அக்னி ஏந்திய மேல் இடக்கை சற்றே வளைந்து பிறை வடிவில் காணப்படும் இது அழித்தலைக்குறிக்கின்றது. பிரபஞ்சம் தோன்றியபோதே பல நுண் துகள்களும் தோன்றி நிர்மூலமாகுதலை இது உணர்த்துவதாய்க் கூறுகின்றனர். வலது கரங்களில் ஒன்று அபய ஹஸ்தம் காட்டுகின்றதல்லவா? இது நான் உன்னைக் காக்கின்றேன் என்னும் காத்தல் தொழிலைக் குரிப்பிடுவதோடல்லாமல், பெரு வெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்து விடாமல் காக்கப் பட்டுப் பின்னர் அவை ஒன்றோடொன்ரு சேர்ந்து பெரும் துகள்களாய் மாறி, பின்னர் அவையே கோள்களாயும் உருமாறியதாய்க் கூறுகின்றனர். இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதையும் இந்தக் காக்கும் கரம் கூறுவதாய்ச் சொல்லுகின்றனர்.
இடக்கை யானையின் தும்பிக்கையைப் போல் காணப்படும் இது கஜஹஸ்த முத்திரை காட்டுகின்றது. இறைவனின் இந்த நான்கு திருக்கைகளும் நான்கு திசைகளையும் சுட்டுகின்றன. தீ ஜுவாலைக்கு நடுவே நின்று ஆடுகின்றாரல்லவா நடராஜர்? அந்தப் பேரொளியைத் தானே திருவாசியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தத் திருவாசி பிரகிருதியைக் குறிக்கின்றது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றிச் சுற்றி வரும் இறப்பையும், பிறப்பையும் அதிலேயே நாம் உழலும் சம்சார சாகரம் என்னும் பெரும் சக்கரத்தையும் குறிக்கின்றது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும் ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவம் இதைக் குறிப்பதாய்ச் சொல்லுகின்றனர்.
நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப் படுகின்றது. இறைவனின் பல்வேறுவிதமான கோட்பாடுகளையும் இது காட்டுவதாய்ச் சொல்லப் படுகின்றது. வலச் செவியில் ஆண் அணியும் தோடும், இடச் செவியில் பெண்கள் அணியும் தோடும் காணப்படுவதால் உலகியல் தத்துவத்தில் உள்ள ஆண், பெண் கோட்பாடுகளை வலியுறுத்துவதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாவது நெற்றிக் கண்ணானது ஞானத்தையும், வளர்பிறை, மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் மூலம் காலச் சக்கரத்தையும், நடராஜர் ஆடி, ஆடிச் சுழன்று வருவது ஆக்கலையும், அழித்தலையும் குறிக்கின்றது. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் மரணத்தை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவேண்டும் என்பதையும் காட்டுகின்றது.
இந்து சாஸ்திரங்களின்படி இந்த அண்ட சராசரமும் பஞ்சபூதங்களால் ஆனது. நீர், நிலம், காற்று, அக்னி, மற்றும் ஆகாசம் ஆகியவற்றின் வடிவமாகவே நடராஜத் திருமேனியின் அங்கங்கள் குறிக்கப் படுகின்றன. ஊன்றிய வலப்பாதம் பூமியையும், மேலிருக்கும் இடக்கை அக்னியையும், மெய்ம்மறந்த ஆனந்த நடனத்தால் பரந்து விரிந்த ஜடாமுடியின் மூலம் காற்றையும், சிரத்தில் உள்ள கங்கை நீரையும், கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கின்றது. பஞ்சபூதங்களும் நடராஜத் திருமேனிக்குள் அடக்கம். இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த கருத்தை உள்ளடக்கியதே சிவ தாண்டவம் ஆகும். இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப் பெரிய கோள்கள் வரை அனைத்துப் பொருட்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.
கல வரலாற்று அறிஞர் ஆன ஆனந்த குமாரசாமி எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்தும் தத்துவமே நடராஜத் திருமேனி என்கின்றார். "Tao of Physics"என்னும் நில்லாசிரியர் ஆன இயற்பியல் வல்லுனர் ஆன பிரிட்ஜாப் காப்ரா என்பவர் நவீன இயற்பியலுக்கும், கிழக்கத்திய ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாய்க் கூறுகின்றார். 1975-ம் ஆண்டு வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பதிப்பிக்கப் பட்டு விற்பனையாவதோடு அல்லாமல் 25 மொழிகளில் மொழி பெயர்க்கவும் பட்டுள்ளது.
காப்ரா அவர்கள்" நவீன இயற்பியலின்படி ஆக்கல், அழித்தலின் தாளம், -Rhythm என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர்பொருள் சார்பில்லாத மூலக் கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித் தாண்டவத்தின் ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது. நவீன இயற்பியல் அறிஞர்கலுக்கு சிவ தாண்டவன் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்டசராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப் படும் ஆக்கல் மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்கலுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம். பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச்சிலைகளாய் உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதி நவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது."
அமெரிக்க விண்வெளி ஆராய்சியாளர் காரல் சேகன் "பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவாகவே கண்டு அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்" என்கின்றார். quantum physics and the Dance of Nataraja என்ற கட்டுரையில் ஜார்ஜ் காலமரஸ் என்பவர் இந்தத் தத்துவத்தைப் பாராட்டி எழுதி இருக்கின்றார். சுவாமி விவேகானந்தர் "எண்ணற்ற பெருமைகளையும், வானம் போல் தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்" என்று பிரார்த்திக்கின்றார்.
