எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, October 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 3

அடுத்து கோடகநல்லூர். இதுக்குத் தான் முதல்லே போனோம். நாங்க போனபோது காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அபிஷேஹம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்தியம் காட்டி தீப ஆராதனைகளும் பார்க்க முடிந்தது. தீப ஆராதனையின் போது அங்கே நின்றிருந்த ஓதுவார் நன்றாகப் பாடினார். கோயிலுக்கென நியமிக்கப் பட்ட ஓதுவார் அவர். பரம்பரையா என்னனு கேட்டுக்கலை. மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்தார். கோயில் சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏழைக் கோயில் தான். சேரன்மஹாதேவிக்குச் செல்லும்வழியிலேயே இருக்கிறது. நாங்க வாடகைக் காரில் போனதால் போக முடிந்தது. இந்தக் கோயிலுக்கு அதிகம் பேருந்து வசதி இல்லை. நடுக்கல்லூர் என்னும் ஊருக்கு அருகே நடுவழியில் இறக்கிவிட்டுடுவாங்க. அங்கிருந்து இந்த ஊருக்கு நடந்தே வரணும். அர்ச்சகர் இந்த ஊர்க்காரர். ஓதுவாரும் இதே ஊர். அதனால் வழிபாடுகள் நேரத்துக்கு நடக்கிறது. அரசின் கவனம் திரும்பினால் இன்னும் கொஞ்சம் வசதியாய் இருக்கும்னு குருக்களும், ஓதுவாரும் சொன்னார்கள். இனி கோயில் வரலாற்றைப் பார்ப்போம்.

நவ கைலாயக் கோயில்களிலேயே இந்தக் கோயிலின் மூர்த்திதான் மிகப் பெரிய திருவுருவம் கொண்டவர். இவருக்குக் கட்ட குறைந்த பட்சமாக எட்டு வேட்டிகளாவது தேவைப்படும் எனச் சொன்னார்கள். அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் வழிபட்ட தலம் இது என்பதால் செவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலமும் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருந்தான். ஒரு நாள் காட்டில் விறகு பொறுக்க மகன் காட்டினுள் செல்ல, அங்கே ஒரு ராஜகுமாரன் வந்தான். அவனுக்கு முனிவரைப் பார்த்ததும் தன் ராஜ்யத்தை விஸ்தரிக்க என்ன செய்யலாம்?? ஏதானும் யாகம் செய்யலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆகவே முனிவரை எழுப்பிக் கேட்டான். ஆனால் பரிபூரண நிஷ்டையில் இருந்த அந்த முனிவரோ எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. கோபம் வந்த ராஜகுமாரன் ஒரு செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டுவிட்டுப் போய் விட்டான். பாம்பு கழுத்தில் போடப் பட்டது கூடத் தெரியாமல் முனிவரோ நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

முனிகுமாரன் திரும்பி வந்து பார்த்தபோது தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைக் கண்டான். யார் செய்தது என்பதும் தெரிய வந்தது. உடனேயே அரண்மனைக்குச் சென்று ராஜகுமாரனிடம் உன் தந்தை ஒரு பாம்பினாலேயே இறப்பார் என்ரு சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான். பயம் அடைந்த ராஜா தன் விதி என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துத் தன் ஜாதகத்தைப் பார்க்க, சர்ப்ப தோஷம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே பாம்பிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய அரசன் ஒரு மறைவிடத்தில் சென்று ஒளிந்து வசிக்கலானான். எறும்பு கூடப் புகமுடியாதபடிக்குக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் வசித்த அரசன் ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டான். மாம்பழத்தில் இருந்த சிறு புழு ஒன்று பழத்திலிருந்து வெளிப்பட்டு பாம்பாக மாறி அரசனைத் தீண்டியது. அரசன் இறந்து போனான். தப்பு செய்த ராஜகுமாரனை விட்டுவிட்டு அரசனைத் தீண்டிய பாம்புக்குத் தோஷம் பீடிக்க அது தியானம் மூலம் பரம்பொருளைத் துதிப்போம் எனத் துதிக்க ஆரம்பித்தது. மஹாவிஷ்ணு அந்தப் பாம்பிடம் சிவபெருமானை வழிபடச் சொல்ல, அதுவும் மனமுருகிப் பிரார்த்திக்க கைலைமலை வாசனும் பாம்பிற்கு முக்தி கொடுத்தார். பரிக்ஷித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்புக்கும் இங்கே முக்தி கிடைத்ததால் கோடகநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். இங்கே இப்போவும் கருநாகங்கள் அதிகம் உலாவும் எனவும் சொல்லுகின்றனர்.

