எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 14, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மட்டையடித் திருவிழா, ப்ரணய கலஹம், தொடர்ச்சி!


உறையூரா?? அது எங்கே இருக்கு?  பெருமாள் கேட்கிறார். :)))

பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளி, திருவீதிகள் எல்லாம் வலம் வந்து, தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படிப் பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்கிறீர்கள்; நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை;  காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்.  அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்.  ஆனால் ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம்.  அத்தைப் பரிஹாசப் ப்ரமாணமென்று சொன்னீர்கள்.  இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு, சற்றும் திருவுள்ளத்தில் இரக்கம் வராமல் கோபத்தாலே திருவுள்ளங் கலங்கித் திருமுக மண்டலங் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன கதி இருக்கிறது?  அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீ ரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ராகாரம்.

"அடி ரங்கா, இது என்ன? இவ்வளவு கோபமாக இருக்கின்றாயே?  நான் உற்சவத்திற்காகவன்றோ கிளம்பிப் போனேன்.  இங்கே திருவீதிகளில் வலம் வந்தேன்.  தேவதைகள் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  என்னைக் கண்டதும் ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.  அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து போய் உன்னை நேரில் கண்டு இவை எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற பெரிய மனோரதத்துடனே உன்னைக் காண வந்தேன்.  எவ்வளவு ஆவலுடன் வந்தேன் தெரியுமா?  ஆனால் நீயோ என்னை உள்ளே அழைக்காமல், எப்போதும் போல் என்னை அழைத்து உன் சேவார்த்திகளைச் செய்து மகிழாமல், நான் ஏதோ தவறுகள் செய்துவிட்டேன் என்கின்றாயே!  இது நியாயமா?  அடி, ரங்கா, உறையூரா?  அது எங்கே இருக்கிறது?  நான் அந்த ஊரைக் கண்ணாலே கண்டதுமில்லை. அந்தப் பெயரைக் காதாலே கேட்டதுமில்லை."

ஆனால் நான் சொன்னதை நீ எங்கே நம்பினாய்?? சத்தியம் இல்லை என நினைக்கிறாய். நினைத்தாய்! சரி, சத்தியம் செய்து தருகிறேன் என்று சொன்னால் அதைப் பரிஹாசம் என்கிறாயடி. இப்படி நான் எத்தனை சமாதானம் சொன்னாலும் காதில் கேட்டுக் கொள்ளாமல் உன் மனமும் இரங்காமல், இத்தனை கோபம் ஏதுக்கடி ரங்கா?  கோபத்தாலே உன் திருவுள்ளம் மட்டுமா கலங்கி உள்ளது? உன் அழகான திருமுகம் எவ்வளவு கறுத்துவிட்டது தெரியுமா?  அழகிய நீலோத்பலத்தை ஒத்த உன் திருக்கண்கள் செவ்வரியோடு சிவந்து காணப்படுகின்றதே. இப்படி நீயும் கோவித்துக் கொண்டாயானால் நான் யாரிடம் போவேன்?  அடி ரங்கா?  எனக்கு வேறு கதியும் உண்டோ? சரி, சரி, நீ இருக்கிறபடி இருந்து கொள்ளடி ரங்கா! அழகிய மணவாளன் என்ற பெயர் பெற்ற நான் இங்கே ஶ்ரீரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே உள்ளே அழைக்கப்படாமல், வெளியே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தால் அதனால் எனக்கு ஒன்றுமில்லை.  அந்த அவமானம் உனக்குத் தான். எனக்கு என்ன வந்தது? அடி ரங்கா ஆனாலும் என் மனம் கேட்கவில்லையே! இதோ, இந்தப் புஷ்பங்களை வாங்கிக் கொள், சற்றே நகர்ந்து கொள், என்னை உள்ளே அழைப்பாய்!"

இப்போது யாரோ போற்றிப் பாடும் குரல் கேட்கிறது.  ரங்கநாயகி உற்றுக் கேட்கிறாள்/  யாரது பாடுவது?  ஓ, சடகோபன் என்னும் நம்மாழ்வானா? என்ன பாடுகிறான்??

9 comments:

வல்லிசிம்ஹன் said...

உறையூரா /? அது எங்கே இருக்கிறது . நமக்கு ஒன்றும் தெரியாது.//
ஆமாம் ஸ்வாமி எங்களுக்கும் அழகிய மணவாளனைத் தெரியாது:)
பிரமாதம் கீதா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து போய் உன்னை நேரில் கண்டு இவை எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற பெரிய மனோரதத்துடனே உன்னைக் காண வந்தேன். எவ்வளவு ஆவலுடன் வந்தேன் தெரியுமா? ஆனால் நீயோ என்னை உள்ளே அழைக்காமல், எப்போதும் போல் என்னை அழைத்து உன் சேவார்த்திகளைச் செய்து மகிழாமல், நான் ஏதோ தவறுகள் செய்துவிட்டேன் என்கின்றாயே! இது நியாயமா? அடி, ரங்கா, உறையூரா? அது எங்கே இருக்கிறது? நான் அந்த ஊரைக் கண்ணாலே கண்டதுமில்லை. அந்தப் பெயரைக் காதாலே கேட்டதுமில்லை."//

ஆஹா பெருமாளே இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியுள்ளது அருமையோ அருமை.

பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வர்ணனையான சமாதானத்தை ரசித்தேன்...

ஸ்ரீராம். said...

என்ன சரளமாகப் பொய் வருகிறது பெருமாளுக்கு....!

ஸ்ரீராம். said...

T F

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, இந்த ஊர் சுத்திப் பெருமாளுக்கு எதுவுமே தெரியாது தான்! :)))

Geetha Sambasivam said...

வாங்க வைகோ சார், ரசித்தமைக்கு நன்றி.

Geetha Sambasivam said...

வாங்க டிடி, நன்றிங்க.

Geetha Sambasivam said...

வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி!