எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 09, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! முகலிங்கம்!

முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப் படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது. இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப் படுகிறது. பரம்பொருள் ஆன அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு இறைவனின் சொரூபம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் சொல்லப் படுகிறது.

இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், தன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் "தத் புருஷம்" என அழைக்கப் படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது "அகோரம்" என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் "சத்யஜோதம்" என அழைக்கப் படும். இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் "வாமதேவம்" எனப் படும், இது சிவந்த நிறத்தில் காணப் படும். ஈசான்ய திசை என்று அழைக்கப் படும் வட கிழக்குத் திசையில் காணப் படுவதோ, "ஈசான்ய முகம்" என்றே அழைக்கப் படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது.

முதலில் ஒரு முகம் கொண்ட லிங்கத்தைப் பற்றிப் பார்க்கலாம். தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும் இந்த லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடைவார்கள். சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது எனச் சொல்கின்றார்கள். தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கிறார்கள். இந்த நிருதி தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும் அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்கங்கள் காணப்படுவதாயும் சொல்கின்றார்கள். வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம் என ஆய்வாளர்கள் சொல்வதாயும் தெரிகின்றது. ஆந்திராவில் உள்ள குடிமல்லம் என்னும் பகுதியிலும் சிவனின் முழுவடிவமும், லிங்கமாய் ஆன வரலாறும் காணப் படுவதாய்ச் சொல்கின்றார்கள். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரிகிறது.

முகலிங்கங்கள் என்று தேடினால் அதிகமாய்க் கிடைக்கவில்லை. ஒரு சில கிடைத்தவற்றைப் போடுகிறேன். தொடருக்கும், படத்துக்கும் சம்மந்தம் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். :((

1 comment:

Jayashree said...

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே

திருமந்திரம் இப்ப பொழிப்புரை படிச்சிண்டு இருக்கேன். அதுல திருமூலர் சொல்லறது பொழிப்புறை புரிந்தாலும் அதோட SUTLE MEANING ஐ comprehend பண்ண உள்நோக்கு வேணூம்னு தோனித்து.உள் அடங்கிய,உள்நோக்கோடு....

நீலகண்டனே நஞ்சுண்ட மிடறுன்னு தவறா புரிஞ்சுக்கறா தெரியாம என்கிறாரோ திருமூலர் ?ரெண்டு நாளா மண்டையை பிச்சிண்டு இருந்தேன் . நீங்களும் SHARE பண்ணிக்கறேளா PLEASE ??: I MEAN மண்டை பிச்சிங்க் :)))))))

ஞாநிகளுக்கு மட்டுமே புலப்படும் முகமோ அதோமுகம்? அப்படி பாக்கப்போனா எல்லா முகங்களுமே சூக்ஷுமம் தான் !!