எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 23, 2007

சிதம்பர ரகசியம் - நீங்க வைகானசமா/ பாஞ்சராத்திரமா?

மதுரையம்பதி கேட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் முயற்சி செய்து வருகிறேன். என்றாலும் எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ ராமானுஜர் தான் ஸ்ரீரங்கம் கோவிலில் "பாஞ்சராத்திர" முறைப்படி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தவர் என்றவரையில் தெரியும். அவருக்குப் பின்னர் வந்த ஸ்ரீமத்வேதாந்த தேசிகர் காலத்திலே தான் பிரிவினை அல்லது வேறுபாடு ஏற்பட்டதுன்னு நினைக்கிறேன். இந்த தேசிகர்தான் "மணிப்ரவாளம்" என்னும் வடமொழியும், தமிழும் கலந்த எழுத்து நடையை ஏற்படுத்தினார்னும் நினைக்கிறேன். இது கிட்டத் தட்ட பிரபந்தங்களையே வேதமாக ஏற்கும் ராமனுஜரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும், பிரபந்தங்கள் மட்டும் போதாது என்று சொல்லும் நிகமாந்த தேசிகரின் அடியை ஒற்றி நடப்பவர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடாகக் கூட இருக்கலாம். இது பற்றி ஒரு பெரியவரிடம் சந்தேகம் கேட்டுள்ளேன். இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரையில்"

வைணவத்தில் ஸ்ரீ ராமானுஜர் கூறி இருப்பதாவது:" "ஸ்ரீ" என்னும் மகாலட்சுமியானவள் அந்தப் பரம்பொருளான "நாராயணனி"டமிருந்து பிரிக்க முடியாதவள். அவனுடன் நித்திய வாசம் செய்பவள். ஆகவே "ஸ்ரீ"யும் ஒரு பரம்பொருளே ஆவாள்." என்பதாகும்.

ஆனால் மற்றொரு பிரிவினர் கூறுவது: "ஸ்ரீ"யும் நம்மைப் போல் ஒரு ஜீவன். அவள் பரம்பொருளும் இல்லை, பரம்பொருளுக்கு நிகரானவளும் இல்லை, வேண்டுமானால் நமக்காக அந்தப் பரம்பொருளிடம் இவள் சிபாரிசு செய்து நம்மைக் கவனித்துக் கொள்ளச் சொல்கிறாள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்." இது மற்றொரு சாரார் கூற்று. இவர்கள்தான் வடகலை, தென்கலை எனப் பிரிந்து இருக்கிறார்கள் என எண்ணுகிறேன். இறைவனை அடைய முயற்சி செய்யவேண்டும், என்று ஒருசாராரும், அவன் பாதாரவிந்தங்களைச் சரணடந்து விட்டால் அப்புறம் அவன் நம்மைக் கவனிக்காமல் போய்விடுவானோ என்று மற்றொரு சாராரும் சொல்வதாக வைத்துக் கொள்ளலாமோ? இது பற்றிப் பலரிடம் சந்தேகம் கேட்டாச்சு. இப்போக் கடைசியா ஒருத்தரிடம் கேட்டுள்ளேன். கோவில் வழிபாடுமுறை பற்றிப் பலருக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. சிதம்பரம் கோவில் வைகானச முறைதான் என்றும், ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்திர முறைதான் என்ற அளவிலும் மட்டுமே தெரிகிறது. இதில் காஞ்சிபுரம் கோவில்காரர்கள் வடகலை என்றும் தெரிய வந்தது. பதிலுக்குக் காத்திருக்கிறேன். இல்லைனால் "கண்ணபிரான்"தான் வந்து சொல்லணும். :D

24 comments:

jeevagv said...

என்னங்க, கதை ஹைஜேக் செய்யப்பட்டு என்கேயோ போகிறது போல...?

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவுக்கு நன்றி கீதாம்மா....எனக்கென்னமோ ஆகம வேறுபாடுகள் தான் இவ்வாறு வைகானசம்-பாஞ்சராத்திரம் என்ற பிரிவுகள் என கேள்விப்பட்டிருக்கிறேன்....வடகலை-தென்கலை என்பது வடமாள்-பிரஹசரணம் போன்றதே....

எனக்கு வைஷ்ணவ ஆச்சாரியார்கள் பற்றி அவ்வளவாக ஆழ்ந்த அறிதல் கிடையாது........எனவே நான் அங்கு அப்பீட்டாகிறேன்........

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. கண்ணபிரான் வருவதற்கு முன் கண்ணதாசன் வந்துவிட்டேன். :-) வடகலை தென்கலையாரிடம் இருக்கும் வேறுபாடுகள் மிகவும் மேலோட்டமானவை. அடிப்படைத் தத்துவங்களில் அவர்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை.

நீங்கள் சரியான பாயிண்டுகளைத் தொட்டிருக்கிறீர்கள் ஆனால் இன்னும் கொஞ்சம் சொல்லலாம்.சொல்லத் தொடங்கினால் மிக விரிவாகச் செல்லும்; அதற்கு நாமிருக்கும் வலையுலகச் சூழலும் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. நீங்கள் தொட்டவற்றில் சிலவற்றைச் சுருக்கமாகப் பேசுகிறேன்.

