விறல்மிண்ட நாயனார் திருச்செங்குன்றூரைச் சேர்ந்தவர். இவர் சிவபெருமானிடத்தில் பூண்டிருந்த பக்தி அடியார்களிடமும் பக்தியும் , மதிப்புமாக மாறி இருந்தது. சிவனடியாரை எவரானும் நிந்தித்தாலே அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். அவருடைய பக்தி அப்போது வீரமாக மாறிவிடும். இவருடைய இந்த வீரத்தின் காரணமாகவே விறல்மிண்டர் என்ற பெயரும் ஏற்பட்டதாய்ச் சொல்லுவார்கள். விறல் என்றால் வீரம் என அர்த்தம். அஞ்சாநெஞ்சம் கொண்ட இவர் ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாடித் தொழுது வழிபாடுகள் செய்துவருவார். ஆனால் ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிக்கும் முன்பு, முதலில் ஆலயத்திற்கு வருகை புரிந்திருக்கும் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டுவிட்டுப் பின்னரே ஆலயங்களின் மூல மூர்த்தத்தைத் தரிசிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒருநாள் திருவாரூருக்கு வந்திருந்த இவர், அங்கே இருந்த சிவனடியார்களைக்கண்டு மகிழ்ந்து வணங்கி அவர்களைப் போற்றி நின்றார். அவர் வந்த சமயமே சுந்தரமூர்த்தி நாயனாரும், வன்மீக நாதர் என்னும் புற்றிடங்கொண்ட நாதனைத் தரிசிக்க வந்தார். அடியார்களை மனதால் வணங்கும் பேறு படைத்த சுந்தரர், பக்குவம் மிகுந்திருந்த காரணத்தால் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களைக் கண்டும், அவர் வன்மீகநாதரைத் தரிசிக்கவெனச் சென்றார். அடியார்கள் எவரையும் (விறல்மிண்ட நாயனார் உட்பட) வணங்கவில்லை. ஆனால் விறல்மிண்டருக்கு இது மாபெரும் குற்றமாய்ப் பட்டது. சுந்தரருக்கு அகம்பாவம் மிகுந்துவிட்டது எனவும், அதனால் தான் அடியார்களை மதிக்கவில்லை என்றும் நினைத்துக்கொண்டுவிட்டார். ஏற்கெனவே கோபக்காரர் ஆன விறல்மிண்டருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. “முதலில் வணங்கத் தக்க அடியார்கள் தேவாதிதேவர்களுக்கும் மேலானவர்கள். இவர்களை வணங்காமல் இவன் நேரே உள்ளே செல்கின்றானே? இவன் ஒரு வன் தொண்டனோ? அடியார்களுக்குப் புறம்பானவனோ? ஆம், ஆம் இவன் வன் தொண்டனே, அடியார்களுக்குப் புறம்பானவனே. இவன் மட்டுமில்லை, இவனை வலிய வந்து ஆட்கொண்ட அந்த வீதிவிடங்கனுமே அடியார்களுக்குப் புறம்பானவனாகிவிட்டான்.” என்று கோபத்துடனும், கடுமை தொனிக்கவும் சொன்னார்.
ஆனால் மனப்பக்குவம் பெற்றிருந்த சுந்தரருக்கோ விறல்மிண்டரின் இந்தச் செய்கையினால் கோபம் வரவில்லை. மாறாக அடியார்களிடம் பக்தி பூண்டிருக்கும் விறல்மிண்டரின் பக்தியை உயர்வாகவும், உன்னதமாகவும் எண்ணி மனம் மகிழ்ந்து பெருமையுற்றார். எம்பெருமானின் சரணங்களில் விழுந்து வணங்கினார். “இந்த அடியார்களுக்கு எல்லாம் நான் அடியானாக ஆகும் பேற்றை எனக்குத் தந்தருளவேண்டும்.” என்று ஈசனிடம் வேண்டினார். ஈசனும் மகிழ்ந்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற அடியை எடுத்துக் கொடுத்துப்ப் பாடுமாறு சொல்ல அனைவர் மனமும் மகிழுமாறு எழுந்தது திருத்தொண்டத்தொகை. திருத்தொண்டர்களின் பெருமையைப் பாடிப் புகழும் அந்தப் பதிகங்களைக் கேட்டு விறல்மிண்டரின் மனமும் மகிழ்ந்தது. சுந்தரரின் பக்தி பக்குவமடைந்த பக்தி என்பதையும் புரிந்துகொண்டார்.
விறல்மிண்டரைப் பற்றிய வேறு மாதிரிக் கதையில் சுந்தரரின் மீது கோபம் அடங்காநிலையிலேயே விறல்மிண்டர் திருவாரூரை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அதன் பின்னர் திருவாரூரை மிதிக்கவே மாட்டேன். அந்த எல்லைக்கு அருகிலே கூட வரமாட்டேன் என்று திட சங்கல்பம் செய்து கொண்டு இருந்தார். அவர் அடியார்களுக்கு நாள் தோறும் அன்னம் அளித்து வந்தார். தம் இல்லத்திற்கு வரும் அடியார்கள் திருவாரூரைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால் அவர்கள் காலைத் துண்டித்துவிடுவாராம். இப்படி ஒரு கொடூரமான காரியத்தைச் சுந்தரர் மேல் கொண்ட கோபத்தினால் செய்து வந்ததாகச் சொல்கின்றனர்.
