நந்திவர்ம பல்லவன் வழிபட்ட இடத்திலேயே அவனுக்குப் பின்னர் பல நூறு ஆண்டுகள் கழித்து அச்சுதராயன் பிரதிஷ்டை செய்தான் எனவும், அதன் பின்னரே 1597-ல் கொண்டம நாயக்கனால் விரிவு செய்யப் பட்டது என்பதையும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் திரு C.S.ஸ்ரீநிவாசாச்சாரியார் என்பவர் எழுதி இருப்பதாயும் தெரிய வருகின்றது. இதற்கும் பின்னர் கி.பி.1643-ல் 3-ம் ஸ்ரீரங்கராயன், என்பவனால் பெருமாள் கோயிலை மேலும் விரிவு படுத்த எண்ணி, அவனாலேயே புண்டரீகவல்லித் தாயார் சந்நிதியும் அமைக்கப் பட்டது. அப்போது சில சிவ சந்நிதிகள் இடிக்கப் பட்டதாயும், அதனால் தீட்சிதர்களுக்கும், விஷ்ணு கோயிலின் பட்டாச்சாரியார்களுக்கும், ஏற்பட்ட பகைமை முற்றிப் போய், அது வெகு காலம் நீடிக்கக் கூடாது என இரு தரப்புமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாயும் தெரிய வருகின்றது. அதன்படி, இனி பெருமாள் கோயிலை விரிவு படுத்தும் பணியை வைணவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும், பெருமாளுக்கு எனத் தனியாக பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் தனித்துச் செய்யப் படமாட்டாது எனவும் இருதரப்பிலும் நடந்த பேச்சு, வார்த்தைகளில் உறுதி செய்யப் பட்டிருக்கின்றதாயும் சொல்லப் படுகின்றது.
ஆனாலும் இதற்கான ஆதாரம் என்று சொல்ல முடிவதோ கி.பி.1862-ல் வைணவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட வழக்கின் ஆதாரமே கிடைக்கின்றது என்றும் நம்பப் படுகின்றது. இதற்கான நீதிமன்றத் தீர்ப்பும் கி.பி.1867-ல் கிடைத்துள்ளது எனவும் சொல்கின்றார்கள்.
டிஸ்கி: இந்தத் தகவல்கள் கலைமாமணி பேராசிரியர் திரு.க.வெள்ளைவாரணனார் எழுதிய "தில்லைப் பெருங்கோயில் வரலாறு" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய இந்தப் புத்தகத்தைப் படிக்கவும். நன்றி.
*************************************************************************************
மேற்கண்ட தகவல்கள், அதாவது நந்திவர்மபல்லவனால்தான் முதலில் பெருமாள் கோயில் கட்டப் பட்டது என்று எழுத ஆரம்பித்த
சிதம்பர ரகசியம் பதிவுகள் அனைத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டது. என்றாலும் இவை மிகுந்த விவாதத்துக்கு உள்ளானது. முதலில் சொன்ன விஷ்ணு தான் சிவனின் நாட்டியத்தைக் காண சிதம்பரம் வந்தார் என்ற என்னுடைய கூற்றையே நான் மறந்துவிட்டே எழுதியதாய்ப் பலரும் நினைக்க நேரிட்டது. திவாகர் சொன்னமாதிரி சிவன் கோயில்களில் விஷ்ணு கட்டாயமாய் இடம் பெறுவார் என்பதையும் நன்கு அறிவேன். புராணக் கதையையும் மறக்கவில்லை. மற்றும் நான் எழுதிய எதையும் மறக்கவில்லை, அதே சமயம் நான் சிதம்பரம் சென்றிருந்தபோது, கோயிலில் விஷ்ணு, சுற்றுப் பரிகார தேவதையாக இருந்தவர், தனி இடம் பெற்றது நந்திவர்மபல்லவனாலேயே என்று தீட்சிதர் உறுதி செய்ததையுமே எழுதி உள்ளேன். சிதம்பரம் கோயிலில் விஷ்ணு முதலிலேயே இல்லை எனச் சொல்லவில்லை. மற்றபடி இதன் மூலம் யார் மனமாவது புண்பட்டிருக்குமானால் என்னுடைய மன்னிப்பையும் கோருகின்றேன்.
