எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 09, 2007

சிதம்பர ரகசியம்- ஒரு யோசனை தேவை!

சிதம்பரம் பத்தி எழுதறதுக்கு முன்னே எல்லார் கிட்டேயும் ஒரு யோசனை கேட்கணும். சிலபேர் வெறும் சிதம்பர ரகசியத்தைப் பத்தி மட்டும் முன்னாலே எழுதிடுன்னு சொல்றாங்க. சிலர் விவரமா இன்னும் வ்யாக்ரபாதர் பத்தியும், பதஞ்சலி பத்தியும் எழுத முடியுமா? எது முதலில் வந்ததுன்னு?ம் கேட்கறாங்க. ஆகவே விவரமா எழுதலாமா? ச்ுருக்கமா எழுதலாமான்னு ஒரு யோசனை. ஆனால் கட்டாயம் கோவிலைச் சுத்தி இருக்கும் பரிவார தேவதைகளையும், அதோட "சித்சபை" என்னும் மூலஸ்தானத்தில் இருக்கும் நடராஜரோடும், சிதம்பர ரகசியத்தோடும் இணைந்திருக்கும் மற்ற கடவுள்கலைப் பற்றியும் கட்டாயம் எழுதினால் தான் தெரியும். ஆகவே அதை எழுதாமல் முடியாது. கொஞ்சம் கிரமாப் போனால் தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். ஆகவே உங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக் கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

அபி அப்பா said...

விரிவாக எழுதுவதே நல்லது. டபார்ன்னு போட்டு சிதம்பர ரகசியத்தை உடைத்து விடாமல் சித் சபையில் உள்ள அனைத்து விஷயங்கள் அதாவது கால பைரவர்- அதன் அஸ்டமி தின சாயரட்சை பூஜை உட்பட எல்லாத்தையும் எழுதினா தான் சுவையாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...
கீதாம்மா, சிதம்பர "ரகசிய"த்தைப் பற்றி ஊரையே கேட்டு எழுதறீங்களா? :-)

ரகசியம்-ன்னா என்ன, ஏன் அது ரக்சியம்ன்னு முதலில் சொல்லிட்டு, அப்புறம் பதஞ்சலி பற்றியும், கோவில் நாயன்மார்கள் பற்றிய சிறு குறிப்பும் தாருங்கள்!

தில்லை இறைவன், திருச்சித்ரகூடம் பெருமாள் பற்றியும் சொல்லுங்க.
முக்கியமா சிவ-பார்வதி நடனப் போட்டி பற்றியும் எழுதுங்க. "சபாஷ் சரியான போட்டி" என்று சினிமாவில் வருமே, அது போல!:-)

யு.எஸ் வந்தாச்சா? சாம்பசிவம் சார் எப்படி உள்ளார். வணக்கங்களைச் சொல்லவும்!

மெளலி (மதுரையம்பதி) said...

க்ரமமா எழுதுவதே நல்லது.....என்று தோன்றுகிறது....