எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, April 21, 2009

ஜெய் சோம்நாத்!

இதன் பின்னர் கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோரால் ஆலயம் இடிக்கப் பட்டது. images.jpgsomnath.jpg

 

பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத்  ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை.  இந்திய சுதந்திரத்தின் போது ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்.images.jpgtemple.jpg பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.

 

சோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம்  அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார். somnath-temple-706_m.jpgஇந்தப் படத்தில் காணும்படியான அருகாமையில் தற்சமயம் செல்ல முடியாது. மிகத் தொலைவிலேயே வண்டிகள் நிறுத்தப் படுகின்றன. கடுமையான பாதுகாப்பு உள்ளது. சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள். பொருட்கள் அனைத்தும் காவலர்களால் கடுமையான சோதனைக்குப் பின்னர் அவர்கள் பாதுகாப்பில் இருக்க நாம் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லவேண்டும். மற்றப் பணம் முதலியன இருந்தாலும் அவற்றைக் கைப்பையில் வைத்துக் காவலர்களிடம் கொடுத்துவிட வேண்டும். பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிச் சாவியை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். ஒரே சாவிதான் ஆகையால் பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும். படம் உதவி, கூகிளார் தான். பெரிய படமாய்ப் போட முடியலை.


நாளை இந்தக் கோயில் பற்றிய சில விவரங்களோடு இது முடிவடையும். மெயில் மூலம் போஸ்டிங் போடுகிறேன். படங்களைச் சேர்க்காமல் முன்னே கொடுத்தேன், எண்ணங்கள் பதிவிலேயும், மதுரை மாநகரம் பதிவிலேயும், இப்போப்படங்களையும் சேர்த்துக் கொடுக்கிறேன். சரியா வந்தால் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா எல்லாம். தேர்தல் நேரம், அப்புறமா யாருக்குமே சீட் கிடைக்காது. :P

3 comments:

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர் படமே தெரியலையே? :))))))))))) பார்க்கலாம், மறுபடியும் நெருப்பு நரியிலே தெரியுதானு பார்க்கிறேன். :))))))))

Geetha Sambasivam said...

நெருப்பு நரி, இமேஜஸ் சோம்நாத் அப்படினு தகவல் தான் கொடுக்குது. படங்களோடு எப்படி மெயிலில் போஸ்டறது??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தொழில் நுட்பி ஆயிட்டேனு நினைச்சால்! இப்படியா????

பழமைபேசி said...

தலைவி, படங்களை இடுகையோட பட்டைல போயி, தரவேற்றம் செய்யுங்க.... நிறைவுப் பகுதியில தெரியுதே?!