எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, April 15, 2007

சிதம்பர ரகசியம்-6 - பதஞ்சலி முனிவர் வரலாறு

திரு விஎஸ்கே கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இப்போ பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின் படி இவர் ஆதி சே்ஷனின் அவதாரம். மஹாவி்ஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்வதாய்ச் சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் "பதஞ்சலி" என்று ஆனதாய் ஒரு கூற்று. மேலும் சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே ஆடுவதைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத்தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதிசேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணுவும் ஈசனின் ஆனந்த நடனக் கோலத்தை வர்ணிக்கத் தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய்ச் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய் மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் "திருமந்திரம்" என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

"பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசஷ்டரின் மனைவி. கோவையில்ல் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் "திருமூர்த்தி மலக்குன்றுகள்" இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் "தென் கைலாயம்" என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திரு மூலர். இங்கே உள்ள அமணலிங்கேஸ்வரரைத் தான் அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும்் ஒருவர்."

"தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
என்றிவர் என்னோடு எண்மருமாம்!"

சித்தர்களில் ஒருவரான போகர்7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தன்க்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். புரியாதவர்கள் கேட்கவும். முடிந்தால் விளக்குகிறேன்.


"அது என்னுடைய தாத்தா!
மேலே ஏறிப் பார்!
ஆனால் என்னைப் பிறப்பித்தவர்
காலங்கி நாதர்!
பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது
பார், இதுவே சரியான வழி!
அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்."அப்பா நீ தேடினாயே இது தான் அது!" என்று.
குண்டலினி யோகம் படிக்கிறவர்களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர்களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடத்ததும் பிறந்தது "போகர் 7,000". அதில் பதஞ்சலி பற்றியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பா்ஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள். பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான வி்ஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார்னு. ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவ்ருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.

டிஸ்கி: பதஞ்சலி முனிவர் பற்றி நான் கேட்ட தகவல்கள் பெற எனக்கு லிங்க் கொடுத்து உதவிய "ஆகிரா" அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வ்யாக்ரபாதர் பற்றிக் கிடைக்கவில்லை. தேடுகிறேன். கிடைத்தால் போடுகிறேன் வீஎஸ்கே, சார். ஆனால் வ்யாக்ரபாதர் ஆசிரமம் தான் மூத்ததுன்னு எங்கேயோ படிச்சிருக்கேன்.

ஸ்வாமி சிவானந்தர் சிவனைப் பற்றியும் நடராஜர் பற்றியும் எழுதி இருப்பதில் இருந்தும் தகவல்கள் திரட்டி உள்ளேன்.

11 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சமீபத்தில் பக்தி விகடனில் வியாக்ர பாதர் பற்றிய கட்டுரை ஒன்று படித்த ஞாபகம், முடிந்தால் அதனைத்தேடி அனுப்புகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு.//

மேற்ச்சொன்ன தகவல் பற்றி எனக்கு தெரிந்தவை இங்கே. நீங்கள் கூறியது ஒரு கல்பத்தில் நடந்ததாகவும், இன்னுமொறு கல்பத்தில், தத்தாத்ரேயரே மும்மூர்த்திவடிவானவராகப் பிறந்ததாகவும் தெரிகிறது....

நீங்கள் சொன்னபடி பிறந்த மும்மூர்த்திகள் (துர்வாசர் - ஈஸ்வரன்; தத்தர் - மஹா விஷ்ணு; சந்திரன்/பதஞ்சலி - பிரம்மா) என்றும் இருக்கிறது காஞ்சீ மஹாத்மீயம். காமாக்ஷி கோவிலில் பூஜாக்ரமம் துர்வாசரால் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீவித்யா க்ரமப்படி நடக்கிறது. அவர் எற்படுத்திய இந்த க்ரமமானது க்ரோத பட்டாரக க்ரமம் எனப்படும்...(க்ரோத பட்டர் - துர்வாசர்). அவருக்கு பெயரே க்ரோத பட்டாரகர்...

Geetha Sambasivam said...

மதுரையம்பதி நீங்கள் குறிப்பிட்ட தகவல்களை நான் வல்லி சிம்ஹனின் அனசூயை பற்றிய பதிவில் ஏற்கெனவே பின்னூட்டமா எழுதி இருக்கிறேன். :D முடிந்தால் ஆர்க்கைவிஸில் பார்க்கவும். :D

Porkodi (பொற்கொடி) said...

adhan 3 comment irukke! pinnootame varalai nu poiyana pulambala!! :-)

Porkodi (பொற்கொடி) said...

enakku indha padhivu mutrilum pudhusu. idhil irukkum vishayam edhuvum theriyadhu! an interesting read :-)

Syam said...

//adhan 3 comment irukke! pinnootame varalai nu poiyana pulambala!!//

அதான :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

அட் இவ்வளவு அழகான பதிவா. முன்னாலேயே தெரிஞ்சி இருந்தால் 7 ஆவது அழகில் சேர்த்திருப்பேனே.மறுபடியும் வருவேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

ரகசியம் கடைசியில் வரட்டும்.
தில்லக் காளியைப் பற்றி போடுங்கள்

Rajkumar Pandian said...

மேடம்,
தாங்கள் நெற்றிப் பொட்டில் இருப்பது சஹஸ்ரா சக்ரா என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஆனால் அதன் பெயர் அஜ்னா என்று நான் படித்துள்ளேன். சஹஸ்ரா ( ஆயிரம் இதழ் தாமரைக்கு உவமை காட்டப்படும்) உச்சந்தலையினுள் இருப்பதாக படித்துள்ளேன்.

நிறைய தகவல்கள் தரும் தங்களுக்கு நன்றி.

--rkp--

Geetha Sambasivam said...

ராஜு பாண்டியன் சொல்லுவது சரியே! உச்சந்தலை என்பதற்கு நெற்றிப் பொட்டு என்று தவறாய்க் குறிப்பிட்டிருக்கின்றேன். மன்னிக்கவும்.

Unknown said...

Need more information