
பிரபாஸ காண்டம் மேலும் இந்த சோமநாத லிங்கத்தைப் பற்றி வர்ணிக்கும்போது சொல்லுவது என்னவெனில்:” ஒரு கோழிமுட்டை அளவே உள்ள இந்தச் சுயம்புலிங்கமானது பூமிக்கு அடியில் மறைந்திருந்தது. ஸ்பரிஸ லிங்கம் என்ற பெயருடன் இந்த லிங்கமானது ஒரு பாம்பு சுற்றிய வண்ணமும், சூரியனுடைய கிரணங்களின் பிரகாசத்துடனும் ஒளி மிகுந்து காட்சி அளித்தது.பூமிக்கு அடியில் இருந்த இந்த ஸ்பரிஸ லிங்கம் சந்திரனுக்காக பிரம்மா வெளியே கொண்டு வந்தார். அந்தக் கதை தெரிந்த ஒன்றே. தட்சனின் 27 பெண்களை மணந்த சந்திரன் அவர்களில் ரோஹிணியிடம் மட்டும் தனியாகப் பிரியம் வைக்க, மற்றப் பெண்கள் அதனால் துன்புற்றுத் தந்தையிடம் முறையிடுகின்றனர். தட்சன் சொல்லியும் சந்திரன் மனம் மாறாததால் தட்சன் சந்திரன் தேய்ந்து போகச் சாபம் கொடுக்கின்றான்.

ஏழுவகைப் பட்ட கர்க குலத்தவர்கள் அங்கே பாஷுபத யோகத்தில் ஈடுபட்டு சித்தி பெற்று உயர்வாக இருந்ததாயும் சொல்லப் படுகின்றது. இது தவிர, கெளசிக கோத்திரத்தினரும் சோமநாதரைப் பெருமளவு வழிபட்டிருக்கின்றனர். பாசுபத சம்பிரதாயத்தின் முக்கியச் சீடர்களாய் கெளசிகர், கர்க்யர், கெளருஷர், மைத்ரேயர் ஆவார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்தப் பாசுபத சம்பிரதாயத்தின் மூலகர்த்தா லகுலிஸா என அழைக்கப் படுவார்.
மஹாபாரதம் ஆதி பருவத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் பற்றிக் கூறும்போது, அர்ச்சுனன் இங்கே வந்தபோது தான் சுபத்ரையைக் கண்டு அவளிடம் காதல் கொண்டு மணக்க எண்ணி, பலராமருக்குப் பயந்து சுபத்ரையோடு ஓடிவிடத் திட்டம் போட்டான் எனச் சொல்லுகின்றது. இது தவிரவும், வன பருவத்திலும், பீமனிடம் பிரபாஸ தீர்த்தம் பற்றிச் சொல்லப் படுகின்றது. தருமரும்,திரெளபதியும் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் முன்னர் இங்கே வந்து நீர் மட்டுமே அருந்தி விரதம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேல் சரஸ்வதி நதி அப்போது ஓடிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் பாரதம் விநாசனா என்னும் ஊருக்கருகே மறையும் நதியானது, சாமாசோபேதா என்னும் ஊருக்கருகே செளராஷ்டிரக் கடல் கரையில் கடலுடன் கலப்பதாயும், இந்த இடத்தில் தான் லோபாமுத்ரை தன்னுடைய கணவர் ஆன அகஸ்தியரைக் கண்டதும், மணந்து கொண்டதும் என்றும் சொல்லுகின்றது.

மேல் அதிகத் தகவல்களுக்கு மதுரைக்கு அருகே உள்ள அரிட்டப் பட்டி பற்றிய குறிப்புகளில்இங்கேபார்க்கவும்.
On the right side of sanctum sanctorum is a beautiful sculpture of Shiva in the form of `Lakulisa.' There are several sects in Saivisim and one of them is `Lakulisa Pasupatham.' The presiding deity of this sect is Lord Shiva. On the left, rests Lord Vinayaka.
The Lakulisa Shiva is apparently a rare specimen in Tamil Nadu. One similar sculpture is found at Kudimallam near Vellore, where Lord Shiva is seen in a standing posture. (Hinduonline 2005)
No comments:
Post a Comment