அரங்கனை வெகுநாட்களாகக் கவனிக்கலை. :( அரங்கன் கதையைத் தொடரணும். அவன் ஊர் சுற்றியது குறித்துக் கொஞ்சம் போல் எழுதியதை மீண்டும் தொடரணும். நேரம் வாய்க்கலை. அதிலே உட்கார்ந்தால் விஷயங்கள் தேடுவதிலும், குறிப்புகள் எடுப்பதிலும் நேரம் போயிடும். ஆகவே தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கேன். நடுவிலே கிடைத்ததைப் போடுகிறேன். நேத்தெல்லாம் போஸ்டே போடலை. ஆனால் வந்தவங்க நிறையப் பேர். ஹிட் லிஸ்ட் எகிறி இருக்கு. புதுசா ஏதும் இருக்கானு பார்த்திருப்பாங்க போல! :)
நம்ம மாதங்கிக்கும், அவங்க அப்பா மாலி என்ற மஹாலிங்கம் அவர்களுக்கும் பக்தி, ஆன்மிகம் சம்பந்தமா எந்தச் செய்தி கிடைச்சாலும் அதை உடனே என்னுடன் பகிர்ந்து கொண்டுவிடுவாங்க. அப்படிப் பகிர்ந்தது தான் பிரணய கலஹம். பதிவுகள் வந்தன. அதைத் தபாலில் அனுப்பி இருந்தாங்க. தபாலை வாங்கி எங்கேயோ வைச்சுட்டு அதைக்காணாமல் மாதங்கிக்குத் தொலைபேசி அப்புறமாக் கண்டு பிடிச்சு எழுதினேன். :))) இம்முறை மாதங்கி அப்பா நேரிலேயே எடுத்து வந்துட்டார். இம்முறை அவர் கொடுத்திருப்பது காமதேனுவின் சரித்திரம். இதை ஒரு தோத்திரமாக, இசைப்பாடலாக வேலை செய்து கொண்டே அவங்க வீட்டுப் பெரியவங்க பாடுவாங்களாம். தற்செயலாகக் கிடைத்ததை ஸ்கான் செய்து எடுத்து வந்துட்டார். என்னிடம் கொடுத்துட்டுப் போய்ப் பத்து நாட்கள் ஆயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தட்டச்சிட்டு இருக்கேன். தட்டச்சியவரை இங்கே பகிர்கிறேன்.
காமதேனுவின் சரித்திரம்
1தெப்பக் கணபதியே, தொந்தி வயத்தானே, கருத்தரிக்கு முன் பிறந்த கணபதியே, முன்னிடுவாய், பேழை வயத்தோனே, பெருச்சாளி வாகனனே, பசுவின் சரித்திரத்தை பக்தியாய் நான் எழுத விக்கினங்கள் வராமல் வினாயகரே, முன்னிடவும். முப்பழமும், தேங்காயும், மோதகமும் நான் படைப்பேன்.
சரித்திரத்தின் வரலாறு
மஹாபலியின் வேள்வியிலே மாதவனும், வாமனனும் மூன்றடி மண் அளந்து முக்திபதம் தான் அளித்தார். அந்த சமயத்தில் அசுரர் குலத்துதித்த, இந்திர சத்துருவும் பயம் கொண்டு தானிருக்க தானே அசுரன் தளர்ந்த மனதுடனே சிந்தை கலங்கி செய்வதொன்றும் தோன்றாமல், கண்ணனுடைய கபடத்தைத் தான் நினைத்து மாதவன் செய்த வஞ்சனையைத் தான் நினைத்து மாயவனார் செய்த வஞ்சனையால் வாழ்வைப் பறித்துவிட்டார்.
ஶ்ரீமதியின் கபடத்தால் செல்வம் இழந்துவிட்டேன் என்று கலங்கிய மனதுடனே கருத்திழந்தே தான் இருந்தார்.
பரம பாகவதரான பிரஹலாத ஆழ்வாரும், தைத்திய ராஜனுக்கு தருமத்தை எடுத்துரைத்தார். பக்தியில் சிறந்த பலி சக்கரவர்த்தியும் பாட்டனைத் தான் வணங்கி பக்தி பரவசத்தால் என் குலதெய்வமே என்னுடைய தாத்தாவே,
ஐந்து வயதில் ஹரியை அறிந்து கொண்டீர்.
குஷியில் இருக்கும்போது குரு உபதேசம் பெற்றீர்
கர்ப்பத்தில் இருக்கும்போது கேசவனைத் தான் அறிந்தீர்
வயிற்றில் இருந்து வாசுதேவனை அறிந்தீர்.
கேசவப்ரியே கிருபையுள்ள உத்தமரே
பணத்தின் பெருமையால் பரமனை நான் மறவேன்
ஐஸ்வர்யத்தினால் அகங்கொண்டு தான் இருந்தேன்.
