எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 23, 2007

சிதம்பர ரகசியம் - 18- .சித்சபையின் உள்ளே!

சிதம்பர ரகசியம் - 18- சித் சபையின் உள்ளே!

சித்சபையின் உள்ளே இருக்கும் நடராஜத் திருமேனியையும், சிதம்பர ரகசியம்னு சொல்றது என்னன்னும் பார்த்தாகி விட்டது. இந்தச் சிதம்பர ரகசியம் இருக்கும் பகுதி ஒரு திரையால் மூடப்பட்டிருக்கும். திரையை விலக்கித் தீப ஆராதனை காட்டுவார்கள்.பொன்னாலாகிய ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு உருவம் ஒன்றும் தெரியாது. பரம்பொருளின் உருவமற்ற தன்மையைப் பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும். நடராஜரின் ஆன்மா அங்கே உறைந்துள்ளதாயும் கருதப் படுகிறது. ஆத்மஸ்வரூபமாக இறைவன் அங்கே இருக்கிறார் என்றும் இறைவனின் ஆன்மஒளி உறைந்திருக்கும் இதயம் அது என்றும் சொல்லப் படுகிறது.
நம்முள்ளேயும் அந்த ஒளி ஊடுருவி நம்முள்ளேயும் இறைவன் உறைகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும். அருவமாக நடராஜரும், சிவகாமசுந்தரியும் உறைந்திருக்கும் இடமாய்க் கருதப் படுகிறது. நடராஜர் "சொரூபம்" என்றால் சிதம்பர ரகசியம் "அரூபம்" ஆகும். இதைத் தவிர அங்கே ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் ஸ்படிகலிங்கமோ "ரூபரூபம்" அதாவது, அருவுருவம், உருவமானதும், உருவம் அற்றதும் ஆகும். இப்போ சித்சபையின் உள்ளே இருக்கும் மற்றக் கடவுளரைப் பார்ப்போம்.

நடராஜரையும் சிவகாம சுந்தரியையும் தவிர அங்கே "சந்திர மெளீஸ்வரர்" என்னும் ஸ்படிக லிங்கமும் உள்ளது. இந்த லிங்க ஸ்வரூபமும் தீட்சிதர்களால் தினப்படி பூஜிக்கப் படுகிறது. எப்போதில் இருந்து என்று வரையறுக்கப் படமுடியாத காலத்தில் இருந்தே பூஜிக்கப் பட்டு வருகிறது. இந்த லிங்க ஸ்வரூபத்தின் காலமும் வரையறுக்கப் படவில்லை. இது நடராஜராலேயே உருவாக்கப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. தன் தலையில் தான் சூடிக் கொண்டிருக்கும் இளம்பிறையின் குளிர்ந்த மதுரமான கிரணங்களால் நடராஜர் இதைச் செய்தார் எனச் சொல்லப் படுகிறது. தன்னுடைய பிரதிநிதிகளாக தீட்சிதர்களை நியமித்துத் தினசரி பூஜை செய்யும்படி பணித்தார் எனச் சொல்கிறார்கள்.

சிதம்பரம் கோவிலில் வைதீக முறைப்படி வழிபாடு செய்யப் படுகிறது. மற்றக் கோவில்களின் வழிபாட்டு முறைகளோடு ஒப்பிட்டால் , மற்றச் சிவன் கோவில்களில் சைவ ஆகம வழிபாடு தான் செய்யப் படுகிறது. ஆனால் இங்கோ வைதீக முறைப்படி வழிபாடு. இதுபற்றி முன்னொருமுறை ஒரு நண்பர் சந்தேகம் எழுப்பி இருந்தார். ஆனால் இன்று வரை எனக்கு அதற்கான ஆதாரம் கிட்ட வில்லை. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி 6 முறைகள் அபிஷேஹம், ஆராதனை செய்யப் படுகிறது, தீட்சிதர்களால். வெள்ளை வெளேரென இருக்கும் ஸ்படிக லிங்கத்தைத் தவிர இன்னொரு நடராஜரின் பிரதியும் இங்கே உள்ளது. அது தான் "ரத்ன சபாபதி"!

