எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, January 11, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - முடிவு!

மேற்கண்ட பாடலை முதல்முதல் விபரம் தெரியா வயசிலே படிக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்தது. இப்போ நன்கு புரிந்துகொண்டு படிக்கும்போது கண்ணீர் வரக் கேட்பானேன்! அதே நிலைமையில் தான் சிலருக்கும் இருக்கிறது என்பதும் புரிந்து கொண்டேன். இனி மேலே பார்ப்போமா??

பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகி வந்தது. நெடுநேரம் அங்கேயே நின்று கொண்டு மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்ததையும், கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் கண்டுகொண்டனர். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்ட பிள்ளைவாள் மற்ற சந்நிதிகளையும் தரிசனம் செய்து முடித்துக்கொண்டு ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவர் கிளம்பும் முன்பே கிளம்பிய கோயில் அதிகாரி ஒருவர் ராமலிங்க விலாசத்தில் சேதுபதி மன்னரைக் கண்டு உத்தரகோச மங்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிவிட்டார். மன்னர் எதுவும் பேசவில்லை. பொன்னம்பலத்தா பிள்ளை திரும்பிவந்ததும், பிரயாணத்தின் செளகரியம், அசெளகரியம் பற்றி மன்னர் விசாரித்தார். பிரயாணம் வசதியாகவே இருந்ததாகவும், கோயிலிலும் தரிசனம் நன்கு கிட்டியதாகவும் பிள்ளைவாள் சொன்னார். சேதுபதி மன்னர் விடாமல், “தாங்கள் கவிஞராயிற்றே? அங்கே ஏதேனும் தோத்திரப் பாடல் புதிதாய்ப் புனைந்தீரா?” என்று பிள்ளையிடம் கேட்டார். பிள்ளை அவர்களின் மனதுக்குள் இது தான் தக்க சமயம், நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

உடனேயே சாமர்த்தியமாய் மன்னரிடம், “அங்கே புதுசாய் வந்திருக்கிறாராமே ஒரு மூர்த்தி?? அவரைத் தரிசித்தேன். அப்போது அங்கே என் கேள்விகளை ஒரு செய்யுளாகச் சொன்னால், என்ன ஆச்சரியம்? அதற்கு விடையும் கிடைத்தது மற்றொரு செய்யுளாக.” என்று ஆச்சரியம் குறையாதவர் போல் சொன்னார். உண்மையில் இப்போது மன்னருக்குத் தான் ஆச்சரியம். “என்ன சொல்லுங்கள், உங்கள் கேள்வியாக எழுந்த செய்யுளையும், அதன் விடையாக வந்த செய்யுளையும் சொல்லுங்கள், கேட்கலாம்.” என்றார் மன்னர்.

பொன்னம்பலம் பிள்ளை, “புற்றெங்கே” என்று ஆரம்பித்துத் தான் பாடிய செய்யுளைச் சொன்னார். பின் எதுவுமே அறியாதவர் போல் இதன் விடையாகக் கிடைத்த செய்யுள் இது, என்று சொல்லிவிட்டு மற்றொரு செய்யுளைச் சொன்னார். அந்தச் செய்யுள்:

”விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப் போலஞ்சாதெமைக் கரிசற்
காடுதொறு மேயிழுத்தக்கால்!”

சீராசை என்பது சங்கரநயினார் கோயிலைக்குறிக்கும்.

என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மன்னர் முகத்தையே பார்த்தார். மன்னருக்குப் புரிந்துவிட்டது. சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோச மங்கைக்கு வந்த வரலாறைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் பொன்னம்பலத்தா பிள்ளை என்பதைப் புரிந்து கொண்டார். மீண்டும் அந்த மூர்த்தம் சங்கரன் கோயிலையே போய்ச் சேரவேண்டும் என்ற தமது ஆசையையும் அவர் இந்த வெண்பா மூலம் வெளிப்படுத்தியதைப் புரிந்து கொண்டார். பிள்ளையைப் பார்த்து, “ மிகச் சாதுர்யமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் பிள்ளை அவர்களே! பாராட்டுகிறேன். ஆனாலும் நாயகருக்கு இங்கே என்ன குறை?? கரிசற்காடாக இருந்தாலும் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. வேளா வேளைக்கு எல்லாம் நடந்தே வருகிறது. கரிசற்காட்டிற்கு வரும்போது அவஸ்தைப் பட்டார் போல! இப்போது செளகரியமாகவே உள்ளார்” என்று முடிக்கப் பார்த்தார்.

