எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 12, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! சார்ங்கபாணி கோயில்!

மற்றப் பாடல்கள் பற்றி அந்த பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. மனம் வருந்திய நாதமுனிகள் பெருமாளை வேண்டிக் கொண்டு மற்றப் பாடல்களை எவ்விதம் கண்டறிவோம் என வருந்தினார். அவர் கனவில் தோன்றிய பெருமாள் திருநெல்வேலி மாவட்டம் (இப்போ தூத்துக்குடி மாவட்டத்தில்) ஆழ்வார் திருநகரிக்குச் சென்று பார்க்கும்படி சொல்ல அவ்வண்ணமே அங்கே சென்று நம்மாழ்வாரை வேண்ட அவரும், "ஓராயிரம் என்ன, நாலாயிரமும் தருவோம்" எனச் சொல்லி ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்துப் பாடல்களையும் தந்தருளினார். இவற்றை நாதமுனிகள் தொகுத்து உலகுக்கு அளித்தார். இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திய்வ பிரபந்தம் என்ற பெயரில் இன்றும் விளங்குவதோடு வைணவ குலத்தின் அரும்பெரும் பொக்கிஷமாகவும் கருதப் படுகிறது. இப்படி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்க இந்தத் தலத்து சார்ங்கபாணியே காரணமாக இருந்ததால் இவருக்கு "ஆராவமுதாழ்வார்" என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்தத் தலத்தை உபய ப்ரதான திவ்யதேசம் என்றும் கூறுவார்கள். பொதுவாக திவ்ய தேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே வழிபாடுகள் அனைத்தும், அலங்காரங்கள் அனைத்தும் செய்யப் படும். ஆனால் இந்தக் கோயிலில் மூலவருக்கான மரியாதைகள் அனைத்தும் உற்சவருக்குச் செய்யப் படுகிறது. மூலவருக்குப் பிரதிநிதியாக அவரின் பொறுப்பில் இருந்து உற்சவர் செயல்படுவதாக ஐதீகம். அதனால் இந்தத் தலம் உபய ப்ரதான திவ்ய தேசம் எனப்படுகிறது.


பெருமாள் தாயாரைத் திருமணம் செய்த தேரில் வந்ததால் கருவறையின் அமைப்பு தேரைப் போலவே உள்ளது. விமானத்தை வைதீக விமானம் என்கின்றனர். உற்சவர் ஆன உபய ப்ரதான மூர்த்திக்கு அருகேயே ஒரு சின்னஞ்சிறு தொட்டிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் சிலை வைக்கப் பட்டுள்ளது. அநேகமாய் எல்லா விஷ்ணு கோயிலிலும் காணமுடியும். என்றாலும் இங்கே குழந்தை பாக்கியம் இல்லாதோர் சந்தானகோபாலகிருஷ்ணனுக்கு விசேஷ வழிபாடுகள் செய்து பிரார்த்தித்துக்கொண்டு போய், கோரிக்கை நிறைவேறியதும் திரும்ப வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் இரண்டு, மூன்று தம்பதிகள் பிரார்த்தித்துக்கொண்டு சென்றனர். மூலவர் மட்டுமில்லாமல் உற்சவரும் வில்லை வைத்திருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். சார்ங்கம் என்றால் வில், அதனால் இவர் சார்ங்கபாணி, சாரங்கபாணி என்றால் அது(சிவன்) ஈசனைக் குறிக்கும். சிவன் கையிலிருக்கும் சாரங்கம் என்றால் மானைக் குறிக்கும் என நினைக்கிறேன். மூலவர் கையில் இருக்கும்சார்ங்கம் பார்க்கமுடிவதில்லை. (கேட்டுப் பார்த்துட்டேன், தரமாட்டேனுட்டார்) மகாமகம் கும்பகோணத்தில் பிரபலம் என்பதால் மகாமகத்தன்று நீராட வரும் நதி தேவதைகளும், தேவாதிதேவர்களும் சார்ங்கபாணியையும் வந்து வணங்குவதாக ஐதீகம். மாமனார் வீட்டோடு இருக்கும் இந்த மாப்பிள்ளைக்கு முதலில் பூஜை இல்லை. தாயார் சந்நிதியில் நடத்தப்பட்ட பிறகே பெருமாள் சந்நிதியில் நடக்கும்.

இந்த ஊரைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண சாமி என்னும் பக்தர் தம் வாழ்நாளில் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்த சார்ங்கபாணி கோயிலின் திருப்பணிகளிலேயே செலவிட்டு வந்தார். பெருமாளின் பேரில் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் மிகவும் கஷ்டப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணம் சேர்த்து இந்தக் கோயிலின் கோபுரத்தைக் கட்டி முடித்தார். ஒரு தீபாவளி தினத்தன்று மரணம் அடைந்த அவருக்கு ஈமச் சடங்குகள் செய்யக் குழந்தைகள் இல்லை. தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைப் பெருமாளே செய்தார். ஆனால் யாருக்குமே இது தெரியாது. அன்றைய நாள் கோயில் நடை அடைக்கப் பட்டு மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்தபோது பெருமாள் ஈரவேட்டியுடன், மாற்றிப் போடப் பட்ட பூணூலுடன், தர்ப்பைகள் அங்குமிங்கும் கிடக்க ஈமச் சடங்குகள் செய்து முடித்த கோலத்தில் காட்சி அளித்தார். திகைத்த பட்டர்மார்களுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. இப்போதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று உச்சிக்காலத்தில் பெருமாள் தன் பக்தருக்காக சிராத்தம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் இதை பக்தர்கள் காணமுடியாது. தன் உண்மையான பக்தனுக்காகக் கடவுள் எவ்வளவு தூரமானாலும் இறங்கி வந்து சேவை சாதிப்பார் எனப்புரிய வைக்கும் அரிய நிகழ்வு இது.

