அந்தகாசுரனுடன் தொடர்பு உள்ள மற்றொரு சிவ வடிவமே கங்காளர் எனப்படும். அந்த நாட்களில் வீடுகளில் கங்காளம் என்ற பெரியதொரு பாத்திரம் இருக்கும். நிறையத் தண்ணீரோ அல்லது அதிக அளவு உணவு சமைக்கவோ பயன்படுத்தப் படும் இந்தப் பாத்திரம் போன்றதொரு பாத்திரம் சைவர்கள் காவடி போல் எடுத்துச் செல்லவும் பயன்படும். பாத்திரத்தின் இருபக்கமும் தொங்கும் வளையம் போன்ற காதுகளில் கம்பைச் செருகி எடுத்துச் செல்லுவார்கள். இவற்றில் சிவலிங்கம், நந்தி போன்றவை அமைத்திருப்பார்கள். பார்த்ததுமே வீர சைவர்கள் எனச் சொல்லும்படியாக இருக்கும். இப்போல்லாம் காணோம். பாசுபத வீர சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கங்காள மூர்த்தியை வழிபடுகின்றனர். பாசுபத விரதத்தை ஸ்ரீகங்காள மூர்த்தி மேற்கொண்டதாகவும் சிவபுராணம் சொல்லுகிறது. உடலெங்கும் விபூதி பூசிய வண்ணம் காட்சி அளிப்பார்கள்.
கங்காள மூர்த்திக்குரிய பாடல் தேவாரத்திலே தேட வேண்டி இருக்கு. சரியாத் தேடத் தெரியலை. ஆனால் கீழே உள்ள ஞானசம்பந்தர் பாடல் கிட்டத் தட்ட அதோடு ஒத்துப் போகிறது. ஆனால் இது திருவேட்களம் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் பாசுபதேஸ்வரர் பற்றிய பாடல். இந்த ஊரில் தான் அர்ஜுனனுக்கு ஈசன் பாசுபதாஸ்திரம் கொடுத்ததாகத் தலபுராணம் கூறுகிறது.
சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.
அந்தகாசுரனைச் சூலத்தில் குத்தித் தூக்கி ஏந்தியவண்ணம் உலகை வலம் வந்த கோலமே கங்காள மூர்த்தி எனப்படுகின்றது. வலக்காலை முன்னே வைத்து புலியாடை தரித்து ஜடாமுடியோடு காக்ஷி அளிக்கும் கங்காளருக்குச் சில இடங்களில் போர்வாளும் காணப்படும். சூலாயுதத்தை கங்காள தண்டம் என அழைப்பார்கள். பாம்பை ஆபரணமாய்த் தரித்துக் கொண்டிருக்கும் இவர் வலத் திருக்கரத்தில் ஒன்று மான்குட்டிக்கு அன்போடு புல்லை உணவாய்க் கொடுத்துக் கொண்டிருக்கும். அந்தகன் சூலத்தில் தொங்கியவாறு காக்ஷி அளிப்பான். அவன் ரத்தத்தைக் குடித்த வண்ணம் ஒரு பூதமும் உணவுத்தட்டோடு மற்றொரு பூதமும் கூடவே வரும். மற்ற பூதகணங்கள் மூர்த்தியைச் சூழ்ந்து ஆடிப் பாடியவண்ணம் காக்ஷி அளிப்பார்கள். கங்காளர் வலம் வரும் சமயம் வாயுபகவான் தன் காற்றால் வீதியைச் சுத்தம் செய்வானாம். வருணன் நீர் தெளிப்பானாம். வேதங்கள் ஓதிட, சூரிய, சந்திரர்கள் தங்கள் ஒளியான குடையைப் பிடிக்க, நாரதர் இசைக்க வலம் வருகின்றார் கங்காளர். திருவாரூர் மாவட்டம் திருவிற்குடிக்கு அருகே கங்களாஞ்சேரி என்னும் ஊர் கங்காள வழிபாடு இருந்தற்கான ஒரு அடையாளம் எனச் சொல்லப் படுகிறது. மேலும் விரிஞ்சிபுரம்,சுசீந்திரம், திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராசுரம், திருநெல்வேலி போன்ற ஊர்களிலும் கங்காள மூர்த்தியின் சிற்பங்களைக் காணமுடியும்.
