
12 ராசிகளுக்கும் உரிய 12 நதிகள் வருமாறு:
மேஷம்- கங்கை
ரிஷபம்-நர்மதை
மிதுனம்-சரஸ்வதி
கடகம்-யமுனை
சிம்மம்-கோதாவரி
கன்னி-கிருஷ்ணா
துலாம்-காவேரி
விருச்சிகம்-தாமிரபரணி
தனுசு-சிந்து
மகரம்-துங்கபத்ரா
கும்பம்-பிரம்மபுத்ரா
மீனம்-பிரனீதா
முஹூர்த்தங்கள் அஷ்டமுஹூர்த்தங்கள் எனப் படும். இவற்றிற்குப் பிரதான தீர்த்தவடிவான தெய்வத்தையே புஷ்கரன் என்ற தீர்த்த ராஜனாய் வழிபடுவது வழக்கம். இவர் எப்போதும் பிரம்மாவின் கமண்டலத்திலேயே வாசம் செய்வார். புஷ்கரனைத் தனக்குக் கொடுக்குமாறு வேண்டிக் கேட்டு குரு பகவான் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா புஷ்கர கமண்டலத்தை குருவுக்குக் கொடுக்க முயல, கமண்டலத்தில் இருந்த புஷ்கரன் பிரம்மாவை விட்டுப் பிரிய மறுத்தார். புஷ்கரனைச் சமாதானம் செய்த பிரம்மா குருவின் பார்வை தீர்த்த ராஜனாகிய புஷ்கரன் மேல் பட என்ன வழி என யோசித்து, மேஷம் முதல் மீனம் வரை உள்ள பனிரண்டு ராசிகளிலும் குரு மாறி மாறி இடம் பெயரும் அந்த நாட்களில் இந்தக் குறிப்பிட்ட நதிகளில் புஷ்கரனை வந்து வாசம் செய்யுமாறும் அன்றைய தினம் குருவின் பார்வை மட்டும் அந்த அந்த நதிகளின் மேல் படவும் வழி செய்தார். அரை மனதோடு சம்மதித்தார் குரு. அன்று முதல் மேற்கண்ட வாறு ராசிகளில் குரு பெயரும்போது குறிப்பிட்ட நதிகளில் புஷ்கர குரு பெயர்ச்சி அனுசரிக்கப் படுகின்றது. பல நூற்றாண்டுகளாய் நின்று போன தாமிரபரணி புஷ்கர குரு பெயர்ச்சி யாகம் பாணதீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்து பூந்துறை, குட்டத்துறை முருகர் கோயில் ஆகிய இடங்களில் மீண்டும் தொடங்கி வைத்தது தாமிரபரணி அமைப்பு. இது 20-10-2006-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3-ம் தேதி இரவு 10-15 மணிக்கு மீண்டும் தொடங்கி கடந்த மூன்று வருடங்களாய் தாமிரபரணி புஷ்கரம் நடைபெற்று வருவதாய் தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது.
 ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே ரிஷியான அகத்தியர் மூலம் தமிழ் மொழி சிறப்புப் பெற்றதால் தமிழின் பெருமை வேதங்களுக்கு எல்லாம் மூத்தது எனக் கூறப் படுகின்றது.  ஸ்ரீசங்க யோகி வீரசேன மன்னனுக்கு உபதேசிக்கப் பட்டது ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம். அதை ஸ்ரீவேத வியாசர் தன் புத்திரனும், பிறவி ஞானியும் ஆன சுகருக்கு உபதேசித்தார். தேவி மகாத்மியமும் தாமிரபரணி மகாத்மியமும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். (இது பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே ரிஷியான அகத்தியர் மூலம் தமிழ் மொழி சிறப்புப் பெற்றதால் தமிழின் பெருமை வேதங்களுக்கு எல்லாம் மூத்தது எனக் கூறப் படுகின்றது.  ஸ்ரீசங்க யோகி வீரசேன மன்னனுக்கு உபதேசிக்கப் பட்டது ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம். அதை ஸ்ரீவேத வியாசர் தன் புத்திரனும், பிறவி ஞானியும் ஆன சுகருக்கு உபதேசித்தார். தேவி மகாத்மியமும் தாமிரபரணி மகாத்மியமும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். (இது பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.)இந்தத் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அதை சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மாற்றிய மகான் என். ராமசுப்பிரமணிய ராமாயணியார் அவர்கள் தாமிரபரணிக்கு ஜே, தாமிரபரணிக்கு ஜே என வீடு முழுதும் எழுதி வைத்துள்ளதாக தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது. இதுவே தாமிரபரணி அமைப்பின் சட்டபூர்வமான கோஷமாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இனி தாமிரபரணிக்கரையில் சில முக்கியக் கோயில்களைப் பற்றிப் பார்ப்போமா? முதலில் நவ திருப்பதிகள்.
 
 






