எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, January 28, 2010

நடந்தாய் வாழி காவேரி! - காவேரி ஓரம் 1 குடந்தை ராமசாமி கோயில்

கும்பகோணத்துக்குப் போய் இறங்கிய அன்றே ராமசாமி கோயிலுக்குப் போனோம். ஒவ்வொரு முறை அங்கே செல்லும்போதெல்லாம் கோயில் வாசலோடு போனாலும் உள்ளே செல்ல முடிந்ததில்லை. அங்கே உள்ள சிற்ப, சித்திரங்கள் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். வெறுமனே பார்த்துட்டு வந்தால் போதுமா? இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் சிற்பங்களைப் படம் எடுக்க முடியவில்லை. கூட்டம் இல்லாத நேரம்னு கிடைக்கவே இல்லை. அதென்னமோ எங்க ராசியோ என்னமோ தெரியலை, நாங்க எங்கேயானும் போனால் போதும், கூட்டமே இல்லாமலிருக்கும் அந்த இடம் மக்கள் கூட்டத்தால் வழிய ஆரம்பிக்கும். இங்கும் அதே! ஒருத்தருக்கும் தெரியாமல் எப்படி எடுக்கிறது? போறாக்குறைக்கு ஒரு சுற்றுலாக் கூட்டம் வேறே.

இந்தக் கோயில் கிட்டத் தட்ட ஐநூறு வருடங்கள் பழமையானது என்று சொல்கின்றனர். அயோத்தியில் இருக்கும் ராமர் போல் இங்கே தான் காணமுடியும் என்றும் சொல்கின்றனர். ராமர் தன் குடும்பத்தோடு காட்சி அளிக்கும் ஒரே கோயில் தமிழ்நாட்டிலே இது மட்டுமே என்கின்றனர். நல்ல ஆஜாநுபாகுவாக ராமரும், அவர் அருகே அழகே வடிவான சீதா தேவியும், மற்ற மூன்று சகோதரர்களும் காட்சி அளிக்க அநுமனோ கையில் வீணையுடன் காட்சி கொடுக்கிறார். ராமருக்கு என பல தனிக்கோயில் நம் நாட்டில் இருந்தாலும் பரதனுக்கு என ஒரு கோயில் கேரளாவில் இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். இம்மாதிரி சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து காட்சி அளிப்பது அயோத்தி தவிர இங்கே தான் என்று பட்டாசாரியார்கள் கூறினார்கள்.

இது தவிர ஒரு பெருமாள் சந்நிதியும் உள்ளது. விநாயகர், விநாயகராகவே நாமங்கள் இல்லாமல் சுற்றுச் சுவரில் காட்சி அளிக்கின்றார். சந்நிதிக்கு வெளியே பிராஹாரத்தில் ராமாயணம் மொத்தமும் அழகான சித்திரங்களால் வரையப் பட்டுள்ளது. மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ள அந்தச் சித்திரங்கள் நாயக்கர் காலத்தவை எனச் சொல்கின்றனர். யாருக்கும் அது பற்றிச் சொல்லத் தெரியவில்லை. குறிப்பு ஏதானும் இருக்குமானு தேடினேன், சரியாத் தெரியலை. இன்னொரு முறை பகலில் போய்ப் பார்க்கணும்.

இங்கே ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பதால் இது ராமரின் திருமணக்காட்சி என்றும் கூறுகின்றனர். அநுமன் ராமாயணத்தைப்பாடிய வண்ணம் காட்சி அளிப்பதாகவும் கூறுகின்றனர். ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின் அவதாரமாக பூமியில் பிறந்தபோது அவருடைய படுக்கையான ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் பிறந்ததாகச் சொல்லுவார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். சகோதரர்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்ததும் ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு. அதே போல் நால்வரும் ஒரே குடும்பத்து சகோதரிகளையும் மணந்தனர். ராமருடைய பட்டாபிஷேஹக் காட்சிகளைத் தென்னக மக்கள் பார்த்து இன்புற முடியவில்லை என்றே இந்தக் கோயில் இம்மாதிரி வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர். படங்களை இங்கே காணலாம்.

யாருக்கும் தெரியாதபடி கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தான் படங்கள் எடுக்க முடிந்தது. நான் தேர்ந்த திறமைவாய்ந்த போட்டோகிராபரும் இல்லை. ஓரளவு சுமாரான படங்களைக் காணலாம். ராமசாமி கோயில் சித்திரங்கள்

14 comments:

sathishsangkavi.blogspot.com said...

சித்திரங்கள் அனைத்தும் அருமை...

ambi said...

//இம்முறை காமிராவும் கையுமாப் போனோம். வழக்கம்போல் சிற்பங்களைப் படம் எடுக்க முடியவில்லை.//

:)))

அந்த கோவிலுக்கு போற வழி, லேண்ட்மார்க் எல்லாம் சொன்னால் எல்லாருக்கும் வசதியா இருக்கும்.

