எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, December 07, 2013

காமதேனுவின் சரித்திரம் --பகுதி ஐந்து முடிவு

குலாவாம்பசுவே, நீ கன்றுடன் சேர்ந்து கலந்து கொஞ்ச நாள் இருந்துவிட்டு, நம்முடைய பதவியை அடைவாய் நற்பசுவே! எனப் பரமன் உரைக்கலுமே பக்தியுள்ள நற்பசுவும் அப்படியே ஆகும் என்று அரசனைத்தான் வணங்கி, பக்கியம், பாக்கியம் என்று பரமனைத் தான் வனங்கி, சிவனை வணங்கிச் சென்றது நற்பசுவும்.  கன்றை ஆதரித்துக் கருணையுடன் பால் கொடுத்து இன்பமுடனே பசுவும் இருக்கின்ற நாளையிலே, சிவனுடைய அருளாலே சிவலோகம் சென்றதப்பா!  பரமன் அருளாலே பரமபதம் சென்றதப்பா! மோக்ஷப் பதவியும்  முக்தியும் அடைந்ததப்பா. இப்பசுவின் சரித்திரத்தைப் பக்தியாய்க் கேட்டவர்கள் காமதேனுவின் சரித்திரத்தை பக்தியாய்க் கேட்டவர்கள், கோவின் சரித்திரத்தைக் கொண்டாடக் கேட்டவர்கள், எழுதிப் படித்தவர்கள் இன்னும் சொல் என்றவர்கள், மனம் உருகிக் கேட்டவர்கள் மங்கையர்கள் எல்லோரும் புத்திரரைப் பெற்றுப் பெருமையாய் வாழ்ந்திருப்பார்.

கோதானம் செய்த பலன் பெறுவார்.  கன்னிகாதானம் செய்த பலன் பெறுவார். பூமிதானம் செய்த பலன் பெறுவார்.  அன்னதானம் பண்ணின பலன் பெறுவார். பசுவின் சரித்திரத்தை அப்போது பிரஹலாதரும் மஹாபலிக்குச் சொல்லி மன மகிழ்ந்து தானிருந்தார்.  இப்புண்ணிய சரித்திரத்தைக் கேட்டு இருந்தவர்கள் உத்தமமான உன் குலத்தில் உதித்ததொரு எந்தனுக்குக் குறைகள் உண்டோ, குலக்கொழுந்தே! என்று சொல்லி பக்தி உள்ள புலியும் பாட்டனைத் தான் வணங்கி கேட்ட கதையினாலே, நான் கிருதார்த்தனாகிவிட்டேன்.  என் பந்தங்கள் விலகிப் பரமபதம் தான் பெறுவேன்.  என்று சொல்லி இருந்து அரசாண்டு வந்தான்.

பசுவின் சரித்திரம் முற்றும்

7 comments:

ஸ்ரீராம். said...

பக்கியம், பாக்கியம்...?

ஸ்ரீராம். said...

//எல்லோரும் புத்திரரைப் பெற்றுப் பெருமையாய் வாழ்ந்திருப்பார்.//

இன்னுமா?

இராஜராஜேஸ்வரி said...


"காமதேனுவினபுண்ணிய சரித்திரம் அருமை..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கோதானம் செய்த பலன் பெறுவார். கன்னிகாதானம் செய்த பலன் பெறுவார். பூமிதானம் செய்த பலன் பெறுவார். அன்னதானம் பண்ணின பலன் பெறுவார்.//

மகிழ்ச்சியளிக்கும் தகவல்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

RajalakshmiParamasivam said...

காமதேனு சரித்திரம் படித்து மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி எனக்குத் தெரியாத விஷயத்தை பகிர்ந்து கொண்டதற்கு.

V Mawley said...

தற்சமயம் பலவிதமான scams களில்உம்சிக்கியிருப்பவர்கள் பெரும்பாலும்
மெத்தப்படித்தவர்கள் ; ஆனா‌‌‌ல் ethics அறியாதவர்கள் ; நமது அடிப்படை
கலாசாரமே ETHICS-BASED ...குலச்த்ரீகளே நமது கலாசாரத்திந் காவலர்கள் ..இவ்வாறே அவர்களுக்கு ETHICS அறிவு புகட்டப்பட்டிருந்தது ;ஆக்வே
புருஷன் தவறான வழியில் பொருளீட்டி வந்தால் ,அதைப்பற்றி கேள்வி கேட்டு அதை நிராகரிப்பவர்கள் ..

இந்த பசு ச்தோத்திரத்தை தங்கள் பதிவிட்டதில் எனக்கு மட்டற்ற் மகிழ்ச்சி ..
நன்றி..

மாலி

மாதேவி said...

காமதேனு சரித்திரம் அருமை.