எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 01, 2019

அரங்கன் அருளை வேண்டி!

ஜனவரி மாதம் கடைசியா இந்த வலைப்பக்கம்  எழுதினது. அதன் பின்னர் பொங்கல், தை மாத விசேஷங்கள் என ஒரே ஓட்டமும், நடையுமாக நாட்கள் செல்ல இடையிடையில் உடல்நலக் கோளாறும் வந்து வந்து போகிறது.  தை மாதத் தேர்த்திருவிழா பற்றிக் குறிப்புகள் இடவேண்டும் என நினைத்துக் கொண்டு கூட்டம் காரணமாகப் போக முடியவில்லை. அதன் பின்னர் மாசித் தெப்பமும் வந்து போய் விட்டது. அதற்கும் போக முடியவில்லை. வெளி ஊரில் இருப்பவர்கள் நாங்க என்னமோ தினம் தினம் ரங்குவைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக நினைப்பார்கள்/நினைக்கிறார்கள். ஆனாலும் இந்தப் பதிவைத் தொடர முடியவில்லை. ஏனெனில் எழுதி வைச்சதைச் சரி பார்க்கணும். இன்னும் சில பதிவுகளில் அரங்கன் திருமலைக்கு வந்து விடுவான். அதன் பின்னர் நடப்பது குறித்துப் படித்துக் குறிப்புகள் எடுக்கணும். எதைச் செய்வது, எதை விடுவது என்று குழப்பமான சூழ்நிலை/மனோநிலை.

எனினும் இதை எழுதவில்லை என்னும் எண்ணம் உள்ளூர இருந்து கொண்டு தான் இருக்கிறது.  அதன் பின்னர் வந்த ஃபெப்ரவரியில் குடும்பத்தில் சில/பல பிரச்னைகள், உடல்நலக்குறைவுகள். சில நாட்கள் கணினியில் உட்கார்ந்துவிட்டு அரைமணி நேரமே ஆகி இருக்கும். மூடும்படி நேர்ந்துவிடும். இதோடு என் தம்பி பிள்ளைக்குக் கல்யாணத்துக்குப் பார்ப்பதால் அது குறித்த விசாரங்கள், கவலைகள், தேடல்கள்! ஏற்கெனவே ஒரு முறைக்கு இரு முறை நெல்லைத் தமிழர் இங்கே பதிவு போடவில்லை என்பதைச் சொல்லி விட்டார். அதோடு இல்லாமல் எல்லோரும் என்னமோ நான் சுறுசுறுப்பாகச் செய்வதாக வேறு எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சுறுசுறுப்பெல்லாம் போய் விட்டது. முடிந்தால் போடுகிறேன். இல்லை என்றால் இல்லை!  காலை  அதிகம் உட்கார முடியாது என்பதால் மத்தியான நேரத்தை எனக்கான நேரமாக்கிக் கொண்டு இருந்தாலும் இப்போதெல்லாம் சிறிது நேரமாவது படுத்து விடுகிறேன். அந்த அரைமணி, ஒரு மணி தாமதத்தின் பின் விளைவுகள் தான் பதிவுகள் சரிவரப் போடமுடியாமல் போகின்றன.  இடைவிடாமல் போட முடியாவிட்டாலும் வாரம் மூன்று பதிவுகளாவது போட நினைத்தாலும் முடியாமல் போய் விடுகிறது.  இனியாவது தொடர்ந்து அரங்கன் கதையை எழுத அவன் அருளை வேண்டி நிற்கிறேன். 

3 comments:

நெல்லைத்தமிழன் said...

நான் அப்படி எழுதியிருந்தாலும், இடுகை போடுவது, அதிலும் அரங்கன் கதை, மிகவும் கடினமானது. குறிப்புகள்லாம் எடுத்து எழுதணும்.

தொடர்ந்து எழுதுங்க. அது மனதின் கவலையை மாற்றும் முயற்சி அல்லவா?

நான் எப்போதும் நீங்க தினமும் அரங்கனைச் சேவிப்பீங்க என்று எண்ணுவதில்லை. நானே வாரம் ஒரு முறைதான் அடுத்த தெருவில் இருக்கும் அனந்த பத்மநாபன் கோவிலுக்குப் போறேன். நானே இப்போ ஸ்ரீரங்கத்தில் இருந்தால், எவ்வளவு வாரத்துக்கு ஒரு முறை அரங்கனைச் சேவிப்பேன் என்று தெரியாது.

நெல்லைத்தமிழன் said...

ஆனா, வாரம் ஒரு முறையாவது இராமானுசரை சேவிப்பேன். கூட்டமில்லாத நேரத்தைக் கணக்குப் பண்ணி பெரிய அரங்கனையும் சேவிப்பேன்.... பார்ப்போம்... எப்போ அது வாய்க்கும் என்று...

Geetha Sambasivam said...

உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலை நெ.த. எங்க உறவினர்களே பலரும் எங்களை அடிக்கடி கேட்பது தான். வாரம் இரு முறையாவது கோயிலுக்குப் போவீங்களா என்று கேட்பார்கள். திருவிழா எனில் போய்ப் பார்த்திருப்பீங்க என்பார்கள். எங்கே! கூட்டம் நெரியும்! அதுவும் கருட வாகனம், ஆனை வாகனம் என்றால் அன்னிக்கு நெரிசல் தாங்காது. குதிரை வாகனம் என்றால் இன்னமும் நெரிசல். அன்னிக்கு வேடுபறி வேறே உண்டே! நாங்க பெரும்பாலும் உள்ளூர்த்தொலைக்காட்சிகளில் காட்டும் அரங்கன் விழாவைப் பார்த்துக் கொள்வோம்.