எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, September 24, 2007

சிதம்பர ரகசியம் - ஆடிக் கொண்டானடி பல வேடிக்கைகள் செய்தே!
உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும்போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம்.


ஆனந்த தாண்டவம் என்பது சிதம்பரத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்றும், தன்னுடைய பக்தர்களான பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் மற்ற பக்தர்களுக்காகவும் வேண்டி இறைவனால் ஆடப்பட்டது. இதைத் தேவாதி தேவர்களும் கண்டார்கள். இந்த நாட்டியத்தைக் காணத் தேவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஸ்ரீமந்நாராயணனே தன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு, கோவிந்த ராஜனாக இங்கே வந்து அமர்ந்து கொண்டு தினந்தோறும் கண்டு களிக்கிறான் என்றால் அந்த ஆட்டத்தை என்னவென்று சொல்லுவது?

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது. ஆனந்தத் தாண்டவத்தில் இருக்கும் "அபஸ்மார புருஷம்" என்பது இதில் இருக்காது. மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடும் ஆட்டம் "சந்தியா தாண்டவம்" என்று சொல்லப் படுகிறது.


டிஸ்கி: அந்த அந்த நாட்டியக் கோலத்துக்கு ஏற்ற படங்கள் சரியாகக் கிடைக்கவில்லை. படம் போட ஆரம்பிச்ச பின்னர் நிறுத்தவும் முடியலை. தவறான நாட்டிய முத்திரைகளுடன் கூடிய படங்களுக்கு மன்னிக்கவும்.

8 comments:

மதுரையம்பதி said...

டிஸ்கியெல்லாம் போட்டு தப்பிக்க பாக்குறீங்க புரியுது....ஆனாலும் ஒரு கேள்வி.. கஜ ஹஸ்தம் என்னும் முத்திரை எது?..:-)

ஜீவா (Jeeva Venkataraman) said...

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து நடராஜப் பதிவில் எல்லாம் சரியா இருக்கான்னு கொஞ்சம் சரி பார்த்துடுங்க!

அபி அப்பா said...

மௌலி சார், பொன்ஸ் பதிவுக்கு ஒரு தடவை போய் "கஜ ஹஸ்தம்"ன்னு பின்னூட்டம் போட்டு பின்ன நானெ எடுத்துட்டேன்!!!:-)))

மதுரையம்பதி said...

அபிஅப்பா, நீங்க சொன்னதைப் படித்தேன்னு மட்டும் இங்க சொல்லி விட்டுடறேன்.

Baskaran a said...

கைலை மலையில் ஆல மரம் உள்ளதா

Geetha Sambasivam said...

அங்கே புல், பூண்டுகள் கூட முளைக்க முடியாது. முழுவதும் பனி, பனி, பனி!

Baskaran a said...

சந்தியா தாண்டவம் என்பது மாலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஆடப் பட்டது. பொதுவாக சிவனின் தாண்டவங்கள் அனைத்துமே மாலை நேரத்தில் அமைந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் இது கைலை மலையில் ஆல மரத்தின் அடியில் ஆடப் பட்டதாய்க் கூறப் படுகிறது.

உங்கள் எழுத்தில் ஆல மரம் வரு கின்றது

Geetha Sambasivam said...

அது கல்லாலமரம் என்பார்கள். என்றாலும் நம் கண்களில் படுவதில்லை. யாரும் பார்த்ததாகவும் சொல்லவில்லை.