இங்கே அம்பாள் பெயர் சிவகாமி அம்மன். இவளைத் தவிர அநந்த கெளரி என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அம்மனும் இருக்கிறாள். இவளைச் சர்ப்பயட்சி என்றும் நாகாம்பிகை என்றும் சொல்கின்றனர். ஈசனுக்குத் துவரம்பருப்பு நைவேத்யம் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சிவப்பு வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நந்திக்குத் தாலி கட்டும் அதிசய வழக்கமும் இங்கே உண்டு. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கே 58 விரலி மஞ்சளால் கோர்க்கப் பட்ட தாலியை நந்தியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கின்றனர். இப்படிச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரி, திருவாதிரை, போன்றநாட்களில் உற்சவம் உண்டு. மற்றபடி கொடிமரமோ, பலிபீடமோ, பரிவார மூர்த்திகளோ இந்தக் கோயிலில் காணமுடியாது.

16 comments:

prabakar.l.n said...

அன்புள்ள கீதா அம்மாவிற்கு உங்களுடைய தாமிரபரநிகரையில் கட்டுரைகள் மிக நன்றாக வந்துள்ளது . திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோயில் களின் சிறப்பை சொல்ல ஒரு வலைத்தளம் இல்லையே என்ற ஏக்கம் நிறைவடைந்தது . வளர்க உமது எழுது பணி . தாங்கள் மேலும் பல சிவாலயங்களை சென்று தரிசித்து அவற்றின் பெருமைகளையும் சுவை பட எடுத்து உரைக்க எல்லா வல்ல மகாலிங்க மூர்த்தியை பிரார்த்திக்கிறேன் . நன்றி வணக்கம் அடியார்க்கும் அடியேன் பிரபாகரன்
www.sathuragirisundaramahalingam.blogspot.com, www.santhanamahalingam.blogspot.com

Jayashree said...

அச்சா!! ஆரம்பிச்சுடுத்தே,திரும்பிவரத்துக்குள்ள!! ஆ!! திருநெல்வேலி, பத்தமடை, அம்பாஸமுத்ரம்.பாபநாசம் சேரமாதேவி , சுரண்டை, கல்லடைகுறிச்சி,கடயம் எல்லாம் என்னை NOSTALGIC ஆக்கறதே.அகஸ்தியர் அறுவி, பாண தீர்தம் கல்யாணி தீர்தம் போஹ நேரம் இல்லயா? அம்பாசமுத்ரம் அழகு தானே மிசஸ் சிவம். காத்துல வெல்வட் மாதிரி அலை அலையா அசையற நெல் செடி பட்டு மாதிரி இருக்கும். ஒருபக்கம் வயக்காட்டு அருமை, மருபக்கம் மூடீஸ், ஆனைமலை அருமை>. கல்லடைகுருச்சி அப்பளாம். ம்ம்! மரச்சீனி அப்பளாம் சாப்பிட்டு இருக்கேளா? கரையும்! எவ்வளவு நாளாச்சு போய்!! படிக்கறச்சே உணரமுடியறது!! அந்த வயக்காட்டு வாசனை, அருவி சத்தம் சிவன் கோவில் மணி, சாயந்திரம் ஆளரவம் இல்லாம, த்வஜஸ்தம்பதிலேந்து பாத்தா உள்ள சின்ன ஒத்தை விளக்குல ஒத்தை வேஷ்டியொட சிம்ப்லா தெரியற சிவம். கண்ணை நனைக்கும் மனசுக்கு அருமை. தென்காசியும் உண்டா?Mr Ambikku தூத்துக்குடி மேல கடுப்பு?

ambi said...

@ஜெயஷ்ரி அக்கா, அடடா, எங்கூர் அழகை சொன்னதுக்கே அரைகிலோ அல்வாவை உங்க வாயில போடலாம். :))

திருச்செந்தூர் கோவிலில் ரொம்பவே காசு காசுன்னு அலையறாங்க. உங்க பக்கத்துல ஒருத்தர் வந்து நிப்பார். அபிஷேக பால் இந்தாங்க!னு குடுப்பார். உடனே பக்தி பரவசமா முருகா! என்னே உன் கருணை!னு வாங்கி அருந்தினா "ம்ம் எடுங்க பத்து ரூபாய்"னு உரிமையா கேப்பாரு. இப்படி பல ஆப்புகள் அங்க. :((

சிறப்பு தரிசனத்துக்கு திடீர்னு 200 ரூ ஆக்கி விட்டதா செய்தி பார்த்தேன்.

ambi said...