வடகலையார், தென்கலையார் இருவருமே திருமகளுடன் சேர்ந்த நாராயணனே பரம்பொருள் என்பார்கள். மிதுனமே பிரதானம் (இரட்டையே - திருமகளும் திருமாலும் சேர்ந்தே - பிரதானம் - மோக்ஷம் தருபவர்கள்) என்பது தான் இருவர் கோட்பாடும். திருமகள் ஜீவன் தான்; ஆனாலும் அவள் மலரும் மணமும் போல, சுடரும் ஒளியும் போல நாராயணனை விட்டு 'அகலகில்லேன் இறையும்' என்று எப்போதும் நீங்காது இருப்பவள். திருமகளுடன் சேர்ந்த நாராயணனே ('ஸ்ரீ' மந் நாராயணனே) சரணாகதிக்கு உரியவன்; அவர்கள் இருவரும் சேர்ந்தே மோக்ஷம் அளிப்பவர்கள். திருமகளுக்கு சிபாரிசு செய்யும் இன்னொரு பொறுப்பும் உண்டு. (பக்கத்தில் இருந்து திருமகள் செய்வதால் அதற்கு ஸ்ரீ பாரிசம் - சிபாரிசு என்று பெயர்).

இறைவனை அடைய இரண்டே வழிகள் என்பதில் இரு சாராருக்கும் வேறுபாடு இல்லை - அந்த இரு வழிகள் மிகக் கடினமான பக்தியோகம் (வைணவத்தின் படி ஞானயோகம், தியானயோகம், கர்மயோகம் எல்லாமே பக்தியில் கடைசியில் கொண்டு சேர்க்கும்; பக்தியோகத்தால் மட்டுமே பல பிறவிகளுக்குப் பின் முக்தி கிடைக்கும்), பிரபத்தி என்ற சரணாகதி யோகம் (இந்தப் பிறவியிலேயே மரணத்திற்குப் பின் முக்தி கிடைக்கும்). இரண்டிற்கும் 'இறைவன் கருணையே' மோக்ஷத்திற்குத் திறவுகோல்; நாம் அவனுக்கு (அவர்களுக்கு) என்றுமே அடிமைகள் (இகத்திலும் பரத்திலும்) என்ற அடிப்படை அறிவும் தெளிவும் மிக மிக அவசியம். வேறுபாடு எங்கே வருகின்றதென்றால் இந்த பூனை நியாயம் குரங்கு நியாயம் என்று சொல்வார்களே அங்கு தான் - பூனை எப்படி குட்டியைக் கவ்விக்கொண்டு எல்லா இடத்திற்கும் செல்லுமோ அது போல் நாம் இறைவனே நம்மை அவனிடம் அழைத்துக் கொள்வான் என்று முன்பு சொன்ன அடிப்படை புரிதலுடன் இருந்தால் போதும்; தனியாகச் சரணாகதி என்று செய்ய வேண்டாம் - இது தென்கலையாரின் கருத்து; குரங்குக் குட்டி எப்படி தாயின் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுமோ அது போல் நாம் இறைவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; அவனே கதி என்ற அடிப்படை புரிதல் நமக்கு இருக்கின்றது என்று காட்டுவதற்காக ஒரு அடையாளமாக சரணாகதி செய்ய வேன்டும் - இது வடகலையாரின் கருத்து. ஆக அடிப்படையில் இருவருக்கும் ஒரே கருத்து தான்; வேறுபாடு எல்லாம் சடங்குகளில் தான்.

வடகலை, தென்கலை பிரிவிற்கும் ஆகமங்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இரு பிரிவுகளிலுமே இரண்டு ஆகமங்களைப் பின்பற்றும் கோவில்கள் இருக்கின்றன.

மணிபிரவாள நடை இராமானுஜரின் காலத்திலேயே இருந்தது தான். தேசிகர் காலத்தில் வந்ததில்லை.

வடகலையார், தென்கலையார் இருவருக்குமே உபய வேதாந்திகள் என்று பெயர் - இருவருமே பிரபந்தங்கள் எனும் தமிழ் வேதத்தையும் வடமொழி நான்கு வேதங்களையும் பின்பற்றுபவர்களே. இதில் இருவருக்கும் வேறுபாடுகள் இல்லை. இருவருக்குமே பிரபந்தங்கள் முக்கியமானவை. அதனால் பிரபந்ததையே வேதமாக ஏற்கும் இராமானுஜரின் அடிகள் என்று தொடங்கிச் சொல்லியிருப்பவை தவறு. இராமானுஜர் காலத்திலேயே இரண்டுமே வைணவத்திற்குத் தேவை என்ற எண்ணம் இருந்திருக்கிறது.