தானவகை அறியேன்
தருமத்தின் பெயர் அறியேன்
முக்திவழி அளிக்கும் முகுந்தனைத் தானறியேன்
பேரன் உரைக்கலுமே, பிரஹலாதன் தான் மகிழ்ந்து, தான மகிமையை தானவேந்திரர் சொல்லுகிறேன்.
பக்தியினாலே பரமபதம் தான் அடைவாய். நாமங்களாலே நல்ல கெதி பெறலாம்.
கிருஷ்ணா என்று சொன்னால் கேட்ட செவி திறக்கும். அச்சுதா என்று சொன்னால் அங்கம் மிகக் குளிரும்.
கேசவா என்று சொன்னால் க்லேசம் பறந்தோடும். நாராயணா என்று சொன்னால் நல்ல கெதி பெறலாம்.
ஹரி என்னும் பக்தி அமிர்தகல சிந்தையிலே எப்போதும் சிந்தை எங்கும், அங்கும் தோன்றாமல் பல சிந்தை ஓடாதே, பாவம் வந்து தீண்டாதே.
பரமபத நாதனை பக்தியால் பூஜை செய்து, ஜனன, மரணமெனும் ஜென்மம் எடுக்காமல் சம்சார சாகரத்தில் தலையிட்டுக் கொள்ளாமல், காலமே எழுந்திருந்து கடவுளைத் தான் நினைத்து, காலனை நினைத்து, கணவனைத் தான் நினைத்து, நீலனை எண்ணி நிலையான பாதத்தை எண்ணி, குஞ்சலத்தை எண்ணி, குலாவாம் பசுவை எண்ணி, பஞ்ச கன்னிகைகளை, பக்தியாய்த் தான் நினைத்து, பசுவின் புராணத்தை பக்தியுள்ள நற்கதையை, கோவின் சரித்திரத்தை கொத்தவனே சொல்லுகின்றேன்.
காமதேனு என்னும் காக்ஷியுள்ள சரித்திரத்தைக் அசடர்கள் கேளாதே, கருமிகள் கேளாதே. எச்சில் கலக்கும் இரண்யாத்மா கேளாதே.
தூரம் கலக்கும் துர் ஆத்மா கேளாதே.
கூலி நிறைக்கும்கொடும்பாவி கேளாதே.
தாய் சொல் கேளாத சண்டாளி கேளாதே.
ஒத்த கணவன் சொல் ஊர் சொல் கேளாத, பக்தி இல்லாத பாவியர்கள் கேளாதே.
அன்னம் இடாத அரும்பாவி கேளாதே.
மாமி சொல் கேளாத மஹாபாவி கேளாதே.
கற்பை அழித்த ஆரும்பாவி கேளாதே.
சிசு ஹத்தி செய்த தீயர்கள் கேளாதே.
பசுவை அடித்த பாவியர்கள் கேளாதே.
பூமாதேவி கேட்டால் பொன்னாலே நெல் விளையும்.
வருண பகவான் கேட்டால் வருஷம் மழைபொழியும்.
மலடிகள் கேட்டால் மைந்தர்களைப் பெத்திடுவாள்.
கன்னியாப் பெண்கள் கேட்டால் நல்ல கணவனைத் தேடி அடைவாள். அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.
(தொடரும்)

10 comments:
படிச்சாச். (நிசம்மா...)
//அந்தப்பரிசுத்தமான பசுவின் நற்கதையை பாக்கியவானே உனக்கு நீதியாய் நான் உரைப்பேன்.//
ஆஹா, தொடர் இனிமேல் தான் ஆரம்பமாகப்போகிறது.
இதுபூராவும் முன்னுரை மட்டுமே.
சபாஷ். தொடருங்கோ.
அருமை... தொடர...
வாழ்த்துக்கள்...
@ஸ்ரீராம்,
@வைகோ சார்,
@ டிடி மூவருக்கும் நன்றி.
அது சரி, ஶ்ரீராம், அது என்ன நிசம்மா?? :))) பின்னே பொய்யா வேறே படிப்பீங்க????? (இன்னிக்கு வம்புக்கு யாருமே மாட்டிக்கலை!)
MaLi--- MahaLingam! :)
he,he, Matangi, thiruthidaren. :))))
இந்தப் பதிவை பார்த்ததிலிருந்து படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றைக்குத் தான் நேரம் கிடைத்தது.
அருமையான அறிமுகப் பதிவு. அடுத்த பாகத்திற்கு செல்கிறேன்.
வாங்க ராஜலக்ஷ்மி, மிக்க நன்றி. ஒரு பசுவுக்கே இவ்வளவு நெறிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டி இருக்க, மனிதனுக்கு எவ்வளவு இருக்கணும் என்பதே இதன் உட்கரு. இன்றைய வாழ்க்கையில் இந்த நெறிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. சொல்லிக் கொடுப்போரும் இல்லை; சொல்லிக் கொடுத்தாலும் கேட்போரும் இல்லை! :(((
Om namonarayan om siva siva om
Post a Comment