இவரைத் தடுத்தாட்கொள்ள விரும்பிய ஈசன் சிவனடியாராக வந்து உணவுண்ண அமர்ந்தார். முன்னரே அவரின் ஊரைக் கேட்டு அறிந்த விறல்மிண்டரின் மனைவியார் சிவனடியாரான ஈசனிடம் திருவாரூர் என்ற பெயரைச் சொல்லவேண்டாம் எனக் கூறி இருந்தார். ஆனால் ஈசன் தாம் பார்த்துக்கொள்வதாகவும் விறல்மிண்டரின் கொடுவாளை வலப்பக்கமே அது வரை வைத்திருந்ததை அன்று மட்டும் இடப்பக்கம் வைக்குமாறும் மற்றதைத் தாம் பார்த்துக்கொள்வதாயும் சொல்லிவிடுகிறார். உணவுண்ண அமரும்போது தாம் திருவாரூரைச் சேர்ந்தவன் என சிவனடியாரான ஈசன் கூற, கோபம் கொண்ட விறல்மிண்டர் வலப்பக்கம் கை வாளை எடுக்கச் சென்றது. அங்கே வாள் இல்லாமல் தேட மனைவி இடப்பக்கம் வைத்திருப்பதைக் காட்ட அதை எடுப்பதற்குள் சிவனடியாரான ஈசன் எழுந்து ஓட்டம் பிடித்தார்.
விடாமல் அவரைத் துரத்தின விறல்மிண்டரைத் திருவாரூர்க்குள்ளேயே இழுத்துவிட்டார் ஈசன். பின்னர் சிரித்துக் கொண்டே ,”இது திருவாரூர், நீர் உள்ளே வந்துவிட்டீரே?” என்று வினவ, அதிர்ச்சி அடைந்து சுற்றும் முற்றும் பார்த்த விறல்மிண்டர் தம் காலைத் தாமே துண்டித்துக்கொள்கிறார். அவரைத் தேற்றிய ஈசன் தம் சுய உருவைக் காட்டுகிறார். சுந்தரரின் பக்தியைப் பற்றியும் அவரை உணரச் செய்த ஈசன் அவருக்கு முக்தி கொடுத்து அருளிச் செய்கிறார். கைலையிலே சிவகணங்களுக்குத் தலைவனாகும் பேறும் பெறுகின்றார்.
எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Friday, February 26, 2010
Tuesday, February 23, 2010
நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருவாரூரின் அவலநிலை!
//திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா
ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி
விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்
இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.//
திருவாரூர்த் தலபுராணத்தில் மேற்கண்ட பாடல் காணப்படுகிறது. இந்த நகரில் ஏழடி நடந்தாலே காசிக்கு ஒப்பாகும் என்கின்றது. ஏழு கோபுரங்கள், ஐந்து ப்ராஹாரங்கள், பனிரண்டு மண்டபங்கள், தீர்த்தங்கள், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என அனைத்தும் உள்ள பெரிய கோயிலாகும் இது. நிதானமாய்ப் பார்த்தால் காலை ஆறு மணிக்குப் போனால் பனிரண்டு மணி வரையிலும் நேரம் சரியாய் இருக்கும். செங்கல் திருப்பணியில் இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றிய பெருமை செம்பியன்மாதேவிக்கு உண்டு. இந்தக் கோயில் பிராஹாரத்திலேயே தனிக் கோயிலாக ஆரூர் அறநெறி என்னும் கோயிலும் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இந்தக் கோயிலையும் செம்பியன் மாதேவி அவர்களே திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும். பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர்.
திருவாரூருக்குத் தெற்கே திருநெய்ப்பேர் என்னும் ஊரில் அவதரித்த நமிநந்தி அடிகள் என்பார் சிவ வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்தா. நாள் தோறும் திருஆரூரில் ஆரூர் அரநெறி அசலேசசுவரருக்கு திருவிளக்கேற்றித் திருப்பணி புரிந்து வந்தார். ஒருநாள் மழைக்காலத்தில் விளக்கேற்ற நெய் தேடி நெடுந்தூரம் செல்லவேண்டி முடியாமல் போகவே பக்கத்து வீடுகளில் கேட்க, சமணர்களான அவர்கள் நமிநந்தி அடிகளையும் ஐயனையும் கேலி செய்ததோடு அல்லாமல், “உம் ஈசன் தான் கையிலேயே நெருப்பை வைத்திருப்பானே? அவனுக்கு எதற்குத் தனியாக விளக்கு?” என்று கேட்டனர். நமிநந்திஅடிகள் நொந்து போன மனதோடு திரும்பக் கோயிலுக்கு வந்து ஈசனை வேண்டி அழுது, அரற்ற, குளத்து நீரை முகந்து வந்து விளக்கிலிட்டு தீபம் ஏற்றுமாறு திருவருள் கூற, அவ்வாறே கமலாலயத்து நீரை எடுத்து வந்து விளக்குகளில் விட்டு ஏற்றினார். என்ன ஆச்சரியம் விட்ட நீரெல்லாம் நெய்யாக மாறி விளக்குகள் ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தன.