வடகலை, தென்கலை என்ற பெயர் சில நேரங்களில் வடமொழி வேதங்களைப் பின்பற்றுபவர், பிரபந்தங்களை மட்டுமே பின்பற்றுபவர் என்று பொருள் கொள்ளப்படுகிறது - அது தவறு. இந்தப் பெயர்கள் வடக்கில் இருக்கும் காஞ்சிபுரத்தையும் தெற்கில் இருக்கும் திருவரங்கத்தையும் வைத்து வந்தது. இராமானுஜரின் காலத்திற்குப் பின் இந்த மேலோட்டமான கருத்து வேறுபாடுகள் வரும் போது வடக்கில்/காஞ்சிபுரத்தில் இருந்தவர்கள் சொன்ன கருத்துகள் வடகலை என்றும் தெற்கில்/திருவரங்கத்தில் இருந்தவர்கள் சொன்ன கருத்துகள் தென்கலை என்றும் சொல்லப்பட்டன. அவ்வளவு தான்.

இன்னொரு மேலோட்டமான வேறுபாடு - திருமண்ணை எப்படி அணிந்து கொள்கிறார்கள் என்பது. இது எல்லோருக்கும் தெரியும்.

சொல்லத் தொடங்கினால் சொல்லிக் கொண்டே செல்லலாம். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//இந்தப் பெயர்கள் வடக்கில் இருக்கும் காஞ்சிபுரத்தையும் தெற்கில் இருக்கும் திருவரங்கத்தையும் வைத்து வந்தது. //

குமரன், மேற்ச்சொன்ன கருத்து சரியாக இருக்கலாம்.....ஆனால் இதற்கும் பாஞ்சராத்திரம்-வைகாசனத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?....

பாஞ்சராத்திரம்-வைகானசம் என்பது ஆகமமா, இல்லை வேறேதனுமா?

திருவரங்கம் காஞ்சி ஆகிய இடங்களில் எந்த முறையில் ஆராதிக்கின்றனர்?.

வடகலை சார்ந்த கோவில்கள் மிகச்சில மட்டுமே, ஆனால் தென்கலை சார்ந்த கோவில்கள் அதிகம் என கேள்விப்பட்டிருக்கிறேன்....ஏன் அவ்வாறு?. ஏதேனும் பகிர முடியுமா?

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, இதைவிட அருமையாக யார் விளக்கப் போகிறார்கள் கீதா.
குமரனுக்கு மிகவும் நன்றி.

தென்கலையும் வடகலையும் மனிதர்களால் வந்த வேறுபாடுகள். அத்ற்கும் ஆகம விதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஆலய வழிபாட்டுக்கு விதித்த இந்த முறைகள் வழியைத்தான் காண்பிக்கும்.

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. அடியேன் அறிந்தவரை சொல்கிறேன். வடகலை, தென்கலைகளைப் பற்றி படித்த அளவிற்கு ஆகமங்களைப் பற்றி படிக்கவில்லை.

வைணவ ஆகமங்களான வைகானசமும் பாஞ்சராத்திரமும் தொன்மையான ஆகமங்கள். ஆனால் வைகானசம் புழங்கியது போல் பாஞ்சராத்ரம் அவ்வளவாகப் புழங்கவில்லை. பாஞ்சராத்ரத்தைப் பழிக்கும் கருத்துகளையும் சில வைணமல்லாத சம்ப்ரதாய நூற்களில் படித்திருக்கிறேன். இராமானுஜரும் சுவாமி தேசிகனும் பாஞ்சராத்ரத்தின் மேன்மையையும் கோவில்களில் அது புழங்க வேண்டிய அவசியத்தையும் பலவாறாக எழுதிப் படித்திருக்கிறேன். அது பெரும்பாலும் மற்ற சம்ப்ரதாயத்தவருக்குச் சொல்லும் பதிலாகவே இருக்கிறது.

எந்தக் கோவில்களில் எந்த ஆகமம் என்று சரியாகத் தெரியவில்லை. காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் வைகானசம், திருப்பதி திருமலையில் வைகானசம், திருவரங்கத்தில் பாஞ்சராத்ரம் என்று நினைவு. இதில் திருவரங்கமும் திருமலையும் தென்கலை கோவில்கள். காஞ்சிபுரம் வடகலை.

வடகலையார்கள் தத்துவ நூல்களை ஆக்குவதிலும் மடங்களை நிர்மாணம் செய்து நிர்வகிப்பதிலுமே நிறைய கவனம் செலுத்தியதாகவும் தென்கலையினர் திருக்கோவில்களை நிர்வகிப்பதில் நிறைய நேரம் செலவழித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஏற்ப வடகலையார் மடங்கள் (அஹோபிலம் ஆசிரமம், ஆண்டவன் ஆசிரமங்கள்) என்று பல புகழ்பெற்ற, சொத்து வசதிகள் பெற்ற மடங்களையும் நிறைய திருக்கோவில்கள் தென்கலையாரிடம் இருப்பதையும் காண்பிப்பார்கள். இது காலப்போக்கில் தானாக அமைந்ததே ஒழிய அதில் பெரிய காரணம் ஏதும் இல்லை. இப்போது எல்லோரும் அதே வகையில் அமைத்துக்கொண்டு செல்கிறார்கள். இது போக 24 சிம்ஹாசனாதிபதிகள் என்று ஆசார்ய பீடத்தை வகிக்கும் பெரியவர்கள் பரம்பரை இராமானுஜர் காலத்திலிருந்து இருக்கிறார்கள். அவர்கள் இருகலைகளிலும் உண்டு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// குமரன் (Kumaran) said...
கீதாம்மா. கண்ணபிரான் வருவதற்கு முன் கண்ணதாசன் வந்துவிட்டேன். :-)//

கண்ண-பிரானைக் காட்டிலும் கண்ண-தாசனுக்கு ஏற்றம் அல்லவா வைணவத்தில்! அடியார்களை ஆண்டவனை விட ஒரு படி அதிகம் வைக்கும் வழக்கம் ஆயிற்றே!

