எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, October 07, 2006

38. ஓம் நமச்சிவாயா-9

5-9-06 செவ்வாய்க்கிழமை காலையில் நாங்கள் எல்லாரும் இரு குழுவாகப் பிரிந்து இரண்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டு கைலை யாத்திரையின் முதல் நாள் பயணத்தைத் துவங்கினோம். காட்மாண்டுவின் மலைப்பகுதிகளில் பிரயாணம் தொடர்ந்தது. உயர்ந்த மலைச் சிகரங்கள்,. கீழே , கீழே, கீழே, இந்திராவதி நதி வேகமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெகு தூரத்துக்கு இது வருகிறது. காட்மாண்டு நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை பாதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அப்படி ஒன்றும் பாதை அகலம் இல்லை. இத்தனை பெரிய பஸ் வளைவுகளில் திரும்பும்போது சற்றுப் பயமாகத் தான் இருக்கிறது. என்றாலும் போகும்போது போகிற சந்தோஷத்திலும், ஆசையிலும், எதிர்பார்ப்பிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் பயணத்தைத் தொடர்ந்தோம். சற்றுக் குளிர் கூடிக் கொண்டே வந்தது. மலைப் பகுதிகளில் பசுமை தெரிந்தது. நடு நடுவே உருக்கி ஊற்றிய வெள்ளி போல அருவிகள், மிக மிக உயரத்தில் இருந்து கீழேஏஏஏஏ விழுந்து கொண்டிருந்தன. ஒன்றா, இரண்டா? 10 அடிக்கு ஒன்று இருக்கும் என நினைக்கிறேன். அத்தனை உயரத்தில் இருந்து அருவி விழும் வேகத்தில் பாதை சரிந்து நிலச் சரிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது. மலைச் சரிவுகளில் பல இடங்களில் நெற்பயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரிந்தது சோளம் தான். சோள மணிகள் காய வைக்கப் பட்டிருந்தன. ரொம்பவே உயரமான பகுதி. குறுகலான பாதை. ஒரு வண்டி எதிரே வந்தால் அது கடக்கும் வரையோ, நம் வண்டி கடக்கும் வரையோ மனசு திக் திக் என்று அடித்துக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிகச் சாமர்த்தியமாக வண்டி ஓட்டினார்.

சற்று தூரம் போனதும் சுமார் 8-30 மணி அளவில் ஒரு பள்ளத்தாக்கு ஊர் வந்ததும் காலை உணவு ஏற்கெனவே தயார் செய்து பெட்டியில் அடைக்கப் பட்டது கொடுக்கப் பட்டது. ஒரு டீக்கடையில் உட்கார்ந்து காலை உணவைச் சாப்பிட்டு விட்டு அங்கேயே டீயும் குடித்தோம். வரும் வழியில் தென்பட்ட "அன்னபூர்ணா மலைத் தொடர்ப் பகுதிகள்" பற்றியும், எவரெஸ்ட்டின் மறுபக்கச் சிகரம் தெரிந்தது பற்றியும் எல்லாரும் பேசிக் கொண்டோம். வழி எல்லாம் ராணுவ சோதனை. உள்நாட்டில் இன்னும் நிலைமை சீராகாத காரணத்தால் நேபாளம் எங்குமே இந்த சோதனை நடக்கிறது. நாங்கள் அரசு அனுமதி பெற்றிருப்பதால் அதிகம் சோதனை இல்லை. காட்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணித்துப் பின் நேபாள எல்லையான கோடரி-தொட்டபாணி என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கே இந்த பஸ் நின்று விடும். அங்கிருந்து சீனாவிற்குள் அதாவது திபெத் பள்ளத்தாக்கில் நுழைய நடந்தே கடக்க வேண்டும்.. இது சுமார் 2 அல்லது 3 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும். அதே போல் சீன எல்லையில் இருந்தும் நேபாளத்திற்குள் நுழைய நடந்தே வருகிறார்கள். இந்த இடத்தில் எல்லாரும் இறங்கிக் கொண்டு கையில் கொண்டு வரும் சாமான்களைத் தவிர மற்றவை இருந்தால் ட்ராவல்ஸ்காரரிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லாரும் ஏற்கெனவே அதற்குத் தகுந்தாற்போல் பாக் செய்து வந்திருந்ததால் கைப்பையைத் தூக்கிக் கொண்டு நடந்தோம். அங்கிருந்து "ஹோட்டல் லாசா" என்ற இடத்துக்குப் போய் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கே இருந்து எல்லாரும் நேபாள,சீன எல்லையில் இருக்கும் "நட்புப் பாலம்" (friendship bridge) போக வேண்டும். "லாசா" ஹோட்டலில் சாப்பாடு என்ற பெயரில் இரண்டு கருகிய ரொட்டி, ஒரு ஸ்பூன் சாதம், அதே மாதிரி ஒரு ஸ்பூன் தால், சப்ஜி என்ற பெயரில் இரண்டு உருளைக்கிழங்குத் துண்டங்கள் கொடுத்தார்கள். சிலருக்கு அது போதவே இல்லை. ரொம்பக் கேட்டதுக்கு அப்புறம் தயிர் என்ற பெயரில் ஒரு திரவம் வந்தது. சாப்பிட்டு விட்டு நட்புப் பாலத்தை நோக்கி நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. ஒரே வியர்த்துக் கொட்டியது. நட்புப் பாலம் வரை ஏராளமான வீடுகள், கடைத் தெருக்கள், சுமை தூக்குபவர்கள் சுமைகளைத் தூக்கிக் கொண்டு நேபாளத்தில் இருந்து சீன எல்லைக்குள் அவரவர் அனுமதிச் சீட்டைக் காட்டி விட்டு நுழைந்து கொண்டிருந்தார்கள். சுமை தூக்குபவர்களில் சிறு பையன்கள், பெண்கள், மற்றும் பெண்கள் தான் அதிகம் காணப்பட்டனர். எங்கள் ட்ரக்கில் இருந்து நாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் அடங்கிய சிவப்புப் பைகள், மற்றும் சாப்பாட்டுப் பொருட்கள், காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் முதலியன சுமை தூக்குபவர்களால் ஏற்றப்பட்டு சீன எல்லைக்குள் நுழைந்து கொண்டிருந்தன. நாங்கள் நட்புப் பாலத்தை அடந்தோம். நேபாள அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ட்ராவல்ஸ் காரர்களே செய்து வெளியே போகும் அனுமதி வாங்கி விட்டதால் நாங்கள் இனிமேல் சீன அரசின் அலுவலகத்திலே தான் தனித் தனியாக ஒவ்வொருவராக அனுமதி பெற வேண்டும்.

