நேத்திக்கு எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற நலச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு விஜயராகவன் என்னும் ஆய்வாளர் (ஸ்ரீரங்கம் குறித்தே ஆய்வுகள்) ஸ்ரீரங்கம், திருச்சி குறித்த சில அபூர்வமான பழைய படங்களைப் பவர் பாயிண்ட் ஷோவாகக் காட்டினார். அவருக்கு இதைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டு மடல் அனுப்பியுள்ளேன். ஆனாலும், அவரைக் கேட்காமலேயே இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டேன். தப்போ, சரியோ தெரியலை. பல விஷயங்களும் மிகப் புதியவை. பல படங்களும் அபூர்வமானவை. நிகழ்ச்சி முழுதும் என்னால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை. ஸ்ரீரங்கம் குறித்த படப் பகிர்வுகள் முடிந்ததும் கிளம்பிவிட்டேன். அவர் ஸ்ரீரங்கம் குறித்த வலைப்பதிவு ஒன்றும் வைத்துள்ளார். அதில் இந்தப் படங்களோடு மேலதிகத் தகவல்களும் கொடுத்திருக்கிறார். இங்கேபார்க்கவும். இனி படங்கள்.
காவிரி அந்த நாட்களில் ஓடிய அழகு
அந்த நாளைய ஓவியம்
மற்றப் படங்களும் அடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.
படங்கள் நன்றி: திரு விஜயராகவன்
3 comments:
அங்கு சென்று பார்க்க 'க்ளிக்'கியிருக்கிறேன்!
வாங்க ஸ்ரீராம், அங்கே போய்ப் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன்.
வாங்க திண்டுக்கல் தனபாலன், நன்றி.
Post a Comment