
பிருகு ரிஷியோ தன் தவறை உணர்ந்து ஸ்ரீயிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், "தாயே. எம்பிராட்டி, யாகத்தின் பலனை தெய்வங்களில் சாத்வீகமானவருக்கே அளிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்திருந்தனர். அதை அறியும்பொருட்டே நான் நடிப்பிற்காகவே விஷ்ணுவை உதைத்தேன். நீ கோபம் கொள்ளாதே! என்னை விட்டுப் பிரிய எண்ணும் நீ என் மகளாக பிறந்து வளர்ந்து வரும் பலனை எனக்கு அளிப்பாய். உன்னை இந்த மஹாவிஷ்ணுவிற்கே மணமுடித்து அவருக்கே நான் மாமனாராக ஆகவும் விரும்புகிறேன். தயவு செய்து பொறுத்துக்கொள்வாய்!" என வேண்டினார். ஏற்கெனவே விஷ்ணுவிடம் கோபம் கொண்டிருந்த ஸ்ரீயும் இப்போது நல்ல தருணம் என நினைத்து பிருகுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஸ்ரீ மகளாகப் பிறக்கவேண்டுமெனில் பிருகு முனிவர் இன்னும் தவம் செய்யவேண்டும் என்றும் கும்பகோணம் பகுதியில் போய்த் தவமிருக்குமாறும் கூற, அவ்வாறே பிருகு தவம் இருந்தார்.
இங்கே இருந்த ஹேம புஷ்கரிணி என்னும் தீர்த்தத்தில் தினம் பூத்துக்கொண்டிருந்த தாமரை மலர்கள் ஒன்றில் ஸ்ரீ அவதாரம் செய்தாள். பூஜைக்கு மலர் பறிக்க வந்த பிருகு ரிஷி அந்த மலரில் ஸ்ரீயைக் கண்டதும் எடுத்துத் தன் அருமை மகளாக வளர்த்து வந்தார். கோமளவல்லி என்ற பெயரையும் சூட்டினார். திருமாலையே மணம் முடிக்க ஆசைப்பட்ட அவளுக்குத் தேடிப்பிடித்துத் திருமாலையே மணமகனாகவும் கொண்டு வந்தார். திருமால் சார்ங்கம் என்னும் வில்லேந்தி ரதத்தில் வந்தார். விளையாட்டிற்குப் பாதாளத்தில் ஒளிந்து கொள்ள, ஸ்ரீக்குக் கலக்கம் ஏற்பட்டது. பின்னர் அவள் முன் தோன்றிய சார்ங்கபாணி அவளை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் "பாதாள ஸ்ரீநிவாசர் சந்நிதி" என அழைக்கப் படுகிறது. திருமணம் ஆனதும் மேட்டுப் பகுதியில் மேட்டு ஸ்ரீநிவாசராக இரு தாயார்களுடன் தனி சந்நிதியில் இருக்கிறார்.
இந்தத் தலம் தாயாரின் அவதாரத் தலம். தாயாருக்கே இங்கே முக்கியத்துவம். முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதும் ஐதீகம்.
நாம் தரிசனத்துக்குச் செல்லும் அமைப்பே அவ்வாறு அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பும், சொர்க்கவாசலும் கிடையாது. பெருமாள் நேரே வைகுந்தத்தில் இருந்தே இங்கே வந்துவிட்டதால் இவரை வணங்கினாலே பரமபதம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இரு வாசல்கள் உள்ளன. உத்தராயண வாசல், தக்ஷிணாயண வாசல். தற்சமயம் தை மாசம் முதல் ஆனி வரை உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயண வாசலும் திறந்திருக்கும். மூலவர், உற்சவர் இருவரும் சார்ங்கம் என்னும் வில்லை வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆராவமுதன் என்னும் அழகிய தமிழ்ப்பெயராலும் பெருமாள் அழைக்கப் படுகிறார். திருமழிசையாழ்வார் இந்தத் தலத்திற்கு வது பெருமாளை வணங்கி. "நடந்து, நடந்து உன் கால்கள் வலிக்கிறதோ? பள்ளி கொண்டுள்ளாய்?" என்ற பொருள் தரும் பாசுரம் ஒன்றைப் பாட, சுவாமி எழுந்து அவர் பாடலைக் கேட்டார்.