பிரம்மா படைப்பார், விஷ்ணுவோ காத்தலோடு படைக்கவும் செய்வார். ருத்ரரோ அழித்தலுக்கான கடவுளாய் இருந்தாலும் படைத்தலும், காத்தலும் செய்வார். மகேஸ்வரரோ மாயையை விலக்குகின்றார் ஆனலும், அவரும் படைத்தல், காத்தல் அழித்தலையும் மேற்கொள்கின்றார். சதாசிவர் மட்டுமே உலக பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பவர். சதாசிவர் நடராஜ வடிவத்தில் பஞ்சகிருதி எனப்படும் ஐந்தொழில்களையும் செய்கின்றார். இந்த ஐந்தொழில்களுமே நடராஜர் வடிவில் அமைக்கப் பட்டிருக்கின்றது நாம் உணருகின்றோம் என ஸ்வாமி விபுலானந்தர் "நடராஜ வடிவம்" என்ற நூலில் எழுதி இருக்கின்றார்.
நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம். நடராஜ தத்துவதை விட மர்மமாக இன்று நடராஜர் படம் போட முடியாமல் ரொம்பவே சிரமமாகப் போய்விட்டது. பல நடராஜ வடிவங்களையும் ப்ளாகர் ஏத்துக்காமல் இந்த வடிவத்தையும் அரை மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளது.
நடராஜர் திருவடிகளே போற்றி!
6 comments:
ஷெட்யூல் பண்ணி வச்சால் ஒத்துக்கவே இல்லை ப்ளாகர், என்னனு புரியலை, இரண்டு பதிவும் பப்ளிஷ் ஆகிடுச்சு. ஒரேயடியாய்ப் போட்டிருக்கிறதுக்கு மன்னிக்கவும். வந்து படிக்கிறவங்களுக்கு மட்டும் இந்த விண்ணப்பம்.
மிக சிறந்த ஒப்பிடு,
2 ப்ளாக்ஸ் என்ன, ஆனந்த கூத்தனை, சிதம்பரத்தை பற்றி எத்தனை ப்ளாக்ஸ் ஒரே நேரத்தில் வெளியிட்டாலும் படித்து மகிழ்வோம்.
நன்றி
லோகன்
நல்ல விளக்கங்கள், மிக்க நன்றி கீதாம்மா.
ஐயனின் ஆனந்த தாண்டவத்திற்க்கு அருமையான விளக்கங்கள், எவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதுகின்றீர்கள்.
மிக்க நன்றி கீதாம்மா
ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா
படித்தவர்கள் அனைவருக்கும் இந்தச் சுட்டியிலும் போய்ப் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். என் நண்பர் சிவசிவா அனுப்பினார்.
http://press.web.cern.ch/Press/PressReleases/Releases2004/PR10.04ECouncil.html
http://www.fritjofcapra.net/shiva.html
For a bigger picture:
http://doc.cern.ch//archive/electronic/cern/others/PHO/photo-hi/0406040_02.jpg
===========
சிவானந்த லஹரி - 56
नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनी-श्रेयसे
सत्यायादिकुटुंबिने मुनिमन: प्रत्यक्ष-चिन्मूर्तये ।
मायासृष्ट-जगत्त्रयाय सकलाम्नायन्त-संचारिणे
सायं तान्डव-संभ्रमाय जटिने सेयं नातिश्शंभवे ॥ ५६ ॥
நித்யாய த்ரிகு3ணாத்மனே புரஜிதே காத்யாயனீ-ஃச்ரேயஸே
ஸத்யாயாதி3குடும்பி3னே முனிமன: ப்ரத்யக்ஷ-சின்மூர்தயே |
மாயாஸ்ரு\ஷ்ட-ஜக3த்த்ரயாய ஸகலாம்னாயாந்த-ஸஞ்சாரிணே
ஸாயம் தாண்ட3வ-ஸம்ப்4ரமாய ஜடினே ஸேயம் நதிஃச்-ஃசம்ப4வே || 56||
======
சம்பந்தர் தேவாரம் - 1.41.4:
துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடைய என்னாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாடமாளிகைதன்மேல் ஏறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.
மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாதவராய்த், தோற்றமும் இல்லாதவராய், ஓளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.
இறப்பு பிறப்பு இல்லாத சோதியாய், சர்வசங்கார காலத்து நள்ளிருளில் நட்டமாடும் நம்பர் இவர் என்கின்றது.
---
திருவாசகம் - சிவபுராணம் :
"........
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே ....... "
நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே!
நள்ளிருள் - செறிந்த இருள். இது, முற்றழிப்புக் காலத்தை உணர்த்துவது. 'பயில' என்பது, 'பயின்று' எனத் திரிந்தது; 'ஒழிவின்றி' என்பது பொருள். இந்நிலையிற் செய்யும் நடனம், 'சூக்கும நடனம்' எனப்படும்.
தில்லைக் கூத்துத் தூல நடனமாகும். சூக்கும நடனம், தூல நடனம் இரண்டினாலும், 'உலகிற்கு முதல்வன் நீயே' எனக் குறித்தவாறு.
Post a Comment