9 comments:
எனக்கு கங்காள மூர்த்தினு படிச்சப்புறம் ரெண்டு ஞ்யாபகம் வந்தது:))
1) அம்பாசமுத்ரம் பக்கத்துல ப்ரம்மதேச கோவில்ல ஒரு சின்ன சன்னதி இருக்கும் கங்காளேஸ்வரர்னு. அவரும் நீங்க சொல்லறவரும் ஒண்ணா என்னனு தெரியல்ல. அந்த சிவன் சிலை ரொம்ப அழகா மனுஷ ரூபத்தில பிக்ஷை க்கு போற சிவன். பாக்க ரொம்ப அழகா இருக்கும்.தெளிவா ஞ்யாபகம் இல்லை.
2) எங்க கடயத்தாத்துல நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்புக்கு திரட்டுப்பால் வெங்கல கங்காளத்துல தான் காய்ச்சுவா. சிவக்கவே சிவக்காம க்ரீமியா "யம்..யம்.." :)))))
பல சைஸ் ல இருக்கும் தட்டை காது பாத்திரம் .தீபாவளி வெந்நீர் கூட பெரிய கங்காளத்துல போடுவா.
பிரம்மதேசம் கோயில் பார்த்ததில்லை ஜெயஸ்ரீ, அதனால் சொல்ல முடியலை, ஆனால் நீங்க சொல்றதை வைச்சுப் பார்த்தா அது பிக்ஷாடன மூர்த்தினு தோணுது.
திரட்டுப் பால் இப்போவும் நான் கங்காளத்திலே தான் காய்ச்சுவேன். தூக்கக்கூட முடியாது. நாகர்கோயில் வெண்கலம். தீபாவளி வெந்நீர் போடற கங்காளம் எல்லாம் விலைக்குப் போட்டாச்சு! இப்போல்லாம் கீசர் தானே கங்காளம்! :)))))))
என் கிட்டே இருக்கும் கங்காளத்துக்குக் காது இல்லை. :)))))))) அதனாலே என்ன சொன்னாலும் பேசாம இருக்கும்!
கங்காள மூர்த்தி...ம்..புதுசாயிருக்கு..
கங்காள பரமேஸ்வரரின் தேவி அங்காள பரமேஸ்வரி. கங்காளரின் சக்தியாகிய திரிசூலத்தில் அசுரனைச் சுற்றியதை மையமாகக் கொண்டுதான், மயானக் கொள்ளை உத்ஸவம் நடைபெறும்.
www.natarajadeekshidhar.blogspot.com
பிரம்மதேசம் சிவாலயத்தில் உள்ளது கங்காள மூர்த்தி தான். ஆனால் அதன் வரலாறு அறிய இயலவில்லை.இங்கு உள்ள மூர்த்தியில் சூலம் இல்லை. ஆனால் தோளில் தோல் பை உள்ளது. சுற்றிலும் வாயு வருணன் ஈஸாநன் உள்ளிட்ட திக் பாலகர்களும், அப்சரஸ் ஸ்த்ரீகளும், அகத்தியர், பிரம்மா அன்ன வாகனத்திலும், விஷ்ணு கருட வாகனத்திலும் உள்ளனர். நாரதரும் உள்ளார். கீழே உள்ள கணங்கள் வாத்தியத்துடன் உள்ளனர். வரலாறு தெரிந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு தயை கூர்ந்து தெரிவிக்கவும் narumbunathar@gmail.com
பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.com
பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.com
பிரம்மதேசம் கோயிலில் உள்ளது கங்காள மூர்த்தி தான். அது சின்ன சந்நிதி கிடையாது. பெரிய சந்நிதி. உள்ளே அஷ்ட திக் பாலகர்கள், அப்சரஸ் ஸ்த்ரீகள், அன்ன வாகனத்தில் பிரம்மா,கருட வாகனத்தில் விஷ்ணு, நாரதர், அகஸ்தியர், சூரிய சந்திரர் மற்றும் வாத்தியங்களுடன் கின்னரர் கிம்புருடர் ஆகியோர் உள்ளனர். வரலாறு தெரிந்தால் பதிவிடவும் அல்லது எனது மின்னஞ்சல் முகவரி க்கு தயவு கூர்ந்து அனுப்பவும்.narumbunathar@gmail.com
Post a Comment