எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 16, 2007

சிதம்பர ரகசியம் - 15 - தெரியாமல் செய்யாதீங்க!

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும், இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம்" என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ, வெளிவிடும்போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப் படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும், அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனத் தோன்றியது.

நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது, இட, பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி, அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும், முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது.இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால்.

மூலாதாரத்துக்கு 2 விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" 6 இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

19 comments:

இலவசக்கொத்தனார் said...

நீங்கள் சொல்லும் மூலாதாரம், ஸ்வதிஷ்டானம் போன்றவைகளுக்கு எல்லாம் உடற்கூறு அறிவியலில் தகுந்த பாகங்கள் உள்ளனவா?

மாசிலா said...

நல்ல உபயோகமுள்ள பதிவு கீதா சாம்பசிவம். தொடர்ந்து எழுதிவாருங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

Geetha Sambasivam said...

அதனுடைய உணர்வுகளைப் பற்றியும் எழுதறேன் இ.கொ. முதலில் வேணாம்னு நினைச்சேன். அப்போ புரியும்னு நினைக்கறேன்.

நன்றி மாசிலாமணி அவர்களே!

வடுவூர் குமார் said...

இந்த குண்டலினி பக்கம் போகலாமா?வேண்டாமா? என்ற குழப்பம் இன்றும் எனக்கு உள்ளது.

Anonymous said...

யோகச்சக்கரங்களைப் பற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நவீன மருத்துவம் இவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்கிறதா இல்லையா எனத் தெரியவில்லை.
யோகாசனப்பயிற்சி மூலம் காலில் சாதரணமாக ஏற்படும் நரம்புத்தளர்ச்சியை இல்லாமற் செய்ய முடியுமா?

மெளலி (மதுரையம்பதி) said...

குண்டலினி யோகமும், இந்துமதமும் இணைந்த முயற்சிகளின் பலனை நமது சித்தர்களின் முலமாக அருமையாக உணரலாம்...சித்துக்கள் எல்லாம் குண்டலினியின் மூவ்மெண்ட்க்கு எற்றவிதத்தில் கிடைக்கப் பெறும் என்று படித்திருக்கிறேன். அருமையாக சொல்கிறீர்கள் மேடம்.

மூலாதாரம், ஸ்வாதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆஞ்க்யா/சஹஸ்ரஹாரம்...ஆகியவற்றுக்கான சக்ர உருவங்களையும் தொட்டுச் செல்வது மிக அருமை.

Geetha Sambasivam said...

@வடுவூர், வேணாம், முறையான குருவிடம் முறையான பயிற்சி பெறாமல் இதெல்லாம் முயற்சி செய்யக் கூடாது. ஒரு மாதம், 2 மாதம் எல்லாம் போதவும் போதாது.

நவன், திடீரென யோகப் பயிற்சி ஆரம்பித்தாலும் விடாமல் செய்ய வேண்டும். முற்றிய நோய்களுக்குக் கட்டுப் படுத்தத் தான் முடியும். சிறு வயதில் இருந்தே யோகப் பயிற்சி செய்பவர்கள் உடலே வில்லைப் போல் வளையும். இஷ்டத்துக்கு உடலைக் குறுக்கவோ மூச்சை அடக்கவோ அவர்களால் முடியும். 15 வயதுக்குள் ஆரம்பித்துச் செய்தால் நீங்கள் சொல்கிறாப் போல நரம்புத் தளர்ச்சி எல்லாம் ஏற்படாது. அதிக யோகப் பயிற்சியும் ஆபத்து. அது பற்றித் தனியாகப் பின்னால் எழுதுகிறேன்.

@மதுரையம்பதி, ரொம்பவே நன்றி. நம் உடலுடன் சம்மந்தப் பட்ட உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் எங்கே ஆரம்பிக்கிறது என்று விஞ்ஞானம் சொல்லும் முன் அதைக் கண்டு உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள்.

