எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 24, 2007

சிதம்பர ரகசியம் -3 - தல புராணம் - தொடர்ச்சி

புண்டரீகபுர மஹாத்மியம்:

தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும், "பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்", "மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில் உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.

திலவன மஹாத்மியம்:

ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.

வ்யாக்ரபுர மகாத்மியம்:

இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது.

10 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன இப்படி?, ரகசியமா இந்த பதிவுகள்?.....கொஞ்சம் அறிவிப்பு தரலாகாதா?.

ஏனிவே, நல்ல தகவல்கள், நன்றி.

Geetha Sambasivam said...

ரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்லை. நான் எங்கே பப்ளிஷ் செய்யறேன்? ஏதோ "சிதம்பர ரகசியத்தை" விட என்னோட வலைப் பக்க ரகசியம் மண்டையை உடைக்குது. எனக்காக உ.பி.ச. இல்லை பப்ளிஷ் செய்யறாங்க. கமெண்ட் எல்லாம் கூட அவங்க பப்ளிஷ் பண்ணினது தான். நான் இன்னிக்குத் தான் வந்துபார்க்கிறேன். இனி 2 நாளுக்கு ஒரு முறை தான் வர முடியும்னு நினைக்கிறேன்.

dubukudisciple said...

geetha madam.
kalakunga..
oru chinna vendukol. indha samhitai, appadi ippadinu ezhutharthuku bathula ange enna famous, enna ragasiyam ippadi ezhuthungalen

C J Shahjahan said...

சிதம்பரத்துக்காரன் என்பதால் கொஞ்சம் உள்ளே வந்தேன்.ஆன்மீக விஷயங்களை உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளுக்கு விட்டு விட்டு சி ல நடைமுறை விஷயங்கள்..இவ்வளவு வரலாற்று புகழ் மிக்க கோவிலை சரியாகப் பாதுகாக்காமல்,வெறும் வணிகநோக்கில் பாழடைத்துக் கொண்டிருக்கிறோமென்பதே உண்மை.நாட்டியாஞ்சலியின்போதுகூட சரியான துப்புரவு இல்லை. ஜெர்மனியில் இருந்திருந்தால் சுற்றுலாக்காரர்கள் மில்லியன் யூரோக்கள் சம்பாதித்திருப்பார்கள். உருப்படியாக ஏதாவது செய்யமுடியுமா..
ceejay
http://blossomingspace.blogspot.com
சிதம்பரத்தை வைத்து கோலம் என்ற சிறுகதையை பதிவுசெய்துள்ளேன்.கீதா அவர்களின் comments varumaa//

Porkodi (பொற்கொடி) said...

ஏதோ பாவம் பாட்டி எழுத்து இன்னும் புகழ் பெறணுமேனு நாலு வார்த்தை சொன்னா, அதையே கிண்டலா?? (ஓம் நமச்சிவாய முடிவுரைய தான் சொல்றேன்!) எங்க உங்க பல்செட்? அதை எடுத்து வெச்சா தான் சரி வருவீங்க :)

Porkodi (பொற்கொடி) said...

சிதம்பர ரகசியம்னதும் அந்த தொடர் தான் நினைவுக்கு வருது! அதையும் உக்காந்து இந்த குழந்தை பாத்தேனே! தலையெழுத்து :(

நிறைய பேருக்கு தெரியாத தகவல்கள் இதுலயும் வரும்னு நம்பறேன்! :)

cheena (சீனா) said...

புண்டரீகத் தலத்தில் உள்ள பத்து முக்கிய தீர்த்தங்கள், சிதம்பர ரகசியம், ஐய்ந்து சபைகள், ஆடவல்லானின் ஊர்த்துவ தாண்டவம், காளியுடன் போட்டி, ஒன்பது வித ஆடல் தோற்றங்கள் - அடடா - எத்தனை எத்தனை செய்திகள். அத்தனையும் தொடர்களில் அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதே மகிழ்வாக இருக்கிறது.

கீதா, ஆன்மீகத் தொண்டினை அரிய தொண்டாக, சத்தமில்லாமல் செய்து வரும் தங்களைப் புரிந்து கொண்டேன்.

வாழ்த்துகள்

Baskaran said...

Hallo Madam

நான் இப்பொழுது தான் 2007 கட்டுரைகள் படித்து கொண்டு உள்ளேன்.இன்னும் 2008 2009 to 2016 . உள்ளது.

நன்றி
பாஸ்கரன்

Geetha Sambasivam said...

நேரம் கிடைக்கையில் நிதானமாகப் படியுங்கள்.

Baskaran said...

வேகமா போய்டு பின்பு revision விடலாம் என்று உள்ளேன்..