அடுத்து நாம் பார்க்கப் போவது மிக மிக முக்கியமான கோயில். ஆயிரம் வேலி நிலம் உள்ள பணக்கார சுவாமியையும், அம்மனையும் பார்க்கப் போகிறோம். அதோடு அவர்கள் இப்போது பிச்சைக்காரர்களை விட மோசமான கோலத்தில், மோசமான ஸ்திதியில், திருப்பணி என்பதையே கண்டு பல்லாண்டுகளான ஒரு கோயிலில் குடி இருப்பதையும் பார்க்கப்போகிறோம். தமிழ்நாட்டிலே நீதி நெறி தவறா அரசர்கள் பலர் ஆண்டு வந்தாலும் இந்த ஊரின் மன்னன் மிகவும் பிரசித்தி பெற்றவன். ஒரு பசுங்கன்றுக்காகத் தன் அருமை மகனையே பலியிடத் துணிந்தவன். அத்தகைய மன்னர்கள் ஆண்ட நகரிலே உள்ள கோயிலின் நிலைமை இன்று பரிதாபமாக இருக்கிறது. கண்ணில் ரத்தம் வருகிறது.

12 comments:

எல் கே said...

சாரம்+அங்கம் = சாரங்கம்
அங்கத்திலே சாரத்தை அணிந்து இருப்பவன் சாரங்கபாணி

Geetha Sambasivam said...

எல்கே, தப்பு, தவள, தஞ்சாவூரு மாப்பிள!
சாரங்கம் என்றால் மானைக் கையில் ஏந்தியவனே என்று தான் பொருள் வரும்
सारन्ग:= புள்ளிமான், யானை வண்டு, அன்னம், சாரங்கி வாத்தியம் எல்லாத்தையும் குறிச்சாலும் ஈசன் கையில் மான் இருப்பதால் இங்கே மானைத் தான் குறிக்கும். அப்புறம் சாரங்கம் எழுத்துத் தப்பாவே வருது "ங" எழுத்துக்கு உரிய ड.போட்டுட்டு "க" போட்டால் என்னமோ தெரியலை, சரியா வரலை, இன்னும் பழகணும்! :(

எல் கே said...

//தஞ்சாவூரு மாப்பிள!//

hello vambila matti vidatheenga . nan coimbatore mapla :D

Jayashree said...

சார்ங்க பாணி நா நான் சார்ங்கம் என்கிற வில்லை ஏந்தியவனு நினைச்சேன். இல்லையா அப்போ!ஆண்டாளம்மா சொன்னாளே சார்ங்கம் உதைத்த சர மழை போல் அது தானே இல்லியோ?

Jayashree said...

ஓஹோ! இந்த மாதிரியா?

"சாரங்க பாணியா ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர் - பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண்.....
கவி காள மேகம் 2 பேரையும் பாடின பாட்டில் சார்ங்கம் சிவனுக்கு கையில மான் என்றும் நாராயணனுக்கு வில்லுனும் அர்த்த படும்

GOT IT..

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, எல்கே, ரைமா வரதுக்கு தப்பு, தவள, தஞ்சாவூர் மாப்பிள தான் சரியா இருக்கும். :)))))))

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, தாழாதே சார்ங்கம் சரிதான். ஆனால் சிவன் கையிலே சாரங்கம், காளமேகத்தின் இந்தப்பாடலைத் தேடினேன், கிடைக்கலை, நீங்க ஒரு என்சைக்ளோபீடியானு தெரியலை, உங்களைக் கேட்டிருக்கணுமோ?? :))))))))) சில சமயம் உடனே நினைவில் வர மாட்டேங்குது! :))))))))) குழந்தை தானே! :P:P:P

எல் கே said...

சார்ங்கபாணி சரிதான். நேத்து பாரதியார் கவிதைகள்ல பார்த்தேன். (பாஞ்சாலி சபதம்)

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்கே, அக்கிரமமா இல்லை??? நான் தான் சம்ஸ்கிருத வார்த்தையும் சேர்த்துப் போட்டிருக்கேன் இல்லை?? :P:P:P:P:P:P:P:P இப்படியா ஒரு பச்சைத் துரோகம் பண்ணறது??? :))))))))))))))))))))))))

எல் கே said...

//எல்கே, அக்கிரமமா இல்லை??? நான் தான் சம்ஸ்கிருத வார்த்தையும் சேர்த்துப் போட்டிருக்கேன் இல்லை?? //
நாங்க நக்கீரர் பரம்பரை.

நெல்லைத்தமிழன் said...

//அங்கே சென்று நம்மாழ்வாரை வேண்ட // - சும்மா வேண்டலை. முதலில் 'கண்ணிநுன் சிறுத்தாம்பு' 12,000 முறை அந்தப் பத்துப்பாடலை பக்தியோடு சேவித்தபிறகுதான்... இதைக் கொஞ்சம் தீவிரமா அலசிச் சேர்த்திருக்கலாம்.... அது சரி... அப்புறம் சார்ங்கபாணி கோவில்லேர்ந்து நாலாயிரம் கண்டுபிடித்த கதைக்குத் தாவிவிடும்.

Geetha Sambasivam said...

நெ.த. நான் ஆழ்வார்கள் சரித்திரத்தைக் குறித்துச் சொல்லலையே. கோயில் பற்றித் தானே. ரொம்ப விபரங்கள் இருக்காது. அப்போல்லாம் கூடியவரை சுருக்கமாகவே கொடுத்திருப்பேன்.