அவரின் புகழையும், பக்தியையும் கூறும் கோயில் இந்த ஆரூர் அரநெறிக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு அசலேசுவரர் எனப் பெயர். தனி நந்தி, தனிக்கொடிமரம், தனி பலிபீடம் என அனைத்தும் தனியாக அமைந்த தனிக்கோயில் இது. இங்கே அக்னிஸ்தம்பமும், கையில் அழலேந்தி ஆடும் நடராஜர் சந்நிதியும் சிறப்பு. இங்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த செருத்துணை நாயனார் என்பவருக்கு சிவனுக்குச் செய்யும் அவமரியாதையைப் பொறுக்கமாட்டாதவராம். இந்தக் கோயிலுக்குப் பல்லவர்கோன் கழற்சிங்கனும், அவர் மனைவியான சங்கவையும் அசலேசுவரரைத் தரிசிக்க வந்தனர். பிராஹாரத்தில் செருத்துணை நாயனால் ஈசனுக்காக “திருப்பள்ளித் தாமம்” என்னும் மாலை கட்டிக் கொண்டிருந்தார். அங்கே வந்த அரசி, கீழே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்துமுகர்ந்து பார்க்க, மனம் பொறுக்காத செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை அரிந்துவிடுகிறார். அரச கோபத்துக்கு ஆளாகிவிட்டாரே என அனைவரும் கதிகலங்கி நிற்க, கழற்சிங்க அரசனோ, செருத்துணை நாயனார் செய்தது சரியே எனச் சொல்லி, பூவை முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தால் போதுமா, எடுத்த கையையும் வெட்டவேண்டும் என்று சொல்லிக் கையையும் வெட்ட, அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். ஆனால் ஈசனோ அவர்கள் பக்தியின் திறத்துக்கு வைத்த சோதனை எனச் சொல்லி, அரசியின் மூக்கையும், கையையும் சரிசெய்து முன்போல் ஊனமற்றவளாக்கி விடுகிறார்.
இந்த லிங்கத்தை இங்கே ஸ்தாபித்தது நானூறு ஆண்டுகள் தவமிருந்து வழிபட்ட சமத்காரன் என்னும் அரசன் என்கின்றனர். சமத்காரன் ஈசனைத் தான் தவமிருந்து ஸ்தாபித்து வழிபடும் இந்தத் தலத்து லிங்கத் திருமேனியில் ஈசனின் ஜீவசக்தியோடு எழுந்தருளவேண்டும் என வேண்ட அவ்வண்ணமே ஈசன் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் பெயர் வண்டார்குழலி அம்மை. இந்தக் கோயில் விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழும் என்றும் சொல்கின்றனர்.
முசுகுந்தனுக்குத் தியாகேசரைக் கொடுத்த தேவேந்திரன் ஈசனிடமே மீண்டும் தேவருலகு வருமாறு வேண்ட, அவரோ, கிழக்குக் கோபுர வாயிலில் காத்திருக்குமாறு சொல்கின்றார். அவ்வழியே ஈசன் வரும்போது அழைத்துச் செல்லலாம் என்று காத்திருக்கின்றானாம். ஆனால் ஈசனோ, “விட்டவாசல்” என அழைக்கப் படும் வேறொரு வாயில் வழியே வெளியே சென்று, இங்கே காத்திருக்கும் தேவேந்திரனைப்பல யுகங்களாய்க் காத்திருக்க வைத்திருக்கிறார்./
இந்த ராஜ கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பிள்ளையார். வீதிவிடங்க விநாயகர் என்ற பெயரில் காட்சி கொடுக்கிறார். பிள்ளையாருக்குப் பின்னே நந்தி! இங்கே பிரம்மநந்தி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். மழை வேண்டுமென்றால் சுற்றிலும் சுவர் எழுப்பி நீரை நிரப்பி வேண்டிக்கொண்டால் மழை கொட்டித் தீர்க்கும் என்கின்றார்கள். பசுக்கள் பால் கறப்பதற்கும் இந்த பிரம்ம நந்திக்கு அருகு சார்த்தி அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று பசுக்களுக்குக் கொடுக்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் மொட்டைத் தூண்கள் காட்சி அளிக்கும். இருநூறிலிருந்து ஐநூறு இருக்கலாமோ??
இந்தத் தூண்களின் மேல் பெரிய பந்தல்களாகப் போட்டுக் கூரை வேய்ந்து திருவிழாக்காலங்களில் தியாகேசரை எழுந்தருளச் செய்யும் மண்டபமாக மாற்றுவார்களாம். அதனால் மொட்டைத் தூண்களாகவே பல நூற்றாண்டுகளாய் இருக்கின்றன என்று கேள்வி. அடுத்து நாம் காண்பது தேவாஸ்ரய மண்டபம் அல்லது தேவாசிரிய மண்டபம். இந்த மண்டபத்திற்கு ஆயிரக்கால் மண்டபம் என்றும் சொல்லலாம். இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களுமே சிவனடியார்கள் என்றும், இவர்களை வணங்காமல் போனால் அடியார் கூட்டத்திலிருந்தே விலக்கப் படுவார்கள் என்றும் ஐதீகம். இதைத் தான் விறன் மிண்டர் சுந்தரருக்குச் செய்து காட்டினார். அது நாளை பார்ப்போமா?????

Saturday, February 20, 2010
நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!