குமரன், தென்கலை-வடகலை பற்றி மிக அழகாக அதே சமயம் சுருங்கச் சொல்லிச் சுவைக்க வைத்திருக்கிறார்!
பாராட்டுக்கள், நன்றிகள் குமரன்!

ஆனால் மெளலி ஐயா வைகானச, பாஞ்சராத்ரம் பற்றிக் கேட்டுள்ளார்! ஆபிசில் கொஞ்சம் "ஆணி புடிங்கிட்டு இருக்கேன்". என் அணி மக்கள் Mid Year Review-க்கு காத்துள்ளார்கள்....
இன்னும் ஒரு மணியில் மீண்டும் வருகிறேன்.

அதுக்கு முன்னாடி ஒரு சுவாரசியமான விடயம். திருப்பதி மலை மேல் பெருமாளுக்கு வைகானசம். திருப்பதி மலைக் கீழ் தாயாருக்கு பாஞ்சராத்ரம் :-)

Geetha Sambasivam said...

ஸ்ரீரங்கத்தில் பாஞ்சராத்திரம் முறையில் வழிபாட்டை ராமானுஜர் தான் ஏற்படுத்தியதாகவும், காஞ்சியில் வைகானசம் என்றும் கேள்விப் பட்டிருக்கேன். மற்றபடி இது சைவர்களுக்கு சிருங்கேரி மடம், காஞ்சி மடம் என இரு பிரிவுகள் இருக்கிற மாதிரி, அதிகமாய் தென் தமிழ்நாட்டில் சிருங்கேரி மடமும், வடதமிழ் நாட்டில் காஞ்சி மடமும் பின்பற்றுவார்கள். அது மாதிரி வைகானசமு, பாஞ்சராத்திரமும் இரு வேறு மடங்களின் வழிமுறைகளாய் இருக்கலாமோன்னு நினைக்கிறேன். குமரன் சொன்னவை நான் படித்தேன்(கூகிளில் தான்) என்றாலும் கேள்விக்குச் சரியான பதில் அது இல்லை என்பதால் எழுதவில்லை. சந்திரமெளளி கேட்டது இரு வேறு வழிபாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தான். அது சென்னையில் இருந்தால் இந்நேரம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் பதிலுக்குக் காத்திருக்கேன். குமரன் அளித்த விளக்கத்துக்கு, நன்றி சொல்லிக் கொண்டே கண்ணபிரானின் மறுவரவுக்கும் காத்திருக்கேன்.

குமரன் (Kumaran) said...

//சைவர்களுக்கு சிருங்கேரி மடம், காஞ்சி மடம் என இரு பிரிவுகள் இருக்கிற மாதிரி, அதிகமாய் தென் தமிழ்நாட்டில் சிருங்கேரி மடமும், வடதமிழ் நாட்டில் காஞ்சி மடமும் பின்பற்றுவார்கள். //

கீதா அம்மா. இது ஸ்மார்த்தர்களுக்கு / அத்வைதிகளுக்கு என்று இருக்க வேண்டும். சைவர்கள் வேறு; சைவ சிந்தாந்தத்தைப் பின்பற்றும் ஆதினங்களும் அவர்களின் சீடர்களும் சைவர்கள் ஆவார்கள் தமிழகத்தில். ஸ்மார்த்தர்கள் சைவர்களும் இல்லை; வைணவர்களும் இல்லை. சந்த்ர மௌலீஸ்வர பூஜை செய்வார்கள்; நாராயண ஸ்மிருதி என்பார்கள் அத்வைத ஆசார்யர்கள். சிவ விஷ்ணு பேதம் கிடையாது. சரி தானே?!

வைகானசத்திற்கும் பாஞ்சராத்ரத்திற்கும் ஆன வேறுபாடுகளைத் தான் கேட்கிறீர்கள் என்றால் இணையத்தில் அந்த வேறுபாடுகளைப் படித்திருக்கிறேன். தேடிப் பார்க்கிறேன். இந்த இடுகை தென்கலை வடகலை என்று பேசியதால் அவற்றைப் பற்றிப் பேசிவிட்டேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

//ஸ்ரீரங்கத்தில் பாஞ்சராத்திரம் முறையில் வழிபாட்டை ராமானுஜர் தான் ஏற்படுத்தியதாகவும், காஞ்சியில் வைகானசம் என்றும் கேள்விப் பட்டிருக்கேன்.//

இது தான் நான் கேள்விபட்டதும்.

Geetha Sambasivam said...

