எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, December 06, 2013

காமதேனுவின் சரித்திரம் --- பகுதி நான்கு

பசுவின் வாக்கியத்தைக் கேட்டும் அந்தப் புலியும் அப்போ பக்திகள் உண்டாகி, இப்பசுவின் உயிரை விட என்னுயிர் தான் பெரிதோ.  உத்தம குணமுள்ள உன்னை நான் புஜித்து உலகில் இருந்து உயிர் வாழ்வதை விட செத்து மடிந்திடுவேன். சிவலோகம் சேர்ந்திடுவேன்.  மாண்டு மடிந்திடுவேன்.  வைகுண்டம் சேர்ந்திடுவேன்.  பசுவின் சங்கத்தால் பரமபதம் நான் அடைவேன் என்று புலியும் தான் இறைவனைத் தான் தொழுது கொடிய புலியும் கோவிந்தனுடைய சங்கத்தால் பரம பதம் சேர்ந்தப்போ, புலியின் காக்ஷியைப் பார்த்து அந்த நற்பசுவும்,


இப்பாவியின் உடல் புலி பசிக்குத் தராமல் இந்த சரீரம் இருந்தென்ன, போய் என்ன! என்னத்தை எண்ணிப் புலி இறந்ததோ நான் அறியேன்.  நான் கொடிய பாவம் செய்ததினால் இக்கொலை பாதகத்தை நான் பார்த்தேன்.  நானும் மடிவேன். நாதனே அருள் புரிவாய் என்று பசுவும் அடர்ந்ததொரு காடு வந்து பாலைவனம் நடந்து பரமனைத் தான் பார்த்து பக்திப் பெருக்கத்தால் சுற்றி வலம் வந்து ஸ்தோத்திரங்கள் தான் செய்து, முக்தி அளிக்க வேண்டும் முகுந்தனே, சரணமையா, மாறி மாறி வருகின்ற மகிமையுள்ள பிறப்புக்களில் நான் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் எனக்கு உன் பக்தி மறவாமல் இருக்க பாக்கியங்கள் செய்ய வேண்டும் என்று பசுவும் ஈசனைத் தான் வணங்கி திரும்பி வரும்போது சிவலிங்கத்தைக் கண்டு லிங்கத்தின் வயிற்றிலே ரத்தம் பெருகியதைக் கண்டது பசுவும்.

அப்போ, கண்ணாலே ஜலம் விட்டு, இது என்ன அதிசயமோ ஈசனே நான் அறியேன். பரமனே, நான் அறியேன்.  எந்தப் பாவியால் நேர்ந்ததோ என்று பசுவும் திடீரென்று கீழே விழுந்து மண்ணிலே புரண்டு மஹாதேவா என்று அலறியது.  பசுவின் பக்தியைப் பரமனும் தான் பார்த்து ஆகாயத்தில் வந்து அசரீரி வாக்காக அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய்.  உன் பக்தியை உகந்து கொண்டேன்.


 பசுவே, எழுந்திராய்.  பரமன் உரைத்ததைக் கேட்டு பக்தியுள்ள நற்பசுவும் ஈசனைக் குத்தி விட்டு இருப்பாளோ  பூமியிலே!  பரமனக் குத்திவிட்டுப் பாரில் இருப்பாளோ!.  நான் பக்தியாய் பூஜை செய்து பரமனுக்கு துரோகம் செய்தேன்.  முக்தி அளிக்கும் முகுந்தனுக்கு துரோகம் செய்தேன்.  இந்தப்பாவங்களைச் செய்து இப்பாரில் இருப்பாளோ. தற்கொலை செய்து கொண்டு தானாய் மடிந்திடுவேன்.  பசுவின் பக்திக்குப் பரமனும் தான் மகிழ்ந்து கைலாச நாதரும் பசுவிற்குக் காட்சி கொடுத்தார்.  ரிஷப வாகனத்தில் பசுவின் முன் வந்து நின்று காமதேனுவைக்  கடாக்ஷித்து எது சொல்வார்.  பக்தியில் சிறந்த நற்பசுவே எழுந்திராய்.  உன்னுடைய பக்தியைப் போல் ஒருவரையும் பார்த்ததில்லை.  முக்திஉண்டு.  மோக்ஷப் பதவியும் உண்டு.  நீ குத்தியதாலே எனக்குக் கொடுமைகள் ஒன்றுமில்லை.  குத்தல்கள் எண்ணவில்லை.


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அறிவுள்ள நற்பசுவே, அந்தணராய் நான் வந்து வழியை மறைத்து வாக்குவாதமும் செய்யும்போது குறுக்காய் நின்றவனைக் கொம்பாலே தள்ளிவிட்டுச் சென்றாய், கொம்பு பட்ட புண் இது கோவே எழுந்திராய். உன் பக்தியை உகந்து கொண்டேன்.//

அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

ஆனாலும் 'சாவேன் சாவேன்' என்று பசு ஒரே அடம்!

RajalakshmiParamasivam said...

பசுவின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

Geetha Sambasivam said...

வைகோ சார், நன்றி.

ஶ்ரீராம், நன்றி.

ராஜலக்ஷ்மி, நன்றிங்க.