கிட்டத் தட்ட நடராஜரின் பிரதியான இந்த நடராஜர் மரகதக் கல்லால் ஆனவர். இவரை தினமும் செய்யும் 6 கால வைதீக வழிபாட்டில் 2-ம் கால வழிபாட்டின்போது பூஜிக்கிறார்கள். சாதாரணமாய்ப் பார்க்கையில் கறுப்பாய்த் தான் இருப்பார் இவர். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து கற்பூர தீப ஆராதனை இவரின் எதிரே காட்டப் படும்போது உதயக் கால சூரியனைப் போல் செக்கச் சிவந்த நிறத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார். இவரைத் தரிசிக்காமல் சிதம்பரம் நடராஜரையும், சிதம்பர ரகசிய தரிசனத்தையும் பார்த்த பேறு கிட்டாது எனவும் சொல்லப் படுகிறது. இவர் வந்த வரலாறு? சிதம்பர புராணம் என்ன சொல்கிறது? நாளை பார்ப்போம்.

14 comments:

வடுவூர் குமார் said...

சிதம்பரம் கோவிலை அணு அணுவாக ரசித்திருக்கிறீர்கள் போலும்.
இன்னும் இந்த கோவிலுக்கு உள்ளே போக நேரம் வாய்க்கவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

ஒரு சின்ன சந்தேகம்...

மரகதம் என்பது பச்சைக்கல், நீங்க சொல்லிய ரத்ன சபாபதி சிகப்பாக ஜொலிப்பதால் அது மரகதமாக இருக்காது, ரத்தினக்கலாலத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

மரகத நடராஜர் தெற்கில், திருப்புல்லாணி அருகே இருக்கிறார்.(ஊர் பெயர் மறந்துவிட்டது)வருடத்திற்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனமில்லாது தரிசனம் தருவார்.

அபி அப்பா said...

கீதாம்மா உடம்பு சிலிர்குது! இப்போ உடனே என் கட்டளை தீட்ஷிதர் ஸ்ரீ S.R. நடராஜதீட்ஷிதர் கிட்டே போன் செய்தேன். வரும் போது உங்க சிதம்பர ரகசியம் போஸ்ட் அத்தினியும் பிரிண்ட் எடுத்து வர சொன்னார்.செய்வேன்!!

Geetha Sambasivam said...

வடுவூர், நீங்க போகலையா சிதம்பரம் கோயிலுக்கு நிஜமாவே? சீக்கிரமாப் போயிட்டு வாங்க.

@மதுரையம்பதி, நான் அறிவேன் அந்தக் கோவிலை, திரு உத்தரகோச மங்கை, பழைய ராமநாதபுரம் மாவட்டம். என்னோட ஒரு அத்தை அங்கே இருந்தார்கள். என்றாலும் சென்றதில்லை அந்த ஊருக்கு. சிதம்பரத்தில் மரகதமா, ரத்தினமா என்று தெளிவு செய்கிறேன் விரைவில். ரத்தினம் என்றால் பொதுவாகச் சிவப்பு நிறம் தான். என்றாலும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல தெளிவாக்குகிறேன்.

@அபி அப்பா, எங்கள் கட்டளை தீட்சிதர் திரு ராமலிங்க தீட்சிதர் பேரையும் அவரிடம் சொல்லுங்கள். அவரின் வழிகாட்டலிலும், கொடுத்து உதவிய குறிப்புக்களினாலும் தான் நான் எழுத முடிகிறது.

அபி அப்பா said...