மன்னிக்கிறாப்போலே தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை குமரன், நான் நினைச்சது வடகலைக்காரங்கன்னா, அவங்க வைகானசம் என்றும், தென்கலைக்காரங்கன்னா அவங்க பாஞ்சராத்திரம்னு நானாக நினைத்துக் கொண்டதால், ஏற்பட்டது இது! :D. இப்போக் கூடப் பாருங்க நீங்க அழகாய் ஸ்மார்த்தர்களுக்குத் தான் சிருங்கேரியும், காஞ்சியும்னு குறிப்பிட்டுச் சொல்லி விட்டீங்க, நான் பொதுவாய் எழுதி விட்டேன் இல்லையா? அது மாதிரியான தவறுதான் இதிலும் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி நீங்க கேட்டோ, அல்லது தேடிப் பார்த்தோ சொன்னால் ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா...I am back!
அடியேன் அறிந்த வரை இதோ!

ஆகமம் என்பது வழிபாட்டு முறைகளை, வேதத்தை மூலமாக வைத்து, உருக்கொடுப்பது!
ஆலய வழிபாடு, விக்ரகங்கள், விழாக்கள், வேள்வி, பூசை முறைகள் ஒவ்வொன்றையும் வேதக் கோட்பாடுகளோடு தொடர்ப்பு படுத்தி, நிறுவிச் சொல்வன ஆகமங்கள்!

வேதங்கள்=பெரிய ஏரி/ஆறு என்றால்
ஆகமங்கள்=வாய்க்கால் போல!
மக்களுக்குப் பயன்படுமாறு அமைக்கப்பெறுபவை.
மக்கள் பலவிதம் என்பதால், ஆகமங்களும் பலவிதம்!

வைணவத்தில் ஆகமம் இரண்டு
1. பாஞ்சராத்ரம்
வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து மதுகைடபர்கள் பறித்த போது,....
இறைவனே மகரிஷிகளுக்கு ஐந்து இரவுகள் வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினான்.
அதனால் பாஞ்ச ராத்ரம் என்று பெயர்

2. வைகானசம்
இது விகனச மகரிஷி என்பவர் வேதப் பிரமாணமாக அவர் சீடர்களுக்கு உபதேசம் செய்தது.

இரண்டுக்கும், பொது மக்களான நம்மைப் பொறுத்த வரையில் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது! இரண்டிலும் நாராயணனே பரம்பொருள்!

பாஞ்சராத்ரம் கொஞ்சம் பெரிசு. பல கோட்பாடுகள். பிரம்ம சூத்திர விளக்கங்கள் என்று நிறைய எக்ஸ்ட்ராக்கள்! அதானால் இது ஒரு அத்தாரிட்டியாக கருதப்படுகிறது.
மேலும் இதுக்கு அவ்வளவா சாதி சமய ஆசிரமப் பிரிவுகள் எல்லாம் கிடையாது. சன்னியாசி தவிர மற்ற மூன்று ஆசிரமங்களில் இருந்து எவரும் அர்ச்சகர் ஆக முடியும்!

வைகானசம் அப்படி இல்லை - கிருஹஸ்ததில் உள்ள அந்தணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக முடியும்!

மற்றபடி புண்ணியாகவசனம் மற்றும் பல மந்திரங்கள் இரண்டுக்கும் மாறுபடும்! பிரம்மோற்சவம், பிராணப் பிரதிஷ்டை இவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறும்! அவ்வளவே!

வைகானசம் நடைமுறைக்கு ஏற்றாற் போல சில வழக்கங்கள் உள்ளன... பாஞ்ச ராத்ரத்தில் தத்துவ விளக்கம் மிகுதி!

வடகலை-தென்கலைக்கும், ஆகமங்களுக்கும் தொடர்பு இல்லை!
பாஞ்சராத்ரம் என்றாலே தென்கலை தான் என்று முடிவு கட்டி விடக் கூடாது!

சமூக மாற்றம், நிலைகளுக்கு ஏற்ப சில ஆலயங்களில் மட்டும் இராமானுசர் மற்றும் பல ஆச்சாரியர்கள் ஒரு ஆகமத்தில் இருந்து இன்னொரு ஆகமத்துக்குக் கோவிலை மாற்றினார்கள்! மற்றபடி அவை அவை, வந்த வழியில் அப்படியே தான் உள்ளன!

Geetha Sambasivam said...

என்னதான் படிச்ச கீதை ஆனாலும் கண்ணன் வாயால் வரும் விளக்கம் போல் ஆகுமா? ரொம்பவே நன்றி கண்ணன், குமரன், உங்களுக்கு ரொம்பவே நன்றி, இருவர் மூலமும் பல விஷயங்கள் தெரிய வந்தது அனைவருக்குமே! இருவருக்கும் மனமார்ந்த நல்லாசிகள்.

வன்பாக்கம் விஜயராகவன் said...

