Vaitheeswaran, Annamalaiyan and Mallikarjuna swami.:))
* நம்மாழ்வாருக்காகக் காத்துக் கிடக்கும் பெருமாள்(கள்) என்று சொல்லியமைக்கும்,
* தமிழ்ப் பாசுரங்களை அர்ச்சகர்களே கருவறையில் ஓதுகிறார்கள் என்றமைக்கும்,
* அப்பாசுரங்களைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் தான் திரும்பத் தங்கள் தங்கள் ஊர் செல்லவே அந்தந்தப் பெருமாள்(கள்) எத்தனிக்கிறார்கள் என்றும் காட்டி அருளியமைக்கு நன்றி கீதாம்மா!
நலமாய் இருக்கிறீர்களா அம்மா?
//இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.//
இதுதானே நம் இந்திய ஆன்மீகத்தன் அடித்தளம்.
அற்புதமான பயணத்தில் என்னையும் கூடவே அழைத்துச் சென்றீர்கள்.
நன்றி. நன்றி. நன்றி அம்மா.
sivasubramaninan, many many thanks.
Jeyasri, will continue Navakailayam in a few days. Thank You.
Thank You KRS
+Ve Anthony, what a pleasant surprise??? Thank You. Very happy to see your comments here.
unkal katturai miga arumai geetha madam
இந்த ஆன்மீக பயண கட்டுரை ரொம்ப நல்லாருக்கு. நான் ஆழ்வார் திரு நகரி போய் இருக்கின்றேன். மற்ற ஸ்தலங்களுக்கு இனிதான் போக வேண்டும். எங்களுக்கு வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் தான் ஆச்சார்யன். அங்கும் சென்று ஆச்சார்யரின் பாததூளி தரிசித்து இருக்கின்றேன். அங்கு உள்ள அழகிய மணவாளனும் ஸ்ரீவரமங்கை நாச்சியாரும் நல்ல அழகு.
தங்கள் பதிவிற்கு நன்றி.
Post a Comment