பொதுவாகக் கோயில் வரலாறு என எழுதும்போது, சிதம்பரம் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளில் உதவிகள் செய்த அரசர்கள் பற்றியும் இதற்கு முன்னர் எழுதினேன். அந்தமாதிரியே இப்போது விஷ்ணுகோயிலின் திருப்பணிகள் செய்த அரசர்களைப் பட்டியலிட வேண்டி அம்மாதிரிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இதில் எந்தவிதமான வித்தியாசமோ, அல்லது தவறாகவோ தெரியவில்லை. அம்மாதிரி நான் எழுதியதாய் ஒரு கருத்து யாருக்கானும் இருந்தால், அது அவர்கள் சொந்தக் கருத்து. என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. எனக்குக் கிடைத்த தகவல்களை உங்கள் முன் வைக்கிறேன். அவ்வளவே! இன்னும் சில தகவல்கள் கிடைத்ததும் இதை முடித்துவிடுவேன்.
6 comments:
கீதா சாம்பசிவம் said...
தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள், தீர்வோடு சொல்லப் படும் பிரச்னைகள், மிக மிக அருமையாக அலசி ஆராய்ந்து எளிமையாகச் சொல்லப் படும் தீர்வுகள், மொத்தத்தில் பதிவுகளின் தரம் சொல்ல முடியாத மேன்மையாக உள்ளது. ரொம்பவே நிறைவாகவும், சந்தோஷமாகவும் உள்ளது படங்களும் அருமையான தேர்ந்தெடுத்த புகைப்படக் கலைஞர் என நிரூபிக்கின்றது. உங்கள் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்//
அம்மாவின் வாழ்த்துக்கும் அன்பு ஆசிர்வதத்துக்கும் கோடான கோடி நன்றி
பணிவான வணக்கத்துடன்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கீதாம்மா அவர்களுக்கு பணிவான வணக்கம்,
இத்தொடரினை சமீபத்தில்தான் படிக்க நேர்ந்தது. வாய்மொழி வரலாற்றிலிருந்து சரித்திர புத்தகக் குறிப்பு வரை தில்லை அம்பலத்தனைப் பற்றி எழுதும் உங்கள் சேவை அளப்பரியது. மேலும் இங்கு நடக்கும் சைவ வைணவ விவாதங்களும் அருமை. இரண்டாம் குலோத்துங்க சோழனால் அகற்றப்பட்ட கோவிந்தராஜர் எங்கே?
உள்ளிருக்கும் தீக்ஷிதர்கள் செய்யும் பெருமாள் பூஜை 400 ஆண்டுகளாக ஏன் செய்யப்படவில்லை (மறுபடி பிரதிஷ்டை செய்யப்படும் வரை)? அப்படி செய்திருந்தால் எந்த மூர்த்திக்கு செய்தார்கள்? தீக்ஷிதர்களின் பூஜைக்கு வைணவர்களால் இடர் வருமென நினைத்திருந்தால் ஏன் கோவிந்தரஜருக்கு தனிக்கோவில் கட்டி கொடுத்திருக்ககூடாது? ஏன் பிச்சாவரத்தில் கடலில் மூழ்கடித்தார் (இது உண்மையா என தெரியவில்லை)? ஆக பழைய கோவிந்தராஜர் எங்கே இருக்கிறார்? சில சமயங்களில் கடவுள்கள் தங்களை மறைத்து கொள்வார்கள் என கேள்வி பட்டிருக்கிறேன். கோவிந்தராஜர் காணாமல் போனது, சபரிமலை அய்யப்பன் விக்ரஹம் காணமல் போனது( முன்பிருந்த விக்ரஹம் மிகவும் உக்கிரமானது என்றும் அவரை தரிசிக்க கடுமையான விரதம் இருக்க வேண்டும் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்) இதுவெல்லாம் இப்படித்தான்.
- மணிகண்டன்
ஆன்மீக தகவல்களின் அறிய தொகுப்பு http://www.valaitamil.com/spiritual.
சிவபெருமானே நேரில் வந்து சொன்னால்தான் உண்டு.
சிலவற்றிற்கு பதில்னு தேட ஆரம்பித்தால் குழப்பம் தான் மிஞ்சும்! :( ஆகவே விவாதங்கள் வேண்டாம் என்ற முடிவில் பதில் சொல்லவில்லை.
Post a Comment