எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 16, 2011

அண்ணாமலைக்கு அரோஹரா!

பிரம்மதீர்த்தக்கரையிலிருந்து மேற்கே திரும்பி வந்தால் அதன் இருபக்கங்களிலும் காணப்படும் சந்நிதிகளில் தெற்கே யானை திறை கொண்ட விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். இந்த விநாயகர் கனவில் வந்து மிரட்டி யானையைக் கப்பமாய்க் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். இதெல்லாம் நின்று பார்க்க நேரமில்லாமல் அவசரமாய்த் தான் பார்க்கவேண்டி வந்தது. வேறு வழியில்லை. குழுவிலிருந்து பிரிந்தால் அவங்களுக்கும் கஷ்டமே. குழுவோடு வராமல் தனியாக வந்து நான்கு நாட்களாவது தங்கி இருந்து பார்க்கவேண்டும். எப்போ முடியுமோ தெரியலை! இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்த கொடுங்கோல் மன்னன் ஒருவனின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் துன்பப் பட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் கோயில் விநாயகரிடம் முறையிட்டு அழ, விநாயகர் மன்னன் கனவில் வந்து அவனை மிரட்டினாராம். பயந்து போன மன்னன் மறுநாளே இந்தச் சந்நிதிக்கு வந்து தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு யானைகளை வாங்கிக் காணிக்கை செலுத்தினானாம். யானைகளைக் கப்பமாய்ப் பெற்றுக்கொண்ட்தால் யானை திறையாகக் கொண்ட விநாயகர் என்ற பெயர் இவருக்கு. இங்கே தான் சுப்பிரமணியர் கம்பத்து இளையனார் என்ற பெயரோடு விளங்குகிறார். இந்தக் கோயிலில் பெரியவர் அண்ணாமலையாரே. அவர் பெரு நெருப்பு. அந்தப் பெரு நெருப்பிலிருந்து தோன்றிய சின்னஞ்சிறு நெருப்பான முருகனை இங்கே அவர் குழந்தை என்பதாலும், அப்பாவை விடச் சின்னவர் என்பதாலும் இளையனார் என்றே அழைக்கின்றனர்.


ஐந்து நிலைகளோடு கூடிய கிளி கோபுரத்தின் திருப்பணிகளைச் செய்தது திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜேந்திரசோழன் என்று கல்வெட்டு குறிப்ப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. கிளிகோபுரத்தின் கதை தான் ஏற்கெனவே சொல்லியாச்சு. அருணகிரியார் இங்கே கிளி வடிவில் ஞானம் பெற்று அந்த வடிவிலேயே இன்னமும் அந்தக் கோபுரத்தின் மீது வீற்றிருந்து அருள் புரிவதாய் ஊர் மக்களின் ஐதீகம். மேலும் அம்பிகையில் தோள்களில் காணப்படும் கிளியும் இவரே எனவும் கூறப்படுகிறது. ஞானக்கிளியான அருணகிரியைத் தம்மிடமிருந்து அன்னைக்கு முருகன் கொடுத்ததாயும் ஐதீகம். கிளி கோபுரத்தின் நேரே காணப்படுவது நாம் தொலைக்காட்சிகளில் காணும் தீபதரிசன மண்டபம். பதினாறு கால் மண்டபம் ஆன இது எவரால் கட்டப்பட்டது என்று கேட்க ஆச்சரியம் மிகுந்தது. பாண்டிமாதேவி என அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் சிறப்பித்துச் சொல்லப்படும் மங்கையர்க்கரசியாரால் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு தான் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் பஞ்சமூர்த்திகளோடு அர்த்தநாரீசுவரரும் ஆடிக்கொண்டு வந்து பொது மக்களுக்குக் காட்சி கொடுக்கிறார்கள். இதைக் காட்சி மண்டபம் எனவும் அழைப்பதாய்த் தெரிய வருகிறது.