பிள்ளை அவர்களோ, “அரசே, உமக்குத் தெரியாதது இல்லை. அவரவர் இடத்தில் அவரவர் இருத்தலே சிறப்பன்றோ? சங்கரன் கோயில் நாயகரைத் திரும்ப அங்கேயே சேர்ப்பிப்பதே முறை” என்று மீண்டும் வேண்டினார். என்ன தோன்றிற்றோ அரசரும் திடீரென, “சரி, உம் விருப்பம் அதுவானால் அப்படியே செய்துவிடலாம்.” என்று சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் ஆனந்தம் சொல்லி முடியாது. அரசர் உத்தரவின் பேரில் தக்க உபசாரங்களுடனும், மரியாதைகளுடனும், கொடி, ஆலவட்டம், குடை போன்ற பரிவாரங்களுடனும் சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கையிலிருந்து எழுந்தருளினார். அவருடன் தாமும் போவதாய்க் கூறி பொன்னம்பலத்தா பிள்ளை மன்னரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மூர்த்தத்தைப் பின் தொடர்ந்து தாமும் சென்றார். முன்னால் ஒரு ஆளை அனுப்பி நாயகர் திரும்ப வருவதையும், சந்திக்கும் இடம் திருமங்கலம் என்றும் சொல்லி ஆறை அழகப்ப முதலியாருக்குச் செய்தி அனுப்பினார். முதலியாரும் மேள, தாளங்களுடனும், சிவாச்சாரியார்களுடனும், மற்ற முக்கிய உத்தியோகஸ்தர்களுடனும், தாமே நேரில் சென்று சங்கரன் கோயில் நாயகரை மட்டுமின்றிப் பொன்னம்பலத்தா பிள்ளையையும் எதிர்கொண்டு வரவேற்றார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பிள்ளை அவர்களைத் தம் நிலையையும் மறந்து இறுகக் கட்டிக் கொண்டு வாய்விட்டு அழுதார் ஆறை அழகப்ப முதலியார். அனைவரும் நாயகரைத் தரிசித்து மனம் உருகிப் பிரார்த்தித்ததோடல்லாமல், விம்மி, விம்மியும் மெய்ம்மறந்தனர்.

பொன்னம்பலத்தா பிள்ளையை வாழ்த்தினார்கள் அனைவரும். நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலில் தம் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் பொன்னம்பலத்தா பிள்ளையின் இந்தச் செயலால் கவரப்பட்ட ஆறை அழகப்ப முதலியார், அதிகாரி, ஏவலாளர் என்ற வேறுபாடின்றி அனைவரோடும் சுமுகமாய்ப் பழகவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. நாயகரும் தம் இடத்துக்கு வந்துவிட்டார். நம் கதையும் முடிஞ்சு போச்சு. கத்திரிக்காயும் காய்ச்சுடுத்து.

16 comments:

ambi said...

கதை முடியட்டும், ஆனா கத்ரிகாய் ஒன்னும் காய்க்கலை. :))

சரி, இந்த கதை அல்லது நிகழ்வு கல்வெட்டாக உள்ளதா? தரவு இல்லாம எழுத மாட்டீங்களே நீங்க, அதான் கேட்டேன். :))

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, கத்தரிக்காய், காய்ச்சுது, காய்ச்சுது, காய்ச்சுது, இன்னும் காய்க்கும், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குப் பிடிக்குமாக்கும்!

ஹிஹி அப்புறம் இந்தக் கதை நிகழ்வு, உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி பாகம் ஒண்ணில் பத்தொன்பதாம் அத்தியாயமாகக் கிடைக்கும், பழைய பதிப்புகளில். புதுப் பதிப்பில் நினைவு மஞ்சரி பாகம் இரண்டில் இருக்கு போல. கலைமகள் பத்திரிகை நாற்பதுகளில் வந்தப்போ இது தொடராக வ்ந்திருக்கு. நான் முதல்லே படிச்சது கலைமகள் பழைய பத்திரிகைத் தொகுப்பிலே. அதுக்கப்புறம் நினைவு மஞ்சரி.

கீதா சாம்பசிவம் said...

தரவு இல்லாம எழுத மாட்டீங்களே நீங்க, அதான் கேட்டேன். :))//

ஹிஹிஹி, பாராட்டுக்கு நன்னிங்கோ, குளிருது ரொம்ப! :P :P

கேசவன் said...

வாழ்த்துக்கள் ! நான் ஒரு மூன்று நான்கு பகுதிகள் வாசித்திருப்பேன். ஆனால் இதுவரை கருத்திட்டதில்லை. நன்றாகவே இருந்தது ! பதிவு !! நன்றி !

rkajendran2 said...