முதலில் இந்தக் கோயிலின் தலவரலாற்றைப் பார்ப்போமா?? பலருக்கும் தெரிந்த கதையாகவே இருந்தாலும் நினைவு படுத்துக்கொள்ளலாமே?? திருமால் எந்நேரமும் தன் மனமாகிய தாமரையில் ஈசனை இருத்திப் பூஜித்து வந்தார். ஈசனைத் தனியாகப் பூஜிக்கவில்லை. கூடவே அன்னையையும், அவர்கள் அம்சமான சிவகுமாரனையும் சேர்த்தே வழிபட்டு வந்தார். பூசலார் நாயனால் தன் நெஞ்சிலே ஈசனுக்குக் கோயில் கட்டியதற்கு இப்போ திருமாலே முன்னோடி எனலாம். தன் மனதுக்குள்ளாகவே நெஞ்சே கோயிலாக சோமாஸ்கந்தரை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடலானார் காக்கும் கடவுளான விஷ்ணு. தேவேந்திரனுக்கு வழக்கம்போல் துன்பம் வந்திட சிவ வழிபாடு சிறந்தது என நினைத்து அவன் திருமாலிடம் வழிபடும் விதம் கேட்டான். தன் நெஞ்சிலே வைத்துப் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரை அவனிடம் கொடுத்து அந்தத் தியாகேசரை வழிபடச் சொன்னார் திருமால். தேவேந்திரனும் முறைப்படி வழிபட்டு வந்தான். அசுரர்கள் தொல்லை தாங்கவில்லை. இந்திரலோகத்தை வலன் என்னும் அசுரன் தாக்கிக் கடும்போர் புரிந்தான். பூவுலகில் அப்போது முசுகுந்தன் என்னும் சக்கரவர்த்தியின் ஆட்சி நடந்து வந்தது. முன் பிறவியில் ஒரு குரங்காய்ப் பிறந்திருந்த அவன், சிவ பூஜை செய்து வந்ததன் பலனாக இப்பிறவியில் மன்னனாய்ப் பிறந்து ஆண்டு வந்தான். ஆயினும் முன்பிறவியில் கேட்டிருந்த வரத்தின்பலனாகத் தன் முன்பிறவியை மறவா வண்ணம் அதே குரங்கு முகத்தோடேயே பிறந்திருந்தான். இந்திரனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். இப்போது நண்பனுக்கு ஒரு பிரச்னை என்றதும், வலனைத் தோற்கடிக்க உதவி செய்தான். தேவேந்திரனும் அவன் உதவியை வேண்டிப் பெற்றுக்கொண்டான். வலன் தோற்கடிக்கப் பட்டான். தேவேந்திரன் வெற்றி கிட்டியதைக் கொண்டாடும் வண்ணம் தியாகேசப் பெருமானின் எதிரே நின்று, தன் நண்பனாகிய முசுகுந்தனை மார்போடணைத்து நன்றி கூறி, “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருவேன்.” என்று சொல்ல, முசுகுந்தன் அந்தத் தியாகேசரே வேண்டுமென்றான். தியாகேசரும் ஜீவசக்தியோடு இருந்தமையால் முசுகுந்தனைப் பார்த்துத் தன் கண்ணசைவால் பூவுலகம் கொண்டு செல்லுமாறு ஜாடை காட்ட, முசுகுந்தனும் மகிழ்ந்தான். தியாகேசரே வருகிறேன் என்றுவிட்டாரே?? முசுகுந்தன் கேட்ட பரிசை தேவேந்திரனுக்குக் கொடுக்க மனமில்லை. அவன் திகைத்துத் திடுக்கிட்டு, “இந்த விக்கிரஹம் திருமாலே வழிபட்டது. அவர் அனுமதி வேண்டும்” என்று சமாளிக்கப் பார்த்தான். ஆனால் திருமாலோ முழுமனதோடு அநுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இந்திரனுக்கோ தான் ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்த மூர்த்தியைக் கொடுக்க மனமே வரவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தான். பின்னர் இந்தத் தியாகேசரைப் போலவே இன்னும் ஆறு மூர்த்தங்களைச் செய்வித்தான். எல்லாம் ஒன்று போலவே இருந்தது. அவற்றோடு மஹாவிஷ்ணு கொடுத்த தியாகேசரையும் வைத்தான். இவற்றில் எது உனக்குப் பிடிக்கிறதோ எடுத்துக்கொள் என்று சொல்ல, முசுகுந்தனோ இறை அருளால், மஹாவிஷ்ணு பூஜித்த தியாகேசர் தான் வேண்டும் என அடையாளம் காட்டினான்.
தேவேந்திரனுக்கு இப்போது மீண்டும் திகைப்பு. எனினும் முசுகுந்தனும் பக்தன். தன் நெருங்கிய நண்பன். அவனுக்கோ நாம் வாக்களித்துவிட்டோம். ஆகவே மறுக்கக் கூடாது என எண்ணி, மனம் நிறைய சந்தோஷத்தோடு ஏழு மூர்த்தங்களையுமே அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூலோகத்தில் வைத்து பூஜித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். அந்த ஏழு மூர்த்தங்களே சப்த விடங்கர்கள் எனப்படுவார்கள். திருவாரூரில் தியாகேசர் மாசி மாசம் ரிஷபக் கொடியோட எழுந்தருளியதாக ஐதீகம்.
மற்றத் தலங்கள்: சப்த விடங்கர்கள் என்பது உளி கொண்டு செதுக்கப் படாத மூர்த்தங்களையே விடங்கம் அல்லது விடங்கர் என்று சொல்வார்கள். டங்கர் என்றால் உளியால் செதுக்கியது. இந்த ஏழு மூர்த்தங்களும் உளியால் செதுக்கப்படாத மூர்த்தங்கள்.
“சீரார் திருவாரூர் சென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில் பேரான
ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம் “
திருவாரூரில் வீதி விடங்கர்= ஆடியது அஜபா நடனம். மனதுக்குள்ளேயே ஜபித்துக்கொண்டு ஆடுவது. இது நம் சுழுமுனை சுவாசம் போல என்ற தத்துவமும் குறிப்பிடப் படுகிறது.
திருக்குவளை = அவனி விடங்கர். பிருங்க நடனம். மலருக்குள்ளே வண்டு சென்று ரீங்காரமிட்டுக் குடைவதைக் குறிக்கும் நடனம்.
திருநள்ளாறு= நக விடங்கர்- உன்மத்த நடனம். பித்தன், பிறைசூடியவன் அருளாளன் ஆடிய உன்மத்த நடனம், பித்துப் பிடித்தவன் போல் ஆடியதாம்.
