பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே? இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க விடப் பட்டிருக்கும்.அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்த்க் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது. எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும்.
ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது. ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன் என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய செள்கரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு. காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.
கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் தவத்தாலும், தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிப்பாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?
ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும், தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின் மூலநாடிகளைக் கிளப்பி, மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.
(விளக்கம் தொடரும்.) முடிந்தவரை இன்னும் எளிமையாகத் தர முயற்சி செய்கிறேன்.
13 comments:
இந்தப் பக்கத்தை யாரானும் படிக்கிறாங்களா இல்லையான்னே தெரியலை! :(((((
ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க கூட யாரையுமே காணோம்!
இன்னைக்கு படிக்கலன்னாலும் பின்னாடி பல பேருக்கு இது ஒரு ஆன்மீக பொக்கீஷமா இருக்கும். பின்னூட்டத்தப் பத்தி கவலைப் படாம தொடர்ந்து எழுதுங்க.
என்னை மாதிரி படிச்சிட்டு பின்னூட்டமிட சோம்பல் படுற சிலரும் "கும்மியடிக்கிறவங்களுக்கு" மத்தியில இருக்கோம் அப்படிங்கிறத மனசில வச்சிகிட்டு,
'ரகசியத்த' 'அம்பலம்' ஆக்கும் வேலைய தொடருங்க.
//ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க கூட யாரையுமே காணோம்!//
எல்லோரும் ரகசியமா வந்துட்டுப் போயிட்டாங்களோ!!!
வாங்க மதி, நீங்க படிக்கிறதிலே சந்தோஷம் தான். இருந்தாலும் கொஞ்சமாவது படிக்கிறாங்கன்னு தெரிய வேணாமா? அதுக்கு ஒரு 2,3 பின்னூட்டமாவது வர வேணாமா?
இன்னிக்குத்தான் வரமுடிந்தது....இந்த பக்கத்தின் கடந்த 2 பதிவுகளையும் இன்று படித்துவிட்டேன்.....மதி அவர்கள் சொன்னதுபோல ரகசியத்தை நன்றாக பொன்னம்பலமாக்குங்கள்.
மதுரையம்பதி.
வாங்க, வாங்க, மதுரையம்பதி, உங்களை அடிக்கடி நாச்சியார் வ்லை வீட்டிலே பார்க்கிறேனே! :P ஷிகாகோவுக்கும், இந்த ஊருக்கும் அப்படி ஒண்ணும் அதிக தூரம் இல்லை. ஆனால் இப்போ ஸ்விட்ஸர்லாந்துக்கும் இந்த ஊருக்கும் கொஞ்சம் தூரம் ஜாஸ்தி. ஆனாலும் வந்துட்டீங்க! :D
அப்புறம் நீங்க சொன்ன மாதிரி எழுத முயற்சி செய்யறேன். ஆனால் ஒரு 2 நாள் ஆகும். ஆணி அதிகம். :D
Enaku thamizhla epdi type panradunu theriala...
Simply Wonderful job...
Please continue to do this excellent work..
Inda சிதம்பர ரகசியம் original purana book enga kedakum? (Tamil or sanskrit) edhavdhu idea iruka?
Yarukkavadhu therinja please tell me aravindsai@rediffmail.com
"நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா !"
-அருமை!
தமிழில் டைப் பண்ண வெச்சதுக்கு நன்றி நண்பர்களே
தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து
கொஞ்சம் அல்ல... நிறையவே கஷ்டப்பட வேண்டும்.சாதாரண மனிதர்களுக்கு.
சும்மா ஒரு 5 நிமிடம் உட்காரமுடியவில்லை,அப்புறம் எங்கே இதையெல்லாம் பார்க்கிறது.
முயற்சிக்கனும்.
சன் டிவில வந்துச்சே அதோட ட்ரான்ஸ்கிரிப்டா...:-)
அரவிந்த், தமிழ் டைப் பண்ண வந்ததுக்குப் பாராட்டுக்கள்.
@வடுவூர், இதெல்லாம் ஒரு நாளில் முடியாது. முக்கியமாய் அலை பாயும் மனது? அதை என்ன செய்யறது?
@அட, ச்யாம், கொல்லன் பட்டரையில் ஊசிக்கு என்ன வேலை? :D
I was searching for Tirumandiram and Tirumoolar But I came across this.
The description about Chidambaram and Nataraja are fabulous and it is one of the best masterpiece I have ever read.
As Madi mentioned in his commnets , in future lot of people are going to come and read this.
By the way can you update Where I can get the details about Tirumandiram and Tirumoolar or do you have any idea to publish a post about Tirumandiram in future.
Post a Comment