எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 21, 2007

தாமதத்துக்கு மன்னிக்கவும்.

பல நாட்கள் ஆகிவிட்டது எழுதி. முக்கியக் காரணம் தீட்சிதர்கள் பற்றியும் அவர்கள் வழிபாட்டு முறை பற்றியும் எழுத வேண்டும் என்பதால், வைதீக வழிபாட்டு முறைக்கும், மற்றக் கோயில்களின் சைவ ஆகம வழிபாட்டு முறைக்கும் உள்ள வித்தியாசம் சரியாய்ப் புரியாததால் தேடுதல் படலம் தினமும் நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. பலரிடம் கேட்டுள்ளேன். சென்னை திரும்பியதும் எங்கள் தீட்சிதரிடமே நேரில் போயும் கேட்க எண்ணம். அதற்கு முன்னர் எங்கிருந்து தகவல் கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளவும் ஆசைதான். இன்னும் மாலிக்காஃபூர் படை எடுப்பைப் பற்றியும், அப்போது சிதம்பரம் தீட்சிதர்கள் செய்த உயிர்த் தியாகம் பற்றியும் சரியாய்க் குறிப்புக்களுக்கும் படிக்க வேண்டி இருக்கிறது. நேற்றுத் தற்செயலாய் இது பற்றி ஒரு பதிவு கிடைத்தும் கூட அவர் ஸ்ரீரங்கம் கோயிலின் ரங்கநாதர் திருப்பதியில் ஒளிந்து இருந்தது பற்றித் தான் அதிகம் எழுதி உள்ளார். சிதம்பரம் கோவில் பத்திக் குறிப்புக் கிடைக்கவில்லை.

சிதம்பரம் கோவிலில் கம்பரின் "ராமாயணம்" அரங்கேற்றம் நடந்தது என எனக்குக் கிடைத்துள்ள தீட்சிதரின் குறிப்புக்களில் இருந்து எழுதி உள்ளேன். ஆனால் அதை மறுத்தும் ஒருவர் எழுதி உள்ளார். அவர் ஸ்ரீரங்கம் தான் "கம்ப ராமாயணம்" அரங்கேற்றம் நடந்த இடம் என எழுதி உள்ளார். பள்ளி நாட்களில் நான் படித்ததும் அவ்வாறுதான், என்றாலும் இது பற்றியும் தேடிக் கொண்டு போகக் கிடைத்தது ஒரு சுவையான சர்ச்சைக்கு உரிய கட்டுரை! ரசிகமணி திரு டி.கே.சி. அவர்கள், பழைய மணிக்கொடி இதழ்களில் எழுதிய ஒரு கட்டுரை! "கம்பனின் மாண்பு" என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் அவர் இந்தக் கம்ப ராமாயணம் "திருவெண்ணெய்நல்லூரில்" அரங்கேறியதாய்க் குறிப்பிடுவதோடு கம்பனின் காலமும் கி.பி. 8-ம் நூற்றாண்டு எனக் கூறுகிறார். சரித்திர ஆசிரியர்கள் கூறும் 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் கம்பன் பிறந்திருக்க முடியாது எனக் கூறுகிறார். முழுக் கட்டுரையையும் ஒளியேற்ற முடியாட்டியும் கட்டுரையின் அந்தப் பகுதியை மட்டுமாவது எடுத்துப் போட ஒரு ஆசை! ஆனால் அதற்கு இந்தப் பக்கம் சரி இல்லை. "எண்ணங்கள்" பகுதியில் முடிந்தால் போடுகிறேன். இது இந்தப் பகுதியில் ஆன்மீகம் மட்டுமே. இப்போ இது எழுதுவது கூடத் தாமதம் ஆவதால் காரணம் சொல்லத் தான்.

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அப்போ இங்கயும் மொக்கைய ஆரம்பிச்சுட்டீங்க...ஏதோ நடத்துங்க...

வடுவூர் குமார் said...

பரவாயில்லை,காத்திருக்கிறோம்.

Geetha Sambasivam said...

@மெளலி, மொக்கை எல்லாம் இல்லை, "ஆன்மீகப் பயணம்" பக்கங்களில் அது வராதுன்னு ஏற்கெனவே "அபி அப்பா"வுக்குச் சொல்லி இருக்கேன். உங்களுக்கும் சொல்லறேன். இது தாமதத்துக்குக் காரணம் தான் சொன்னேன். சும்மா இருக்கேனோனு யாரும் நினைச்சுக்கக் கூடாது இல்லையா? சில விஷயங்களுக்குச் சில குறிப்புக்களும், ஆதாரங்களும் தேவைப் படுது. நான் அப்படியே எழுதிட்டுப் போனாலும், முத்தமிழ்க் குழுமத்தில் கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தயாரா இருக்கணுமே? அதான் தாமதம் தவிர்க்க முடியலை.

@வடுவூர், நன்றி.