திருநாகை = சுந்தரவிடங்கர்= தரங்க நடனம். கடல் அலைகள் எப்படி ஆடுகின்றன?? மேலேயும், கீழேயும், சுற்றிச் சுழன்றும், கரைக்கு வந்து மோதியும், திரும்பக் கடலுக்குள் சென்றும் ஆடிய ஆட்டமென்ன?? கடல் அலைகளைப் போன்ற நடனம்.
திருக்காராயில்= ஆதி விடங்கர்= குக்குட நடனம். கோழியின் நடை எப்படி இருக்கும்?? அதைப் போல். அனைத்தையும் படைத்தவன் ஆடும் ஆட்டமென்ன???
திருவாய் மூர்= நீல விடங்கர். கமல நடனம். பொய்கையில் பூத்திருக்கும் தாமரை மலர்போன்ற நடனம். தண்டு மட்டும் இருக்கும், மேலே பூ சுற்றுவது ஒற்றைக்காலில் நின்றாடுவது போல் இருக்குமல்லாவா??? அந்த நடனம்.
திருமறைக்காடு= புவனி விடங்கர் . ஹம்ச பாத நடனம். சொல்லவே வேண்டாம், அன்னப் பறவையின் நடனம் போல.
செங்கழுநீர்ப் பூவை வைத்துச் சரியாகக் கணித்தானாம் முசுகுந்தன் வீதி விடங்கரை. ஆகையால் அவருக்குச் செங்கழுநீர்ப் பூ சாற்றுவது விசேஷமாகச் சொல்லப் படுகிறது. மேலும் தேவேந்திரன் தியாகராஜ மூர்த்தங்களை அளிக்கும்போது, கூடவே திமிரி நாகஸ்வரம், பாரி நாகஸ்வரம், முகவீணை, யாழ், தவில், மத்தளம், ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தானாம். பாரி நாயனம் திருவாரூரில் மட்டுமே வாசிக்கப் பட்டு வந்தது. தற்போதும் இந்த வாத்தியங்கள் எல்லாம் தேவலோக கந்தருது என்னும் குறிப்பிட்ட மரபினரால் வாசிக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இதைத் தவிர பஞ்சமுக வாத்தியம் என்னும் ஐந்து முகங்களைக் கொண்டதொரு அபூர்வமான வாத்தியமும் இங்கே உண்டு. ஐமுக முழவம் எனப்படும் இதை சங்கரமூர்த்தி என்னும் கலைஞர் வாசித்து வந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாத்தியம் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் இருந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது. சுமார் நான்கடி க்கு மேல் சுற்றளவு கொண்ட இதன் ஒரு முகம் பாம்பு சுற்றியது போலவும், மற்றொரு முகம் ஸ்வஸ்திக் சின்னத்தோடும், மூன்றாம் முகம் தாமரைப் பூ போலும், நான்காம் முகம் அடையாளமில்லாமலும் இருக்கும். ஐந்தாம் முகம் நடுவில் உள்ளது, பெரியதாக இருக்கும் என்றார்கள். மான் தோலால் கட்டப் பட்டிருக்கும் இந்த வாத்தியத்தை நந்தி தேவர் ஈசனின் நடனத்தின்போது வாசித்து வந்ததாகவும், இப்போது வாசிக்கும் பரம்பரையினரை “பாரசைவர்கள்” என்று அழைக்கப் படுவதாகவும் தெரிய வருகிறது. இந்த வாத்தியத்தின் ஒவ்வொரு முகத்தையும் தனியாகவும், அனைத்தையும் சேர்த்தும் வாசிக்கலாம் என்கின்றார்கள். தனியாக வாசிக்கும்போது ஏழு முறையும், சேர்த்து வாசிக்கும்போது ஐந்து முறையும் வாசிக்கப் படுமாம். இந்த வாத்தியம் வாசிக்கவென்றே விதிமுறைகள் இருப்பதாகவும், அதைக்குறிப்பிடும் நூல் இருப்பதாகவும் சொல்கின்றனர். இது தவிரப் பாரி நாயனத்தைத் திருவிழாக் காலங்களில் வீதிகளில் வாசிப்பதாகவும், அதற்கும் எந்த எந்த இடங்களில் எந்தப் பண் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் சொல்கின்றனர். இங்கே உள்ள விளக்கை விருடி விளக்கு என்கின்றனர். தேர் போன்ற அமைப்பில் மர வடிவ அமைப்பில் உள்ளது இது.
திருவாரூர்ப் பயணம் தொடரும்.
Wednesday, February 17, 2010
நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவல நிலை!