இந்த நட்புப் பாலம் "1985-ல் " கட்டப்பட்டிருக்கிறது. நட்புப்பாலத்தின் இருபக்கமும் இமயமலைத் தொடரின் ரம்மியமான காட்சிகள். மலை மேல் உயரத்தில் சில வீடுகள்,அதில் பயமில்லாமல் ஏறி விளையாடும் குழந்தைகள். பாலத்துக்குக் கீழே ஆர்ப்பரித்து ஓடும் நதி. "போடேகுயிச்சி" என்று சொல்கிறார்கள். மிக வேகம், சத்தமும் கூட. அதைப் படம் பிடிக்கலாம் என்று எங்களில் சிலர் முயலச் சீன அரசாங்கக் காவலாளியால் எச்சரிக்கப் பட்டோம். படம் எடுக்கக் கூடாதாம். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கையில் வைத்திருந்தோம்.எங்களுக்கு ட்ராவல்ஸ்காரரால் நம்பர்கள் அளிக்கப் பட்டிருந்தன. அதன்படி என் நம்பர் 12, என் கணவர் நம்பர் 13. எல்லாரும் நம்பர் படி வரிசையில் நின்று கொண்டோம். சீன அரசின் அலுவலருக்கு எங்களைப்பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்கு உதவ வேண்டிய உதவியாளர் வந்ததும் தான் நாங்கள் போகமுடியும்.அது வரை காத்திருந்தோம். அவர் வந்து எங்கள் குழு விசாவைக் காட்டிக் கிட்டே நின்று கொண்டிருக்க ஒவ்வொரு நபராகப் போய் அனுமதி பெற்றுச் சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்தில் நுழைந்தோம்.

12 comments:

Porkodi (பொற்கொடி) said...

ரொம்ப முடியலை.. நிதானமா படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன்.. இப்போ தூங்கறேன் :(

Geetha Sambasivam said...

முடியாமல் யாரு வந்து படிச்சுப் பின்னூட்டம் போடச் சொன்னாங்க? எல்லாம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க போதும். உடம்பைப் பார்த்துக்கோங்க.

Porkodi (பொற்கொடி) said...

இந்தா பாட்டி, நீங்க என்னை நீ வா போனே சொல்லுங்க.. இல்லனா வாக்கிங் ஸ்டிக் வாங்கி குடுத்துடுவேன்.. அப்புறம் உறுமினாலும் ப்ரயோஜனம் இல்ல :)

உடம்பு படுத்துது, இருந்தாலும் பாவம் பாட்டி நம்ம பின்னூட்டத்துக்கு காத்திருப்பானு வந்தேன் :)

ஐய்! 1985ல நட்புப் பாலமா! நா அவதரிச்ச உடனே நட்பு பூத்திருக்கு பாருங்க!

Geetha Sambasivam said...

நறநறநறநறநற
பாட்டி, பாட்டினு சொல்றதை

முதலில் நிறுத்துங்க. அதெல்லாம்

நான் அம்பியையே நீ,வா, போனு

சொல்றதில்லை. வேதாவையும்

தான். அதனால் நீங்க சொல்றதை

இப்போ ஏத்துக்க முடியாது.

I just want to keep the

etiquette in the blog world. That is all. In private it is ok.

Hariharan # 03985177737685368452 said...