Hello, this article compares the two systems

http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Vaikhanasa/Pancaratra

Vaikhanasa and Pancaratara a short comparison
vaikhAnasa vaishnavas are not formally affiliated with the tradition
of Ramanuja. They also do not follow the pancaratra Agamas which
dictate the ritual of samASrayaNam or panca-samskAra. As their name
indicates, they follow the vaikhAnasa Agama, which is a different set
of Vaishnava ritual texts. The vaikhAnasa Vaishnavas trace their guru-
paramparA to Vikhanas Muni. In fact, in the place of 'SrImate
rAmAnujAya namaH' which is characteristic of all Sri Vaishnava
correspondence, they typically write 'SrImate vikhano munaye namaH'
(or some variant). Their doctrines claim origin from Atri, Bhrigu,
Kasyapa, and Marici, four rishis (see Gotra) who according to their
texts were taught directly by Vikhanas Muni, an incarnation of
Vishnu. The vaikhAnasa Vaishnavas are strictly hereditary -- one must
be born (or adopted) into a vaikhAnasa family to be considered a
vaikhAnasa Vaishnava.
As you are aware, the pAncarAtric rite of panca-samskAra establishes
a formal link between the initiate and an acharya of the tradition of
Ramanuja. The vaikhanasas as stated above do not have such a ritual,
and do not formally have a connection with Ramanuja. However, while
they are not branded with the insignia of Vishnu, they believe that
Vishnu himself comes to the womb in the third month of pregnancy and
brands the child with the sankha and cakra. This is known as 'garbha-
samskAra' and is dictated once again by the vaikhAnasa texts.

The vaikhAnasa texts are overwhelmingly concerned with the details of
temple ritual and largely do not contain philosophy. Most of the
philosophical teachings are similar to the pAncarAtra, including a
parallel five-fold manifestation of Vishnu. They also have a notion
of the 'nishkala' form of Vishnu -- the formless, primeval Vishnu
which is perceived only by the highest of yogis and which is beyond
even Brahma -- and the 'sakala' form, which is figured, divisible,
and emanated. It is in this form that Vishnu responds to devotion and
meditation. There is also 'sakala-nishkala' combination of the two,
which is found in the sAlagrAma. (These details may also exist in
some pAncarAtra texts).

People often confuse vaikhAnasas with Sri Vaishnavas because of their
similar outward resemblance. While the vaikhAnasas are strict
vaishnavas, they do not revere the Alvars and they do not even follow
Ramanuja's Sribhashya the same way we do. Many people also assume
that the Tirumalai temple (Tiruvengadam) is a Sri Vaishnava shrine.
In fact, the shrine is a vaikhAnasa one with strong Sri Vaishnava
association, but is not really a Sri Vaishnava shrine. Due to the
influence of Periya Tirumalai Nambi (uncle of Ramanuja), Ramanuja,
Tirumalai Anandaan Pillai, the Sri Vaishnava influence increased over
the years. The shrine took a more pAncarAtric tilt (more festivals,
recitation of Alvar paasurams, etc.) after the utsava mUrti of Lord
Ranganatha took refuge along with the Srirangam priests in the 13th
century. The cross-pollenation has led to the mixture of vaikhAnasa
with Sri Vaishnava touches we have today.

Note that there are no shrines to the Alvars on Tirumalai beyond the
dhvaja stambham, and even the shrine to Ramanuja is a rather late
one. Apparently the vaikhAnasa Agamas do not permit the installation
of idols of human beings inside their temples. The shrine to Ramanuja
is a remarkable exception.

Tirumalai is the purest example of a vaikhAnasa temple we have today.
There are many other vaikhAnasa temples in Tamil Nadu and elsewhere,
(Tiruvallikkeni, and Vaanamaamalai for example) but most of them have
been significantly influenced by pAncarAtra practices due to the
surrounding Sri Vaishnava community, so much so that the temples are
virtually indistinguishable from pAncarAtra temples in style (the
rituals may vary somewhat). In addition, many temples that were once
vaikhAnasa were converted to pAncarAtra during Ramanuja's days,
mostly because of a more liberal ritualistic attitude.

Credits: Mani Vardarajan

This article gives more info about Vaikhanasa

http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Vaikhanasa

மெளலி (மதுரையம்பதி) said...

//அத்வைதிகளுக்கு என்று இருக்க வேண்டும். சைவர்கள் வேறு; சைவ சிந்தாந்தத்தைப் பின்பற்றும் ஆதினங்களும் அவர்களின் சீடர்களும் சைவர்கள் ஆவார்கள் தமிழகத்தில். ஸ்மார்த்தர்கள் சைவர்களும் இல்லை; வைணவர்களும் இல்லை. சந்த்ர மௌலீஸ்வர பூஜை செய்வார்கள்; நாராயண ஸ்மிருதி என்பார்கள் அத்வைத ஆசார்யர்கள். சிவ விஷ்ணு பேதம் கிடையாது. சரி தானே?! //

குமரன், உங்கள் பதிலில் அருமையான கிளாரிட்டி சார், எனக்கு தெரிந்த விதத்திலான தெளிவான உதாரணம்....

ஆம் சிவ-விஷ்ணு பேதம் இல்லாதவன் தான் ஸ்மார்த்தன், அதிலும் அவன் அத்வைதத்தை நோக்கி செல்பவனாக இருத்தல் என்பது சங்கரர் வழிக்கு மிக முக்கியம்....

