எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 09, 2007

சிதம்பர ரகசியம் - விளக்கம் கொடுப்பது என் கடமை!

கொஞ்சம் வெட்கமாவே இருக்கு. ஏற்கெனவே மோகன் தாஸ் கேட்டிருந்தார். சிதம்பர ரகசியம் பத்தி என்ன எழுதி இருக்கீங்கனு. அப்புறம் இப்போ நந்திதா அவர்கள். மற்றப் பேருக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம். கேட்கத் தயங்குகிறார்கள்னு நினைக்கிறேன். அப்புறம் போன பதிவில் எழுதியிருக்கும் விஷயம் ஆன அனாகதவுக்கும் அனஹதாவுக்கும் உச்சரிப்பு மட்டுமில்லாமல் அர்த்தமும் மாறுபடும். தவறுக்கும் வருந்துகிறேன். அது பற்றியும் விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். இன்று வேறு வேலைகள் வந்துவிட்டதால் இன்று இரவுக்குள்ளோ அல்லது நாளையோ கட்டாயமாய் தெளிவான விளக்கம் கொடுக்கிறேன். படிப்பதோடு மட்டுமில்லாமல் தவறுகளைச் சுட்டியும் காட்டி என்னைத் திருத்திக் கொள்ள உதவும் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3 comments:

சதுக்க பூதம் said...

நல்ல பதிவுகள் உங்களுடையது. ரொம்ப நாளாய் எனக்கு ஒரு சந்தேகம். சிதம்பரம் நடராஜருக்கு தமிழ் மேல் மட்டும் அப்படி என்ன வெறுப்பு?

Geetha Sambasivam said...

@ம்ம்ம்ம்ம்ம், சதுக்க பூதம், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. பை தி பை, கடவுளோட மொழி மெளனம். நீங்க ஹூஸ்டன் தானே, "சுகிசிவம்" சொன்னதைக் கேட்டு இருப்பீங்களே?

nandhitha said...

அன்புடையீர்
வணக்கம் பல.
பஞ்ச பூதங்களுக்குள் ஆகாயம் ஒன்று என்பது வேதாந்த முடிவு. இல்லாமலிருப்பதுவே ஆகாயம். ஆகாயம் என்ற ஒன்று இல்லாமற்போயின் மற்ற கோள்களின் இருப்பு சாத்தியமற்றது, ஒரு எலெக்ட்ரான் தனது சுற்றுப் பாதையில் போய் வர ஆகாயம் தேவைப் படுகிறது. என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியபடி இல்லாமல் இருப்பவன் தான் இறைவன் என்ற தத்துவத்தை விளக்குகிறதோ என்னவோ. திருமூலரும் என்னைப் போல் குழம்பி இருப்பார் போல் தோன்றுகிறது, அவரும் " மரத்தில் மறைந்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமதயானை, பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம், பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்" என்றே கூறினார். அது போகட்டும் எந்த எந்த இடங்களிலெல்லாம் ஆகாய லிங்கம் இருக்கிறதோ அங்கெங்கெல்லாம் காளியும் இருப்பதேன்?. ஊர்த்துவ தாண்டவம் பெண்களுக்கு மறுக்கப் பட்டதெனில் அதனை ஆடி காளியை வென்றி கொண்டதாகக் கூறப் படுவது வாதத்திற்கு ஒவ்வாதது,. விவரம் வேண்டுகிறேன்.
இல்லாததிலிருந்து எந்தப் பொருளும் உருவாகாது என்பதும் வேதாந்த முடிவு. கீதையில் கண்ணனும் இதையே தான் சொல்கிறார், அப்படியெனில் ஆகாயத்திலிருந்து காற்று உண்டானது என்பது எப்படி?.
மேலும் பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருக்கின்றன.
அன்புடன்
நந்திதா