தேவாரப் பாடல்கள் கிட்டத்தட்ட 350, திருவாசகப் பாடல்கள் 7 ஆகியவற்றைக் கொண்டது திருவாரூர். இது தவிர, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சேக்கிழாரின் பெரிய புராணப்பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் 11 பாடல்கள், வள்ளலாரின் திருஅருட்பாவில் திருவாரூர்ப் பதிகம் என்ற தலைப்பிலேயும் இடம்பெற்றுள்ளது திருவாரூர். வள்ளலார்,
“எந்தாய் ஒருநாள் அருள் வடிவின்
எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன்
மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தாமரைத்தாள் இணை அன்றே
சிக்கென்றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திரு ஆரூர்
இறைவா துயரற்றிருப்பேனே!” என்று கூறுகிறார். இதைத் தவிர பதினோராம் திருமுறையில் திருவாரூர் மும்மணிக்கோவை என்ற தலைப்பில் சேரமான் பெருமான் நாயனாரும் திருவாரூரைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார். திருஆரூர் புராணம், கமலாலயச் சிறப்பு, தியாகராஜலீலை, தேவாசிரிய மஹாத்மியம், திருவாரூர் நான்மணிமாலை, திருவாரூர் குறவஞ்சி, திருவாரூர் உலா, தியாகப் பள்ளு, திருவாரூர்க் கோவை, அஜபா நடேசர் பதிகம், திருவாரூர் வெண்பா அந்தாதி, கமலாம்பிகைத் தமிழ், தியாகராஜர் கழிநெடில், கந்தபுராணம், திருவாரூர் அந்தாதி, பரவைத் திருமணம், கமலாம்பிகை பதிகம் போன்ற பல தமிழ் நூல்களும், வடமொழியில் அஜபா ரகசியம், ஆடகேசுவர மஹாத்மியம், கமலாலய மஹாத்மியம், தியாகராஜலீலை, சமற்காரபுர மான்மியம், ஸ்ரீபுர மான்மியம், ஸ்கந்த புராணம், முகுந்த சஹஸ்ரநாமம், தியாகராஜாஷ்டகம், கமராம்பிகாஷ்டகம் போன்றவைகள் உள்ளன.
தஞ்சையை ஆண்ட ஷஹஜீ என்னும் மன்னன் தியாகேச பதமுலு, பஞ்சரத்ன பிரபந்தம், சங்கரபல்லக்கீ சேவா பிரபந்தம், சங்கர காளி நடன சம்வாதம் போன்ற தெலுங்கு மொழி நூல்களும், மராட்டியில் ராமபண்டிதர் என்பவர் தியாகேச மகாத்மிய, கமலாலய மகாத்மிய, தியாகராஜ விலாச, தியாகராஜ தியான, தியாகேசுவர ஆகமோத்தியான என்ற நூல்களும் திருஆரூரின் பெருமையைச் சிறப்பித்துச் சொல்கின்றது. எல்லாவற்றுக்கும் மேல் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகச் சிறப்பித்துச் சொல்லப் படும், சத்குரு தியாகையர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் அவதரித்தது இங்கே தான். சங்கீதம் தன் உச்சிக்குப் போய் இவர்களால் பெருமை பெற்றாற்போல் திருஆரூரும் இவர்களால் பெருமை பெற்றுள்ளது. முத்துசாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள் இன்றளவும் அனைத்து சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகளால் பாடப்படுவது திருவாரூரின் பெருமையைச் சுட்டுகிறது.
தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பலம் என்றால் திருஆரூர் பூவம்பலம் என்பார்கள். திருவாரூர் நான்மணிமாலையில் ஒரு பாடல்,
“காவாய் எனச் சிறு தெய்வந்தனைத் தினம் கை தொழுது
நாவாய் தழும்பப் புகழ்ந்து என் பயன் கதிநாடின், மும்மைத்
தேவாயத் தேவுக்கும் கோவாய் மணிப்பொற்சிங்காதனம் சேர்
பூவாய் மதிக்கண்ணி ஆரூர்ப் பிரான் பதம் போற்றுமினே!” என்று சொல்கிறது. திருவாரூர் தியாகராஜருக்குப் பலவகைப் பூக்களினால் அலங்காரம் செய்வார்கள். செங்கழுநீர்ப் பூ மிகவும் விசேஷம். மல்லிகை, முல்லை, இருவாட்சி, செங்குவளை, செவ்வந்தி ஆகிய மலர்களும் மருவு, மருக்கொழுந்து, வெட்டிவேர் போன்றவற்றையும் வைத்துச் சிறப்பான அலங்காரம் செய்யப் படும். இவை யாவும் உதிரிப் பூக்களாலேயே செய்யப் படுவதாய்ச் சொல்கின்றனர். அப்பர் பெருமான் இந்த அலங்காரத்தைப் பார்த்துவிட்டு” ஐயைஞ்சின் அப்புறத்தான்” என்று புகழ்ந்துரைத்திருக்கிறார். திருவாரூர் தியாகேசரைக் குறித்த இன்னொரு பாடலில் நாவுக்கரசர்,
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னை
உத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
ஆறாம் திருமுறை திருவாரூர்த்தேவாரம் 26 பாடல் எண் 4
என்றும் சொல்லுகிறார். ஈசனின் வடிவங்கள் 25 எனச் சொல்லப் படுகிறது. அந்த 25 வடிவங்களில் இருந்தும் மாறுபட்ட வடிவம் இது. ஆகையால் இவரை “என்ன தன்மையன்றறிவொண்ணா எம்மானை” என்று சுந்தரரும் குறிப்பிடுகிறார். மேலும் திருவாரூர் ஈசனை நினைக்கும்போது,
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை 37 பாடல் எண் 2
கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே
சுந்தரர் பாடல் எண் 10
திருவாரூர் தியாகேசருக்குச் சுமார் அறுபது பெயர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலேசர், கம்பிக்காதழகர், கருணாகரத் தொண்டைமான், கருணாநிதி, சிந்தாமணி, செங்கழுநீர் அழகர், செம்பொன் தியாகர், செல்வத் தியாகர், செவ்வந்தித் தோடழகர், தியாக சிந்தாமணி, தியாகப் பெருமான், தியாக விநோதர், திருந்து இறைக்கோலர், திருவாரூர் உடையார், தேவ சிந்தாமணி, தேவர் கண்ட பெருமான், கனகமணித் தியாகர், தியாகராஜர், ரத்தின சிம்மாசனாதிபதி, செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், வேத சிந்தாமணி, அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், அணி வீதியழகர், ஆடவரக்கிண்கிணிக் கால் அழகர், உன்ன இனியார் என்ற பல பெயர்கள் இருந்தாலும் வீதி விடங்கர் என்ற பெயரே அனைத்திலும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இந்த வீதி விடங்கன் பற்றிய கதையும் அறிவோமல்லவா???