SKumar said...

இப்பொழுது சில பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுக்கப்படும் குண்டலினி பயிற்சி எந்த அளவு உபயோகமாக இருக்கும்?

Geetha Sambasivam said...

குண்டலினி யோகம் என்று பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுப்பது உண்மையான குண்டலினி யோகமே இல்லை. தயவு செய்து அதை நம்பி முயற்சி செய்ய வேண்டாம். இதற்கு முன் பல பயிற்சிகள் இருக்கின்றன. அவை எல்லாம் முடித்து உங்கள் யோக குருவே குண்டலினி கற்க நீங்கள் தகுதியானவரா என நிர்ணயிப்பார். அதற்குப் பின் தான் கற்கலாம்.

Suresh Ramasamy said...

Thanks for informative blogs. Whats your opinion about kundalini yoga taught by vethathiri maharishi?

Suresh

Geetha Sambasivam said...

வாங்க, சுரேஷ், உங்க பதிவுக்குப் போய்ப் பார்த்தேன், ஒண்ணுமே காணோமே! வேதாத்திரி மஹரிஷியின் குண்டலினி யோகம் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். என்றாலும் ஒரு மாதம் எல்லாம் பத்தாது. குண்டலினி யோகம் என்பது சாதாரண விஷயம் இல்லை.

Geetha Sambasivam said...

வாங்க, சுரேஷ், உங்க பதிவுக்குப் போய்ப் பார்த்தேன், ஒண்ணுமே காணோமே! வேதாத்திரி மஹரிஷியின் குண்டலினி யோகம் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். என்றாலும் ஒரு மாதம் எல்லாம் பத்தாது. குண்டலினி யோகம் என்பது சாதாரண விஷயம் இல்லை.

பராசரன் said...

தெரியாமல் செய்யாதிங்க என்பது மிகச் சரியான வார்த்தை. அதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தகுந்த பக்குவத்தை அடைந்த பிறகு இது போன்ற விஷயங்களில் இறங்குவது நல்லது என்பது என் எண்ணம். கீதையிலேயே ஞான யோகம், கர்ம, பக்தி யோகங்களுக்கு அப்பால் வருகிறது அல்லவா

Geetha Sambasivam said...

புரிந்து கொண்டதற்கு ரொம்பவே நன்றி, பராசரன்.

Unknown said...

iam really happpy

Unknown said...

iam very happy inthe story

Rameshkrishnan said...

neengal soona sila visayagalai yeaarum katrukodukamal saiyakudathu appadi seaithal pakka vilavugal varum athu umai than ithu yellarukum teriya vandum yendru solli irukirieergal paarathukal.

yeanaku 41 vayathu aagirathu naan pakthi margathil sella aasi padukgirean naan yeapdi naan virumubm kadvul idam yeapadi peasuvathu athu yeathru yendral sila sikkalagal yen valkayili varuginrana athai terinthu kondu athati clear pannavum matrum yenna mudinthani matravargaluku nallathu saiyavum than tavarana paathai ku alla please esnd any answer to my mail di rameshkrishnan80@gmail.com

note : naan sila idangaluku sendral kaasithan kurivaithu yendam pidungugirargal aanal onnum nadapathu kidayathu athala than please help me ok
thankyou by ramesh

M.SIVAKUMAR said...

hai every body,

neengal anaivarum sri amma bhagavanin koviluku vaarungal.. ange sariyaana muraiyil kundalini sakthiyai elupum murai solli tharapadugirathu..
athudan epadi aananthamaana vaalkai vaala vendum endrum solli tharugiraargal...

naam anaivarum onre..

M.SIVAKUMAR said...

your mind is not your mind...
your body is not your body...
your thoughts are not your thoughts..
mind is only concept...
everything is automatic.....
we are the god ....


continusly saying with out gap "naan sachithaanandha parabrammaa"... to 49 minutes... you will become enlightenment...

by sri Bhagavan at oneness...