கீதாம்மா, உங்கள் தளத்தில் இந்த விளக்கத்திற்கு இடமளித்தமைக்கு நன்றி.....

கண்ணபிரான்: தங்கள் பதிலில் எனக்கு தெளிவான விளக்கம் கிடைத்தது...வேறு ஏதேனும் சுட்டி இருக்குமாயின் தெரிவியுங்கள்....
தாந்திரிக முறை வழிபாடு என்பது வைஷ்ணவத்தில் இருக்கிறதா?, அது இந்த இரு முறைகளுக்குள் வருமா?,
நேரம் கிடைக்கையில் சற்றே விளக்குங்களேன்?.

நன்றியுடன்,
மெளலி...

Geetha Sambasivam said...

Mr/Miss?Mrs.? V. Thank you for your clarification. I also came through this subject by the same link, given by me friend. Very thankful to you. I have been told many times about the Thirumala Temple, and it's practises, but till now did not believe them. Now it is very clear. Thank You once again.

Geetha Sambasivam said...

மெளலி, வைணவத்தில் தாந்திரீக முறை வழிபாடு இல்லை, நிச்சயமாய்த் தெரியும்.

Geetha Sambasivam said...

அருமையான தகவல்கள் ஸ்ரீபீடியாவில் கிடைக்கிறது. லிங்க் கொடுத்த வல்லி சிம்ஹனுக்கும், "V"க்கும் நன்றிகள் பல.

குமரன் (Kumaran) said...

Yes. This one from Sripedia is the article I was also referring to. I guess Sri. Mani Varadarajan wrote this in the 'Bakthi' email list in which I have been a silent member from 1996. If I remember correctly, there is one more article by Sri. Sadagopan dealing with the same subject. I will try to find that one also.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தாந்திரிக முறை வழிபாடு என்பது வைஷ்ணவத்தில் இருக்கிறதா?, அது இந்த இரு முறைகளுக்குள் வருமா?,
நேரம் கிடைக்கையில் சற்றே விளக்குங்களேன்?.

நன்றியுடன்,
மெளலி... //

மெளலி சார்.
முன்பே சொன்னது போல் வேதங்களில் இருந்து தான் ஆகமம் மற்றும் இதர முறைகள் எல்லாம் பரிமாணம் அடைகின்றன.
அதனால் சைவ, வைணவ, சாக்த என்று எல்லா ஆகமங்களிலும் தாந்த்ரீகத்திற்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு!

அதர்வண வேதத்தை மையமாகக் கொண்டு செய்யும் வைணவ முறைகள் கேரள தாந்த்ரீகர்களிடையே வழக்கம்.

விஞ்ஞானலலிதா என்னும் ஒரு கிளை ஆகமம் வைணவத்தில் உண்டு; வங்காள தேசத்தில் கொஞ்சம் பிரபலம். இதில் தாந்த்ரீகம் தூக்கலாக இருக்கும்!

பாஞ்சராத்ர ஆகமத்துக்குள்ளேயே தாந்த்ரீகமும் உள்ளது. சுதர்சன யந்திர மந்திர முறைகள், சாளக்கிராம ஆராதனைகள் இவை எல்லாம் தாந்த்ரீகத்தில் அதிகமாக இருக்கும்!

வைகானசம்/பாஞ்சராத்ரம் இரண்டிலுமே ஆலய கும்பஸ்தாபனம், யந்திரப் ப்ரதிஷ்டை போன்றவற்றில் சுதர்சன வழிபாடு மாந்த்ரீக, தாந்த்ரீகமாகவே இருக்கும்!

தேவி மந்த்ர ரூபிணியாக இருப்பதால், சாக்தத்தில் மட்டும் தாந்த்ரீகம் பரவலாகத் தென்படுகிறது. மற்றபடி அதுவும் ஒரு யோகமாக இருப்பதால், தாந்த்ரீகம் அனைத்து ஆகமங்களிலும் உண்டு தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண்ணபிரான்: தங்கள் பதிலில் எனக்கு தெளிவான விளக்கம் கிடைத்தது...வேறு ஏதேனும் சுட்டி இருக்குமாயின் தெரிவியுங்கள்....//

ஆகமங்களும் வாழ்வியில் முறையும்
Dr. V. Varadachari, 1982. Agamas and South Indian Vaishnavism.
http://www.salagram.net/sstp-AgamasSIV.html

திருமலையில் வைகானசம்:
http://www.omnamovenkatesaya.com/Saptagiri_Dec2005_Eng/Vaikhanasagama.htm

ஆகமங்கள், மக்கள் நலனுக்காக உருவானவை. அதனால் அதனதன் காலக் கண்ணோடத்தோடு தான் பார்க்க வேண்டும்!

வைகானசமே, பாஞ்சராத்ரத்தில் இருந்து நிறைய reference செய்கிறது!
Mr/Miss?Mrs.? V. அவர்கள் குறிப்பு கொடுத்தது போல,

வைகானசம் = கொஞ்சம் ஸ்டிரிக்டான ஆகமம். மேலும் காலப்போக்கில் அது ஒரு குலத்துக்குள் மட்டும் தங்கி விட்டது!