Monday, February 15, 2010
நடந்தாய் வாழி காவேரி, காவேரி ஓரம், திருஆரூரின் அவல நிலை!
"தேரூரார் மாவூரார் திங்களூரார்திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
கார் ஊரா நின்ற கழனிச்சாயல்
கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள்
அமரர் தம் பெருமானே எங்குற்றாயே!"
திரு ஆரூர். இதன் பெருமையைச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. பன்னிரு திருமுறைகளிலே அநேகமாய் எல்லாத் திருமுறைகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரே தலம் திருஆரூர். எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே, நம் சிற்றறிவால் யோசித்துப் பார்க்கமுடியாத காலந்தொட்டே இங்கே ஈசனும், அம்பிகையும் குடி கொண்டிருக்கின்றனர். எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு. அம்பிகை இங்கே யோக மாதாவாக யோக சாத்திரத்தின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் விளக்கும் வண்ணம் யோகசக்தியாக வீற்றிருக்கிறாள். மூன்று தேவியரும் ஒன்றாகக் குடி இருக்கும் அந்தக் கமலாம்பிகையே இங்கே யோகசக்தியாக இருப்பதால் கமலாயபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. க என்னும் எழுத்து கலைமகளையும், ம என்னும் எழுத்து மலைமகளையும், ல என்னும் எழுத்து மகாலக்ஷ்மியையும் குறிக்கும்.
இம்முன்று தேவியரும் ஒருங்கே இந்தக் கோயிலில் வடமேற்குத் திசையில் ஈசான்யதிசையை நோக்கியவண்ணம், தலையில் பிறை சூடி, கங்கையும் கொண்டு யோகசக்தியாக விளங்குகிறாள் அன்னை. அம்பிகையின் அனைத்து சக்திகளும் ஒருங்கே இங்கே குடி கொண்டிருப்பதால் ஸ்ரீபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. ஆயிற்று, இவ்வளவு பெருமையுடனே அன்னையும், ஈசனும் குடி வந்தாயிற்று. குடிமக்கள் வரவேண்டாமா?? ஆடல்வல்லானின் சிவகணங்களே இங்கே குடி வந்தனராம். சிவகணங்களாக இவ்வூர்மக்களே விளங்குகின்றனராம். அதனால் இவ்வூரைக் கலிசெலா நகரம் எனவும் அழைக்கின்றனர். இந்த ஊரை ஒரு தட்டிலும், மற்ற தலங்களை இன்னொரு தட்டிலும் வைத்துத் தராசில் நிறுத்துப் பார்த்தபோது இவ்வூரின் பக்கமே தட்டு நிறை மிகுந்து காணப்பட்டதாக ஐதீகம். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரவரபுரம் எனவும் பெயர் உண்டு. திரு வாகிய திருமகளே இந்தத் தலத்தில் வழிபட்டு வரம் பெற்றதாலும் திருஆரூர் எனப் பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். தேவாதிதேவர்கள் எந்நேரமும் கூடி வழிபட்டுக்கொண்டே இருப்பதாலும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த சிவனடியார்கள் குழுமி ஈசனைத் தொழுவதாலும் தேவாசிரியபுரம் எனவும் பெயர் பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் இது நிலம் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது. ப்ருத்வித் தலம் எனப் படுகிறது. உடலின் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத் தத்துவத்தை இது உணர்த்துகிறது. மூலட்டானமாக விளங்குவதால் மூலாதாரபுரம் எனவும், தேவேந்திரன் புற்று அமைத்து ஈசனை வழிபட்டதால் வன்மீகநாதபுரம் எனவும், முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவி செய்து கிடைத்த ஈசனின் திருவடிவைப் பிரதிஷ்டை செய்திருப்பதால் முசுகுந்தபுரம் எனவும் அழைக்கப் படுகிறது.
இந்நகரம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கம் என்றால் என்ன என்பவர்களுக்கு. ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். கோயில் ஐந்துவேலியாம், தீர்த்தக்குளம் ஐந்துவேலியாம், செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்துவேலியாம், என்று சொல்லுவதுண்டு. திருவாரூர் கோயில் இந்த நிலப்பரப்பைப் பற்றி அப்பர் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோயில் என அழைக்கப் படும் தில்லைச் சிற்றம்பலத்தை விட அதிகமான பாடல்கள் பெற்றதி திருஆரூரே ஆகும். மூவர் பாடிய பாடல்களில் கிட்டத் தட்ட இருநூறு பாடல்களுக்கு மேல் திருவாரூர் பற்றிய பாடல்கள் உள்ளன. திருஞாநசம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில்,
“
சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. “
என்றும், திருநாவுக்கரசர்,
“
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.
எனவும் பாடியுள்ளார். இதைத் தவிரவும் திருவாரூர் அறநெறி என்னும் பாடல்களையும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருவாரூர்க் கோயிலின் நில அளவைக் குறிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. பாடல் தேடினேன். தட்டச்சுத் தேடலில் கிடைக்கவில்லை. “அஞ்சணைவேலி” என ஆரம்பிக்கும் பாடல். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில்
“ பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர்குவிமுலையாள் கூறாவெண் நீறாடீ
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்
பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் பகழேனே!”
என்கின்றார். இது தவிர திருமூலர் தம் திருமந்திரத்திலும் திருவாரூர் பற்றி அஜபா மந்திரம் என்னும் பகுதியில் சொல்கிறார்என்று தெரியவருகிறது.