கீதா,

பாட்டி பேத்தி உரிமைப் போராட்டப் பின்னூட்டத்திற்கிடையே என்ன சொல்ல வந்தேன்றதே மறந்து போச்சு :-)))

கைலாயம்னு நீங்க சொல்றது மானஸரோவரா? எவரெஸ்ட் சிகரம் தெரியற இடத்தில் வெய்யிலால் வியர்வை?

அது சரி...1985ல அவதரிச்சவங்க பாட்டின்னு உரிமையா கூப்பிடறாங்கன்னா மனக்கணக்கா யோசிச்சாலும் ப்ளாட்டினம் ஜூப்ளி யாச்சே :-)))

அன்புடன்,

ஹரிஹரன்

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrrr
@பொற்கொடி,
,
@தி.ரா.ச.

@ஹரிஹரன்,
நாளைக்கே என் வயசைப் பத்தி ஒரு disclaimer கொடுக்கிறேன்.
20,25 வயசுக்காரங்கள்ளாம் பாட்டினு கூப்பிடறது வேணும்னுதான்னு தெரியலை? அதெல்லாம் பொறாமை, வயித்தெரிச்சலில் சொல்றது. நறநறநறநறநற எனக்குக் குறைஞ்ச பட்சம் 70-வயசாவது ஆயிருக்கணும்.எங்க அம்மா இப்போ இருந்தால் 72, 73வயசு ஆகும். அப்போ நான் எங்க அம்மாவுக்குப் பெண்ணா? தங்கையா? நறநறநறநற, இந்த வலை உலகில் என் வயசு பத்தியே ஒரே பேச்சு. grrrrrrrrrrrrrrrrrrrrrr

Geetha Sambasivam said...

ஹரிஹரன்,
மலையில் நாங்கள் இருந்தாலும் எவரெஸ்ட் தெரிந்தாலும், வெயிலும் இருந்தது. கடல் மட்டத்திற்கு மேல்தான் இருந்தோம்.இருந்தாலும் பகலில் நல்ல வெயில் அடிக்கிறது. இது எல்லாம் நேபாள், சீன எல்லையில்தான். மேலே போகப் போகக் குளிர் அதிகம் ஆகிறது. அது பத்தியும் எழுதுகிறேன், படியுங்கள்.
சரியாகச் சொன்னால் எவெரெஸ்ட் மலையின் பின்னம் பக்கமாகப் போனோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கிட்டத் தட்ட 400, கி.மீ போனால் எவெரெஸ்ட்டைப் பார்க்க முடியும்.
கைலை, மானசரோவர் இரண்டுமே பார்த்தோம்.

EarthlyTraveler said...

First time commenting.romba romba vivirangalodu azhaga ezhudi irukeenga.Idellam oru print eduthu vaichukalamnu oru yennam. 10 varushathiru pin enakku ubayogama irukkum parungo.permission venum.

niraya sollanumnu vandhen,rendu cinna vayasu karanga nara nara nara sandai pathadhum marandhu pochu.manchikonga.--SKM

Geetha Sambasivam said...

வாங்க, வாங்க, சண்டைக்கோழி, உங்க பின்னூட்டங்களைப் படிச்சிருக்கேன். ஹி,ஹி,ஹி, இந்த சண்டை எங்களுக்குப் பழகிப் போச்சு, நீங்களும் வாங்க, உங்களோடயும் சண்டை போடலாம், பேரே சொல்லுதே, ஹி ஹி ஹி.
அப்புறம் நான் என்ன எழுதிட்டேன்னு அனுமதி எல்லாம் கேட்கறீங்க. பத்து வருஷம் கழிச்சு என்ன அடுத்த வருஷமே போயிட்டு வாங்க, அதனாலே ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சிக்கோங்க, சரியா?

Geetha Sambasivam said...

வேதா(ள்), நான் இன்னும் டார்ஜிலிங் பார்க்கலை. எனக்கு மேலே ஊர் சுத்தி இருப்பீங்க போல் இருக்கு, ஹிஹிஹி, உங்க உண்மையான வயசு என்ன?
பொற்கொடி போர்க்கொடி தூக்கினாலும் என்னோட வயசு மாறாதாது, நிலையானது, உறுதியானது. நீங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு வயசு சொல்றப்போ நான் பேச்சு மாறாம இருக்கிறதைப் பாராட்டத் தெரியலியே? grrrrrrrrrrrrrr

EarthlyTraveler said...

Romba thanks mami.unga recent postum padichutten.ivalo details eppdi ninaivu vaithu adhai type panni...great!

adutha varshamae poardha?Veru pala kadaimaigal ulladhu.so vitturuvom kadavul sidhathirrku.

Sandaikozhi en ponnunga.Enakku sandai poda varadhu.adhu ava blog.
indha varusham India la padikka poita,so not able to continue,so avala mudiyira varaikum nan ava blog moolama suthi vandhuttu irukken.--SandaiKozhi's Mom-SKM

EarthlyTraveler said...

Thanks a lot. I posted my comment before,but some blogger problem occured.so comment vandhadha varalaya theriyala.

unga pudhu padhivum padichutten. Indha comment post panna mudinja will post my comment over there later--SKM