சுவாமியின் அருளைக் கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், இனி அனைத்து பக்தர்களுக்கும் இந்தக் கோலத்திலேயே காட்சி கொடுக்குமாறு பெருமாளை வேண்ட, பெருமாளும் அவ்வாறே அருளினார். முழுமையாகப் பள்ளி கொண்டிராமல் சற்றே எழுந்த கோலத்தில் பெருமாள் காணப்படுவார். இதை உத்தான சயனம் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தப் பெருமாளைக் காணவந்த நாதமுனிகள் அங்கே இருந்த பக்தர்கள் பாடிய நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்டார். ஒரு பாசுரத்தில், "ஓராயிரத்துள் இப்பத்தும்" என வரவே, இதைக் கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளனவா?" என வியந்தார்.
11 comments:
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கும் ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? விலங்கு மால் வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
//தாயாருக்கே இங்கே முக்கியத்துவம். முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதும் ஐதீகம்.//
நாமக்கல் நரசிம்ஹர் ஆலயத்திலும் தாயாரை தரிசனம் செய்த பின்னரே நரசிம்ஹரை தரிசிக்க செல்ல வேண்டும்.
http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post_12.html
வாங்க ஜெயஸ்ரீ, இந்தப் பாசுரம், சார்ங்கபாணிக்கானதா, சக்கரபாணிக்கானதானு சந்தேகம், சில பாசுரங்கள் கிடைச்சுது, என்றாலும் போடலை! நாலாயிரத்தில் ஒரு நூறு எனக்குத் தெரிஞ்சிருந்தால் பெரிய விஷயம்! :))))))))
வாங்க எல்கே, நாமக்கல் இன்னும் பார்க்கலை, சொல்லப் போனால் கோவை, சேலம், ஈரோடு பக்கம் உள்ள கோயில்களுக்கு இன்னும் வரவே இல்லை, வரணும், முடியுமானு இப்போ இருக்கும் நிலையிலே சந்தேகமாவும் இருக்கு! :)))))))
namakkal aanjaneyar and narasimhar parka vendiya ondru. narasimhar kovil pallava sirpa kalaiku arputha utharanaam
சார்ங்கமோ சக்ரமோ பாணி ஒன்ரு தான்னு வச்சுண்டுட்டேன்!!
nice post, thanks for sharing
ஜெயஷ்ரீ சொல்லி இருப்பது பிரபந்தப் பாடல் சாரங்கபாணிக்குத்தான். அவரதானெ கிடந்தகோலத்தில் இருக்கிறார். சக்கரபாணி சுதர்சன் சக்கரம் இல்லையா கீதா.
மீண்டும் கோவிலுக்குப் போய்வந்த சந்தோஷம்.
ஆமாம் இல்லை, வல்லி, சக்கரபாணி கோயிலுக்கும் போயிருக்கோம், என்றாலும் கொஞ்சம் தடுமாற்றம். நல்லவேளை நீங்க வ்ந்து விளக்கிட்டீங்க. நன்றிம்மா.
//ஆமாம் இல்லை, வல்லி,// - ஆமாமா இல்லையா? அதை முதல்ல சொல்லுங்க.
இது ஆராவமுதன் சார்ங்கபாணிக்கான பாடல்தான். அவர்தான் கொஞ்சம் எழுந்திருக்க ஆரம்பித்த உடனேயே ஆழ்வார், 'வாழி கேசனே' என்று சொல்லிட்டதால் அந்த போஸிலேயே இருந்துவிட்டார். அதுதான் உத்தான சயனம்.
திருமழிசை ஆழ்வார் பிருந்தாவனம் போயிருக்கீங்களோ?
திருமழிசை ஆழ்வார் பிருந்தாவனமெல்லாம் சென்றதில்லை நெ.த. சார்ங்கபாணி, சக்ரபாணி இரு கோயில்களுக்கும் ஒரே நாள் சென்றதில் கொஞ்சம் குழப்பம் வந்திருக்கு!
Post a Comment