பாஞ்சராத்ரம் = பலரையும் அரவணைத்துச் செல்வது. பக்தி இயக்கத்துடன் ஒன்றிய கருத்துக்களைக் கொண்டு இருந்ததால், இது வைணவம்/ஸ்ரீவைணவத்தில் ஹிட்டாகி விட்டது! :-)

பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட எவரும் இதில் அர்ச்சகர் ஆகலாம்!
அதனால் தான் ஆளவந்தார், இராமானுசர், தேசிகன் போன்ற பலர், அந்தக் காலகட்டத்தில் பாஞ்சராத்ரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்! இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் பெரும்பாலும் மக்கள் பொருட்டு தான்!
பெருமாள் பொருட்டு இல்லை! :-)

புதுசா ஒரு ஆலயம் கட்டினா அது பாஞ்சராத்ரமா இல்லை வைகானசமா? - யார் முடிவு செய்வது?
- விடை என்னன்னா...
அது கட்டுபவரான, அரசன், குரு, மற்றும் அந்த ஊரில் availableஆக உள்ள பூசை செய்பவர்கள் இவர்களைப் பொறுத்தது தான்!
Again its purely a matter of administration, resource allocation and prevalent social order!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Note that there are no shrines to the Alvars on Tirumalai beyond the dhvaja stambham, and even the shrine to Ramanuja is a rather late
one. Apparently the vaikhAnasa Agamas do not permit the installation of idols of human beings inside their temples//

இது முற்றிலும் தவறான கருத்து!
திருமலை மேல் ஸ்ரீநிவாசனுக்கு உணவளித்த வகுளமாலிகை அம்மாவுக்கும் திருமலைக் கோவிலில் சிலை உள்ளது!
பரிவார தேவதைகளான அனந்தன், அங்கதன் போன்றவர்க்கும் விஸ்வக்சேனருக்கும் கூட திருமலையில் சிலைகள் உள்ளன!

வைகானசத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் மட்டுமே முக்கியத்துவம். மற்றவர்களுக்கு எல்லாம் பொதுவா இடம் கிடையாது என்பது தவறான புரிதல்! அப்படியானால் தாயாருக்கு திருமலையில் ஏன் தனிச் சன்னிதி இல்லாமல் போனது? கீழே கொண்டு போய் எதற்கு சன்னிதி வைத்தார்கள்?
திருச்சானூரில் பாஞ்சராத்ர முறை வேறு! மேலே ஒரு முறை; கீழே வேறு முறை! :-))

திருமலைக் கோவிலைப் பொது விதிகளுக்குள் அடிக்கி விட முடியாது! அது தானே ஆவர்ப்பித்த தலமானதாலே, மலையே வைகுந்த சாளக்கிராமமாக இருப்பதாலே, அதற்கென்று தனி விதிகள். பல குழப்பங்களுக்கும் இத்வே காரணமாகி விடுகிறது! :-))

யாரேனும் திருமலை மேல் தவறிவிட்டால் கூட, மலையின் கீழே இறக்கித் தான் எல்லாம் செய்ய வேண்டும். திருமலையில் மலர்கள் எல்லாம் எம்பெருமானுக்கே உரியவை. இப்படிப் பலப்பல...இதற்கும் ஆகமங்களுக்கும் தொடர்பு இல்லை!

ஆழ்வார்கள் மலையின் மேல் தங்கள் கால் பட அஞ்சி, அடிவாரத்தில் இருந்தே சேவித்ததால் தான், அவர்கட்கு மேலே சிலைகள் கிடையாது! இராமானுசர் ஆதிசேஷன் அம்சம் என்பதால் தான் அவருக்கு மட்டும் விதிவிலக்கு! இது அனந்தாழ்வான் பெருமாளிடமே பேசி வாங்கிய சலுகை!
மற்றபடி ஆழ்வார் பாசுரங்கள் தினம் தினம் முழக்கம் தான்!

ஆழ்வார் சிலைகள் இல்லாமலேயே மார்கழியில் அத்யயன உற்சவம் இன்றும் திருமலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீதாம்மா...
இது பற்றி நிறைய பேசி விட்டோம்! நீங்கள் தொடரின் நோக்கமான தில்லையைத் தொடருங்கள்! :-)
அம்பி கவனிக்கவும் நான் "தொல்லையைத் தொடருங்கள்"-ன்னு சொல்லலை! "தில்லையைத் தொடருங்கள்" என்று தான் சொன்னேன்! :-)))

கீதாம்மா...உங்களால் என் டீமில் பணி புரிபவர்க்கு எல்லாம் கொள்ளை லாபம்!
பெருமாளைப் பற்றிப் பேசிய நினைவுகளோடு Mid Year Review செய்ததால், நல்ல மூடில், எல்லார்க்கும் மார்க்குகளை அள்ளித் தெளித்து விட்டேன் போல!
உங்களால் எல்லாருக்கும் நல்ல போனஸ் கிடைக்கப் போகுது, போங்க! :-))

குமரன் (Kumaran) said...

Ravishankar,

Thanks for the good explanation and the links. I will read through the articles in the other pages/links.

I differ on the statement that Agamas are based on Vedas, but that is a discussion for another day. :-)