கீதாம்மா! ரத்னசபாவதி ரத்தினம்தான். ஆனால் அது சித்சபைக்கு வரும் போது அதாவது 2ம்கால பூஜைக்கு வரும் போது பழுப்பு கலரில்தான் இருக்கும். பின்பு சித்சபையின் மேற்கு, வடக்கு, தெற்கு கடவுகள் மூடப்பட்டு(கிழக்கு கதவு மட்டுமே த்ற்ந்திருக்கும் அப்போது)ரத்தின சபாபதியின் பின்பக்கமாக சூடம் காண்பிக்கப்படும் நேரத்தில் சூரிய சிவப்பாக தெரியும். பிறகு நடராஜர் காலடிக்கு சென்ற பின் பழுப்பு கலரில் தெரியும்!

*கண்டிப்பாக ராமலிங்க தீட்ஷதருக்கும் சொல்கிறேன்.அவருக்கும் ஒரு பிரிண்ட் தருகிறேன்!

ஜெயஸ்ரீ said...

தொடரை விடாமல் படித்து வருகிறேன். அனுபவித்து படித்தேன். தேவையான எல்லா விவரங்களையும் கொடுத்து முழுமையான தொடராக கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Geetha Sambasivam said...

வாங்க வேதா, மின் தடை எல்லாம் எப்படி இருக்கு? இல்லை, உங்க பகுதியிலே ஒண்ணும் இல்லையா? :P சிதம்பரம் போய் நிதானமாப் பார்த்துட்டு வாங்க.

நன்றி ஜெயஸ்ரீ.

@அபி அப்பா, உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

hotcat said...

Geetha Madam
Really superb job...Keep it up!! I spent really 4 hours to read your
Chidhabara ragasiyum....from part 1 to 12, not yet completed till 18......Dont worry about comments, keep writing....I will try to cope up with this. your writing style is good.
Research: Thanks for your efforts in researching the topics..
Howz Memphis, any plans to come westcoast (portland)....ifso, let me know.

Shankar

Geetha Sambasivam said...

ரொம்பவே நன்றி சங்கர், உங்கள் கருத்துக்களுக்கும், அழைப்புக்கும். அங்கே வந்தால் கட்டாயம் தெரிவிக்கிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கொஞ்சம் நாட்கள் ஆகும் அடுத்த பதிவுக்கும். வேலை கொஞ்சம் அதிகம். தாமதம் தவிர்க்க முடியவில்லை.

hotcat said...

shall wait for this blog....make it worth waiting...


Shankar

Avial said...

gr8 post ..just got my moeries of chidambaram visit.photo pottu thakirkalae ..
"Rupam Arupam ruparpam " concept is the speciality of cdm. Good u made that point.

Cheers,
Madhu

Avial said...

Naother piece of info abt Natarajar that i wanted to share .
Natrajar is the King of Gods. Only a few of them are treated as King of Gods . ex Natarajar , Rangarajar , Varadarajar , etc .

The speciality abt these Raja Gods are they are south/North facing unlik other temples where the supreme is Eat/west facing .
information courtesy : Paramacharya's deivathin kural

VSK said...

பல ஆண்டுகள் சிதம்பரத்தில் வசித்திருக்கிறேன்.

உங்கள் பதிவு பல நினைவலைகளைத் தூண்டி விட்டிருக்கிறது.

மிக்க நன்றி.

இந்துவாய்ப் பிறந்த அனைவரும், குறிப்பகத் தமிழர்..., வாழ்வில் ஒருமுறையாவது கண்டு களிக்க வேண்டிய ஸ்தலம் இது.

Geetha Sambasivam said...

மதுசூதனன், உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

@வீஎஸ்கே சார், நீங்களும் சிதம்பரமா? சிதம்பரத்துக்காரங்க நிறைய இருக்காங்க போல் இருக்கே! ரொம்பவே நன்றி உங்களோட மலரும் நினைவுகளைத் தூண்ட இந்தப் பதிவு காரணமாய் அமைந்ததைக் குறிப்பிட்டதற்கு.