Geetha Sambasivam said...

வாங்க சங்கவி, ரொம்ப நன்றிங்க.

Geetha Sambasivam said...

அம்பி, கோயில்களில் வெளிப்பிரஹாரங்களில் மட்டுமே படம் எடுக்க முடியும், ஆனால் இந்தக் கோயிலில் அதுவும் முடியலை! :((( இந்தச் சித்திரங்களே உள் பிராஹாரத்தில் இருக்கின்றன. வருவோரும் போவோருமாக் கூட்டம்,கோயில் ஊழியர்களுக்குத் தெரிஞ்சிருந்தால் காமிராவைப் பிடுங்கி இருப்பாங்க, ஸ்கந்தாஸ்ரமத்தில் நடந்தாப்போல, உங்களுக்கு என்ன? சொல்லுவீங்க! :P:P:P:P:P

Geetha Sambasivam said...

இங்கே பார்க்கவும்

ஹிஹிஹி, ஒரு சின்ன விளம்பரமும் கூடவே! :D

Jayashree said...

எத்தனை வருஷ பழைய பெயின்டிங்களோ? புதுப்பிகறது கஷ்டமோ? நல்லா இருக்கு. இந்த கோவில் பாத்தது இல்லையே!

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப பிசியா இருக்கீங்க போல! :D பல நாட்களாய்க் காணோமே?

ம்ம்ம்ம்ம்?? அப்படி ஒண்ணும் ரொம்ப வருஷம் ஆயிருக்குனு தெரியலை. நாயக்கர் காலத்து பெயிண்டிங். மூலிகை வண்ணங்கள், இருநூறு வருஷம் ஆகியிருக்கும்னு என் எண்ணம், இதிலே தேர்ச்சி பெற்ற நண்பர் ஒருவர் நூறு வருஷம் இருக்கலாம்னு சொல்றார். :))))))

குடந்தை அன்புமணி said...

பிரம்மனுக்கும் தமிழ்நாட்டிலேயே குடந்தையில் மட்டும்தான் இருக்கிறது.

குடந்தை அன்புமணி said...

பிரம்மன் கோயில் ராமசாமி கோயிலின் பின்பக்க சாலை வழியாக செல்லாம்.

எல் கே said...

intha koviluku nan 6 varusam munnadi poiruken

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

படங்கள் மிக அருமை.

குமரன் (Kumaran) said...

ஒரே ஒரு முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன் கீதாம்மா. 93ல் என்று நினைவு. அப்போது இந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆகா. அருமை அருமை. பார்த்துக் கொண்டே இருக்கலாம். குடந்தை இராமஸ்வாமி கோவிலைப் போலவே இங்கே சிகாகோவிலும் பார்க்கலாம். எனக்கு சிகாகோ கோவிலுக்குப் போகும் போதெல்லாம் குடந்தை இராமசாமி கோவில் தான் நினைவிற்கு வரும்.

யானைமுகத்துடன் யார் இருந்தாலும் அந்தக் கடவுள் விநாயகர் தான் என்று சொல்லிவிடுவதா? அப்படி நினைப்பதால் தான் பெருமாள் கோவில்ல பிள்ளையாருக்கும் நாமத்தைப் போட்டுட்டாங்கன்னு தப்பா நினைக்கத் தோணுது. பெருமாளுடைய படைத்தலைவரான சேனைமுதலியார்/விஷ்வக்சேனரின் படைத்தளபதிகளில் ஒருவர் விக்னேசர். அவருக்கு இரண்டு தந்தங்கள் உண்டு. அவர் தான் நாமம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

வேண்டுமானால் 'யஸ்ய த்விரத வக்த்ராத்யா...' என்று தொடங்கும் சுலோகத்தின் பொருளைப் பாருங்கள். யாருடைய சபையில் விக்னேசர் வீற்றிருக்கிறாரோ அந்த விஷ்வக்ஸேனரை வணங்குகிறேன் என்று வரும்.

ஒற்றைக்கொம்பன் விநாயகன். இரட்டைக்கொம்பன் வைணவ விக்னேசன். இந்த வேறுபாடு தெரிந்தால் விநாயகருக்கு நாமம் போட்டார்கள் என்ற வருத்தம் வராது!

Geetha Sambasivam said...

குமரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்தக் கோயிலில் ஒற்றைக்கொம்பரைப் பார்த்ததாய்த் தான் நினைவு. எதுக்கும் அடுத்த மாசம் போகும்போது நல்லாவே பார்த்துட்டு வரேன். ஓரளவுக்கு விஷ்வக்சேனருக்கும், விநாயகருக்கும் வித்தியாசம் தெரியும், என்றாலும் ............ :(((((((

நெல்லைத் தமிழன் said...

படங்களைப் பார்க்கமுடியவில்லை. பதிவு நன்று