எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, March 19, 2007

சிதம்பர ரகசியம் -முன்னுரை

ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. ஆனால் அது ஒரு தொடராத் தான் வரும். ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதணும்னு இருக்கேன். அதற்காகவே இந்தப் பதிவுப் பக்கங்களை வேறு ஏதும் எழுதாமல் விட்டு வச்சிருக்கேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவ கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வேண்டும். ஆகவே சற்று நிதானமாய்த் தான் எழுத வேண்டும். பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

19 comments:

அபி அப்பா said...

கீதா மேடம்! நான் உங்களிடம் மிக ஆர்வமாக எதிர்பார்த்தது இந்த தொடர்தான். மிக்க மகிழ்ச்சி. எனக்கு,தங்கமணி, அபிபாப்பா மூவருக்கும் மிக மிக பிடித்த இடமே தெற்கு கோபுர நுழை வாசல்தான். இந்த தொடர் முழுவதும் நான் உங்க கூடவே வருவேன் என் குடுப்பத்தோட, ஆனா தாயார் சன்னதிக்கு வந்தவுடனே அன்னபூரனி மடபள்ளிக்கு போயிடும் - புளியோதரை சாப்பிட:-))

அபி அப்பா said...

//ஆனா தாயார் சன்னதிக்கு வந்தவுடனே அன்னபூரனி மடபள்ளிக்கு போயிடும் - புளியோதரை சாப்பிட:-//

அபிபாப்பா என்பது விட்டு போய்விட்டது!

மெளலி (மதுரையம்பதி) said...

நமசிவாய வாழ்க! நாத(ன்/தி??) தாழ் வாழ்க....

மற்ற பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். ஆமாம், இந்த தொடர் அமெரிக்கா போகு முன் முடியுமா?, இல்ல அங்க போயி தொடருமா?

dubukudisciple said...

geetha madam!!
kalakunga.. naan unga padivu ellathayum padichalum comment potathu illa adigama..
inime regulara ajar agiduven..
naanum varuven...ungaludun Thillaiyai kaana

jeevagv said...

நிதானமாய் எழுதுங்கள், பொருமையாக படிக்க காத்திருக்கிறோம்!

Geetha Sambasivam said...

அபி அப்பா, வாங்க, வாங்க, அதான் அபி அம்மா, அபி பாப்பா, டைகர் எல்லாரோடயும் வரச் சொன்னேனே? வாங்க கொஞ்சம் பொறுமையாத் தான் எழுதணும், இதிலே ப்ளாக்கர் வேறே சதி!!!!!!! ஹிஹிஹி, எல்லாம் எதிர்க்கட்சிக்காரங்க தான். சீக்கிரம் எழுத ஆரம்பிச்சுடுவேன்.

Geetha Sambasivam said...

அமெரிக்கா போயும் எழுதறப்பால தான் இருக்கும். ஆனால் அங்கு கிடைக்கும் நேரத்துக்குத் தகுந்தாற்போல் எழுதணும், மதுரையம்பதி. சீக்கிரம் எல்லாம் முடிக்கிற வழக்கம் நம்ம கிட்டே கிடையாதே? எல்லாம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்னு படிச்சுப் படிச்சு வந்த விளைவுன்னு நினைக்கிறேன். :))))))

Geetha Sambasivam said...

வாங்க, டுபுக்கு டிசைப்பிள், முதல் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி. நீங்க நான் எழுதறதையும் படிக்கிறதா இப்போத்தான் தெரியும். அம்பியோட பதிவுகளிலே என்னைப் பார்த்தும் கொஞ்சம் கூடக் காட்டிக்கவே இல்லையே? ஆச்சரியம் தான். அப்புறம் அம்பிக்கு அடிக்கடி சாப்பாடு போடாதீங்க! அவர் சமைத்து நீங்க சாப்பிடுங்க!!!!!! :)))))))))

Geetha Sambasivam said...

வாங்க ஜீவா, பொறுமையாத் தான் இருந்தாகணும், வேறே வழியே இல்லை. போஸ்ட் போடவும் முடியல்லை. ட்ராஃப்டா வைக்கவும் முடியலை. கொஞ்சம் பொறுத்துக்குங்க! :((((((((

hotcat said...

Om Namaha Shivaye! As usual Nalla interesting-a eluzthunga madam.

Shankar

dubukudisciple said...

enna geetha madam ippadi solliteenga.. edo ambi veetuku pakathula iruken appadingarthukaga ippadi ellam ninaika koodathu!!
naanum ungala mathiri sila pala padivugal potu iruken.adoda list:-
1) http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/2007/02/blog-post_25.html
2) http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/2006/12/blog-post_17.html
3) http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/2006/12/blog-post_12.html

Geetha Sambasivam said...

வாங்க ஹாட் கேட், முடிஞ்ச வரை எழுதறேன். சுவாரசியமா இருக்கா இல்லையான்னு நீங்க தான் சொல்லணும்.

Geetha Sambasivam said...

டுபுக்கு டிசைப்பிள், ஹிஹிஹி, நானும் பின்னூட்டம் கொடுக்கலியே தவிர, உங்களோட சில பல பதிவுகள் படிச்சிருக்கேன். ஹிஹிஹி, இரண்டு பேரும் அ.வ.சி. ஓக்கே? :))))))))

Rajkumar Pandian said...

மேடம்,
பத்ரிநாத், கேதார்நாத் பற்றி தேடிக்கொண்டிருந்த போது தற்செயலாக, உங்கள் பக்கம் வந்தேன். ஒரு பொக்கிஷமே இருக்கின்றது.நேற்று தான் சிதம்பரம் சென்று வந்தேன்.கடந்த 1.5மணி நேரமாக உங்கள் பதிவுகளைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.அற்புதம்.

மீண்டும் வருவேன்.
--rkp--

cheena (சீனா) said...

கீதா, தங்களுக்கு இது மாதிரி ஒரு மறு பக்கம் இருக்கும் என்பதே தெரியாமல் போய் விட்டது. ஆன்மீகப் பயணம் - ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துகள். முன்னுரையிலிருந்து பின்னூட்டங்களைத் தொடங்குகிறேன். பெரியவர்கள் எனக்கு சிதம்பரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எனது துணைவியார் சிதம்பரத்திலுள்ள புகழ் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவி. அனைத்து ரகசியங்களையும் தெரிந்து கொள்கிறேன்.

நன்றி கீதா

சிவமுருகன் said...

அட கீதா மேடம்,

சூப்பரா ஒரு தொடரா.... ஜமாய்ங்க.

Baskaran said...


Hallo Madam

ஓம் நமச்சிவாயா முடித்து விட்டேன்.தொடர்ந்து படிக்கலாம் என்று உள்ளேன். சிவபெருமான் எங்கு உள்ளார்.தேடி கொண்டு உள்ளேன்.

நன்றி

Geetha Sambasivam said...

தேடவே வேண்டாம். உங்களுக்குள்ளேயே இருக்கிறார்.

Baskaran said...

எனக்குள்ள குடல் மட்டும்தான் உள்ளது.