அடுத்த தடவை அல்லது எப்போ கல்லிடை போவேனோ அப்ப கோடக நல்லூர் போக முடியுமா?னு பாக்கறேன். :))

எல்லா கோவிலுக்கும் கரக்க்ட்டா பிரசாதம் தர நேரத்துக்கு டாண்னு போயிட்டீங்க போலிருக்கே! :p

Jayashree said...

ஓ MR AMBIKKU அதான் தூத்துக்குடி மேல வருத்தமா?ஒவொருத்தருக்கும் ஒவொரு அனுபவம். போனதடவை பொங்கல் அன்னிக்கு எங்களுக்கு சுப்ரமண்யஸ்வாமி தரிசனம் எழுதியிருந்தது. அமோஹமா தடபுடல் ஆ பரிவட்டம் மாலை எல்லாம் போட்டு சாயந்திரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரத்தி நு அமர்களமா!! ஏன்னு தெரியாமலேயே:))வேற யாரோனு நினைசிண்டுட்டாளோன்னு கூட இருந்தது. பண்ணி வைச்சவர் ஒரு காசும் கேக்கலை!! அன்பா பண்ணினார் ஒரு ஏழை ப்ராமண்ர். SINCERITY தெரிஞ்சது. HUBBY என்னிக்குமே தாராளம். அன்னிக்கும் தா...ர...ளம்!அதுவும் இவர் மனசு உவந்து கொடுத்ததுதான். ஆனா அது கடைசிலதான். கூட கூட்டிண்டு போன டாக்டர் அண்ணா கூட என்ன மாப்பிள்ளைக்கு இப்படி அன்பு காமிக்கற்து ஸ்வாமின்னார்.கொடுக்கவும் செய்வான் அடிக்கவும் செய்வான் என் மணியன். அதுனால இதுக்கு தகுதியா நடந்துக்கணுமே ஸ்வாமினு வேண்டிண்டேன். ஆனா திருப்பதில மட்டும் என் அப்பன் நாராயணன் என் எல்லா கசடுகளையும், கோபம், தாபம் எரிச்சல், நீ இப்படி பண்ணற, அப்படி பண்ணறனு நான் குத்தப்பத்திரிக்கை ஒப்பிச்சு என்னை போரும்டா சாமினு சொல்லவைச்சு அழவைசுதான் அந்த படி தாண்டி தரிசன்ம் தருவான்:)) இப்பல்லாம் ரெண்டும் ஒண்ணா தான் தெரியறது

Jayashree said...

மிஸஸ் சிவம், அம்பிக்கு தெரியல ப்ரசாதம் எழுதிருக்கறவாளுக்கு தான் கிடைக்கும்னு :)) நாமளா பாத்து போக முடியாதும்மா கோந்தை!!:))னு சொல்லுங்கோ

கீதா சாம்பசிவம் said...

வாங்க பிரபாகரன், முதல் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கீதா சாம்பசிவம் said...

வாங்க ஜெயஸ்ரீ, கொஞ்சம் தாமதம் ஆரம்பிக்கிறதிலே,
அப்புறம் அம்பிக்கு என்ன மிஸ்டர் எல்லாம்??
அம்மாஞ்சி அம்பிக்கு மிஸ்டரா?? நேரம் தான்! :P:P:P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

//கல்லடைகுருச்சி அப்பளாம். ம்ம்! மரச்சீனி அப்பளாம் சாப்பிட்டு இருக்கேளா? கரையும்! //

ஹிஹிஹி, கல்லிடைக்குறிச்சி தொந்திவிளாகம் தெருவிலே மட்டும் அப்பளாம் வாங்கவே கூடாது, செரியா??? மத்த இடத்திலே வாங்கலாம். கல்லிடைக்குறிச்சி வேண்டாம். முன்னேல்லாம் ஆனையடி அப்பளாம்னு ஒண்ணு இட்டுக் கொடுப்பாங்க பாருங்க, அந்த டேஸ்ட் இப்போ இல்லை! :( மரச்சீனி அப்பளாம், எங்கம்மா ஆத்திலேயே இடுவா! மிளகாய் அதிகம் சேர்க்காமல்! :))))))

கீதா சாம்பசிவம் said...