கிளி கோபுரத்தைத் தாண்டியதும் வரும் பிரகாரத்திலிருந்து பார்த்தால் அம்மன் சந்நிதி காணப்படுகிறது. உண்ணாமுலை அம்மனை தரிசிக்கச் சென்றோம். உண்ணாமுலை அம்மனை என்னவோ பெரியவளாக, எங்க புக்ககத்து ஊரான கருவிலியின் சர்வாங்கசுந்தரியைப் போல் உயரமும், பருமனுமாக ஒரு ஆகிருதியோடு இருப்பாள் என நினைத்துப் போனால் என்ன ஆச்சரியம்? சின்னஞ்சிறு பெண் போல சித்தாடை இடை உடுத்திக் காணப்பட்டாள் உண்ணாமுலை அம்மன். பார்க்கப் பார்க்க்க் கண்கொள்ளாக் காட்சி அம்மனின் அலங்காரம். கையில் அள்ளிக்கொள்ளலாம் போல சிறு உடல். கண்ணெதிரே ஒரு வாலைக்குமரி தான் நின்றாள்.
ஆனால் நின்று பார்க்கத்தான் விடவில்லை. இத்தனைக்கும் கூட்டம் என்னமோ குறைவு தான். நாங்க ஒரு பதினைந்து பேர் இருந்தோம். அதைத் தவிர சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களுமே காணப்பட்டாலும் அர்ச்சகர் விரட்டினார். எனக்குக் கோபம் வந்து வருஷக் கணக்காய்க் காத்திருந்து சிறப்பு தரிசனச் சீட்டும் வாங்கிக்கொண்டு வந்திருக்கோம். அதுவும் தூரத்திலே இருந்து. பார்க்க விடமாட்டேங்கறீங்களேனு கேட்க, அங்கே வாக்குவாதம் வேண்டாம்னு ரங்க்ஸ் என்னைப் பிடிச்சு இழுக்க, நான் அடம் பிடிக்க அர்ச்சகர் என்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருப்பார்? நீங்க அங்கே வெளியே போய் அந்த மேடையிலே நின்றுகொண்டு எத்தனை மணி நேரம் வேணாலும் பாருங்கனு விரட்டிட்டார். அந்த மேடை கர்ப்பகிரஹத்திலிருந்து தள்ளி வெளிவாசலுக்கு அருகே இருந்தது. ஏற்கெனவே பத்துப்பேர் நின்னுட்டு இருந்தாங்க. அவங்க எல்லாம் தர்ம தரிசனம் போலிருக்கு. உள்ளே வரமுடியாமல் அங்கே நின்னு பார்த்தாங்க. நாம தான் சீட்டு வாங்கி இருக்கோமேனு கோபம் வந்தாலும் ஒண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணும் பண்ணமுடியலை. இதுக்குப் பழநி மலையில் பரவாயில்லை போலிருக்கு. சிறப்பு தரிசனச் சீட்டுனு காட்டியதுமே சந்நிதிக்கு எதிரே பத்து நிமிஷம் உட்காருங்க. நின்று கொண்டு பார்த்தால் பின்னால் பார்க்கிறவங்களுக்கு மறைக்கும். நாங்க எழுப்பற வைக்கும் உட்கார்ந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு நாங்க கொண்டு போன பால், போன்றவற்றை அபிஷேஹமும் செய்து வைத்து அர்ச்சனையும் பண்ணிக் கொடுத்தாங்க. அதுக்கே குறைப்பட்டேன் இல்ல?? நல்லா வேணும்னு தோன்றியது இப்போ!

4 comments:

VIKNESH said...

kovilukku neengal sendrathu sirappu than,,,,athai vida neengal seitha oru thavaru yenna theriuma,,,,,,kadavul yenakku mattum than sontham yenpathu pol neengal (special counter)payan paduthiyathu......yendraikku oru kovilukkul sellum pothum antha iraivan nammai yeppothu parkka vendum yendru (time) neram koduppan.... athai vittuvittu ungal selvathai payan paduthi kadavulai kana sendral athu periya pavathai kondu sellum,,,,,,,(panam illamal yevlo per irupparkal intha annamalaiyanai kana yenpathai yosikka vendum,,,,inimel yentha oru kovilukku sendralum sirappu tharisanam yendru illamal pothu tharisanam mulam sendru parungal....athu niraya santhosam tharum,,,,intha comment pottatharkku kovam padathirkal naanum ungalai pondra oru siva thondar yendra muraiil intha korikkaiyai vaikkiren,,

Geetha Sambasivam said...

திரு விக்னேஷ், உங்கள் இந்தப் பின்னூட்டத்தை இப்போதே பார்க்கிறேன். இறைவன் அனைவருக்கும் சொந்தம் என்றும் அவனைப் பார்க்கவென்றே ஏழை,எளியவர் முதல் கோயில்கள் செல்கிறோம் எனவும் எனக்கு மட்டும் தெரிந்தால் போதாது.அரசுக்குத் தெரியவேண்டும். இப்போது நாற்பதாண்டு காலத்தில் தான் இறைவனைப் பணம் செலுத்தித் தரிசிக்கும் முறை வந்துள்ளது என்பது உங்களைப் போன்ற இளைய தலைமுறை அறிய மாட்டீர்கள். நெடுந்தொலைவில் இருந்து வரும் பக்தர்களும், வயதான நிற்க முடியாமல் சிரமப் படும் பக்தர்களும்பார்க்கவென்றால் சிறப்பு தரிசனத்தில் செல்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்தப் பணம் கோயிலுக்குச் செல்வதில்லை என்பது தான் வருத்தம் தர வைப்பது. :((((( ஒரே நாளில் இரண்டு, மூன்று கோயில்கள் சென்ற நாங்கள் இலவச தரிசனத்துக்கு நின்றால் மறுநாள் தான் திரும்ப இயலும்.

Baskaran said...

இதுவரையில் படித்து உள்ளன்.

மிக அருமை.

ஈசன் அருள் உங்களுக்கு உண்டு.

Geetha Sambasivam said...

நன்றி பாஸ்கரன்.