மதிப்பிற்குரிய அம்மா,
சங்கர நாராயணர் நாயகர் கோவிலை வந்தடைந்த கதையைப் படித்து மிகவும் பரவசமடைந்தேன்......நான் முதலில் திருடிக் கொண்டுதான் வாருவார்கள் என நினைத்தேன். ஆனால் நாயகர் இராஜ மரியாதையோடு வந்த கதையைப் படித்து மிகவும் ஆச்சரியப்பட்டேன்...
இந்த கதைகளை வேறு எங்கும் நான் படிக்க வில்லை.அந்த கோவிலில் கூட இந்த சரித்திர கதையை எங்கும் நான் பார்க்கவில்லை....
நீங்கள் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் பேராசிரியையா? எதுவாகஇருப்பினும் கதையை விரைந்து எழுதியதற்கு மிகவும் நன்றி.....
உங்களின் இந்த பிளாக்கை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்... இது போன்ற சரித்திர, சமய நிகழ்ச்சிகளை தொடர்ந்து எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் நன்றி,
== கஜேந்திரன், சிவகாசி

மதுரையம்பதி said...

arumai...

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, very useful and informative post

kovilpatti, ettayapura, thootukudi, aauthoor temples are missing

ambi said...

//நீங்கள் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் பேராசிரியையா?//

@கீதா மேடம், சும்மாவே உங்களுக்கு பெருமை பிடிபடாது. இதுல கஜேந்திரன் சார் வேற.... சரி நடக்கட்டும், :))

நான் மெளலி/திவாண்ணா எல்லாம் தள்ளி நின்னு வேடிக்கை பாக்கறோம் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும். :)))

கீதா சாம்பசிவம் said...

கஜேந்திரன், நான் பேராசிரியை எல்லாம் இல்லை, சரித்திரத்திலும், இலக்கியத்திலும் ஆர்வம், அவ்வளவு தான். உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிப்பா.

கீழே பாருங்க.,அம்பிக்கு எவ்வளவு புகை வருது?? :P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

வாங்க கேசவன், ரொம்ப நன்றிப்பா.

கீதா சாம்பசிவம் said...

மெளலி, வருகைக்கு நன்றி.

கீதா சாம்பசிவம் said...

குப்பன் யாஹூ, நீங்க கேட்டிருக்கும் இடமெல்லாம் இன்னும் போகலையே? போகாமல் எப்படி எழுத முடியும்?? பார்க்கலாம், இறை அருள் கூடி வந்தால் தரிசித்துவிட்டுப் பின்னர் எழுதலாம். நன்றி.

கீதா சாம்பசிவம் said...

//@கீதா மேடம், சும்மாவே உங்களுக்கு பெருமை பிடிபடாது. இதுல கஜேந்திரன் சார் வேற.... சரி நடக்கட்டும், :))//

அம்பி, எழுதிக் கொடுக்கிறது கணேசன், :))))))))) :P :P:P:P:Pஅதுவும் இப்போ அவன் தோஹா போனப்புறம் ஞாயித்துக்கிழமை மெயில் பண்ணறதை வச்சு ஒப்பேத்தறீங்க! போனாப் போகுது! அதுக்கு என்னைப் பார்த்து இவ்வளவு புகையா??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//நான் மெளலி/திவாண்ணா எல்லாம் தள்ளி நின்னு வேடிக்கை பாக்கறோம் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும். :)))//


பாருங்க, பாருங்க, நல்லாப் பாருங்க, கணேசன், திராச சார், ரேவதி, துளசி, ரா.ல. கவிநயா இவங்களை எல்லாம் விட்டுட்டீங்க???

Complan Surya said...

avlothana...

kadai mudichta...

evlo seikrama mudicitenga..

sari paravala aduthatha oru periyaaaaaaa
purana kadai ondru eluthunga..

Vasika Avaludan
Kathu erukom...

"Neengal VArugala Purana Eluthalar
Docter Geetha Saamba Sivam endra Patam VAlaga Padukirathu.."

Nandri
Valga VAlamudan.

தி. ரா. ச.(T.R.C.) said...

நீங்கள் டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் பேராசிரியையா? எதுவாகஇருப்பினும் கதையை விரைந்து எழுதியதற்கு மிகவும் நன்றி


sabhaash sariyana pootti

கீதா சாம்பசிவம் said...

அட??????????????????? வாங்க திராச சார், உடம்பு எப்படி இருக்கீங்க?? பரவாயில்லையா?? திடீர்னு இன்னிக்கு வெயில் கொளுத்துதேனு நினைச்சேன், பார்த்தா, உங்க பின்னூட்டம்! :P:P:P:P