//அரைகிலோ அல்வாவை உங்க வாயில போடலாம். :))//

அம்பி ஜெயஸ்ரீக்குப் பதில் சொல்லி இருக்கேன் பாருங்க, எங்கே போனாலும் தொந்திவிளாகம் தெரு மட்டும் வேணாம்னு சொல்லிட்டேனே. அல்வா உங்களுக்கு நான் கொடுத்துட்டேன்! :P:P:P

கீதா சாம்பசிவம் said...

//எல்லா கோவிலுக்கும் கரக்க்ட்டா பிரசாதம் தர நேரத்துக்கு டாண்னு போயிட்டீங்க போலிருக்கே! :p//

புகை விடாதீங்க, உங்க தின்னேலியிலே சாப்பாடுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு யாருக்குத் தெரியும்? அதான் கோவில் பிரசாதமாவது சாப்பிடலாமேனு! :P:P:P

என்ன இருந்தாலும் ஸ்ரீவைகுண்டத்திலே கோஷ்டியிலே சாப்பிட்ட தேங்காய் சாதம் டேஸ்டே தனிதான்! மதுரை வடக்கு கிருஷ்ணன் கோயில் பிரசாதமாட்டாமா? மதுரையிலே கரெக்டா கோஷ்டி நேரத்துக்குப் போய் நின்னுட மாட்டோம்??? சுடச் சுடக் கிடைக்கும். :)))))))))

கீதா சாம்பசிவம் said...

//திருப்பதில மட்டும் என் அப்பன் நாராயணன் என் எல்லா கசடுகளையும், கோபம், தாபம் எரிச்சல், நீ இப்படி பண்ணற, அப்படி பண்ணறனு நான் குத்தப்பத்திரிக்கை ஒப்பிச்சு என்னை போரும்டா சாமினு சொல்லவைச்சு அழவைசுதான் அந்த படி தாண்டி தரிசன்ம் தருவான்:))//

திருப்பதிலே இப்போவும் அப்படித் தான்! :((((

கீதா சாம்பசிவம் said...

//நாமளா பாத்து போக முடியாதும்மா கோந்தை!!:))னு சொல்லுங்கோ//

என்னது???????? அம்பியைப் பார்த்து நான், "கோந்தை"னு சொல்லணுமா??? நல்லா இருக்கே கதை! :))))))))))))

Jayashree said...

ஹா ஹா!! தொந்தி வளாகம் Mr அம்பி வளாகமா? "அல்வா கொடுத்துட்டேனே " யோட அர்த்தம் அதுவா?ஆனைஅடி சுமாரா இருக்கும் ரொம்ப எண்ணெய் குடிக்கும் இல்லை?அதுசரி!! என்ன... இந்த வஸ்த்ரகலா புடவை...னு பாக்க போனா!! Boy!! அது என்ன 15-20000 ரூபா போட்டுஇருக்கு ! என்ன MRS SHIVAM !! ஸ்வாமி''' இது அண்டம் பிண்டத்துக்கு அழறது லிங்கம் பஞ்சாமிதர்துக்கு அழறது கதையாய் ஆயிடுத்து:))) அம்பி
அம்மாஞ்சிமன்னி கிட்டந்து தப்பிக்க முதுகுல டின் கட்டிக்க வேண்டியதுதான்.

கீதா சாம்பசிவம் said...

நீங்க வேறே ஜெயஸ்ரீ, ஒரு குறிப்பைச் சரிபார்க்க வந்தேனா? உங்க பின்னூட்டம் கிடைச்சதோ! :D
அம்பி எனக்கு ஏகப்பட்டது ட்யூவாக்கும்.
அம்பியோட கல்யாணத்துக்கு ரிவெர்சிபிள் புடைவை, போனாப் போறதுனு 5,000ரூ போறும்னுட்டேன்.
தலைதீபாவளி ட்யூ நகாசு,
போன வருஷத்துது பரம்பரா பட்டு,
இந்த வருஷத்துக்கு வஸ்த்ரகலா. இத்தனையும் முதல்லே கொடுக்கட்டும், அப்புறம் பேசட்டும் கல்லிடைக்குறிச்சியையும், அல்வாவையும் பத்தி! :))))))))))

Jayashree said...

HA! HA!
JE !! Dear oh God! :))