Friday, February 12, 2010
நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! சார்ங்கபாணி கோயில்!
மற்றப் பாடல்கள் பற்றி அந்த பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. மனம் வருந்திய நாதமுனிகள் பெருமாளை வேண்டிக் கொண்டு மற்றப் பாடல்களை எவ்விதம் கண்டறிவோம் என வருந்தினார். அவர் கனவில் தோன்றிய பெருமாள் திருநெல்வேலி மாவட்டம் (இப்போ தூத்துக்குடி மாவட்டத்தில்) ஆழ்வார் திருநகரிக்குச் சென்று பார்க்கும்படி சொல்ல அவ்வண்ணமே அங்கே சென்று நம்மாழ்வாரை வேண்ட அவரும், "ஓராயிரம் என்ன, நாலாயிரமும் தருவோம்" எனச் சொல்லி ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்துப் பாடல்களையும் தந்தருளினார். இவற்றை நாதமுனிகள் தொகுத்து உலகுக்கு அளித்தார். இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திய்வ பிரபந்தம் என்ற பெயரில் இன்றும் விளங்குவதோடு வைணவ குலத்தின் அரும்பெரும் பொக்கிஷமாகவும் கருதப் படுகிறது. இப்படி ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்க இந்தத் தலத்து சார்ங்கபாணியே காரணமாக இருந்ததால் இவருக்கு "ஆராவமுதாழ்வார்" என்ற பெயரும் ஏற்பட்டது.இந்தத் தலத்தை உபய ப்ரதான திவ்யதேசம் என்றும் கூறுவார்கள். பொதுவாக திவ்ய தேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே வழிபாடுகள் அனைத்தும், அலங்காரங்கள் அனைத்தும் செய்யப் படும். ஆனால் இந்தக் கோயிலில் மூலவருக்கான மரியாதைகள் அனைத்தும் உற்சவருக்குச் செய்யப் படுகிறது. மூலவருக்குப் பிரதிநிதியாக அவரின் பொறுப்பில் இருந்து உற்சவர் செயல்படுவதாக ஐதீகம். அதனால் இந்தத் தலம் உபய ப்ரதான திவ்ய தேசம் எனப்படுகிறது.
பெருமாள் தாயாரைத் திருமணம் செய்த தேரில் வந்ததால் கருவறையின் அமைப்பு தேரைப் போலவே உள்ளது. விமானத்தை வைதீக விமானம் என்கின்றனர். உற்சவர் ஆன உபய ப்ரதான மூர்த்திக்கு அருகேயே ஒரு சின்னஞ்சிறு தொட்டிலில் சந்தான கோபாலகிருஷ்ணன் சிலை வைக்கப் பட்டுள்ளது. அநேகமாய் எல்லா விஷ்ணு கோயிலிலும் காணமுடியும். என்றாலும் இங்கே குழந்தை பாக்கியம் இல்லாதோர் சந்தானகோபாலகிருஷ்ணனுக்கு விசேஷ வழிபாடுகள் செய்து பிரார்த்தித்துக்கொண்டு போய், கோரிக்கை நிறைவேறியதும் திரும்ப வந்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். நாங்க போன அன்றும் இரண்டு, மூன்று தம்பதிகள் பிரார்த்தித்துக்கொண்டு சென்றனர். மூலவர் மட்டுமில்லாமல் உற்சவரும் வில்லை வைத்திருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். சார்ங்கம் என்றால் வில், அதனால் இவர் சார்ங்கபாணி, சாரங்கபாணி என்றால் அது(சிவன்) ஈசனைக் குறிக்கும். சிவன் கையிலிருக்கும் சாரங்கம் என்றால் மானைக் குறிக்கும் என நினைக்கிறேன். மூலவர் கையில் இருக்கும்சார்ங்கம் பார்க்கமுடிவதில்லை. (கேட்டுப் பார்த்துட்டேன், தரமாட்டேனுட்டார்) மகாமகம் கும்பகோணத்தில் பிரபலம் என்பதால் மகாமகத்தன்று நீராட வரும் நதி தேவதைகளும், தேவாதிதேவர்களும் சார்ங்கபாணியையும் வந்து வணங்குவதாக ஐதீகம். மாமனார் வீட்டோடு இருக்கும் இந்த மாப்பிள்ளைக்கு முதலில் பூஜை இல்லை. தாயார் சந்நிதியில் நடத்தப்பட்ட பிறகே பெருமாள் சந்நிதியில் நடக்கும்.
இந்த ஊரைச் சேர்ந்த லக்ஷ்மிநாராயண சாமி என்னும் பக்தர் தம் வாழ்நாளில் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்த சார்ங்கபாணி கோயிலின் திருப்பணிகளிலேயே செலவிட்டு வந்தார். பெருமாளின் பேரில் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் மிகவும் கஷ்டப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணம் சேர்த்து இந்தக் கோயிலின் கோபுரத்தைக் கட்டி முடித்தார். ஒரு தீபாவளி தினத்தன்று மரணம் அடைந்த அவருக்கு ஈமச் சடங்குகள் செய்யக் குழந்தைகள் இல்லை. தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைப் பெருமாளே செய்தார். ஆனால் யாருக்குமே இது தெரியாது. அன்றைய நாள் கோயில் நடை அடைக்கப் பட்டு மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்தபோது பெருமாள் ஈரவேட்டியுடன், மாற்றிப் போடப் பட்ட பூணூலுடன், தர்ப்பைகள் அங்குமிங்கும் கிடக்க ஈமச் சடங்குகள் செய்து முடித்த கோலத்தில் காட்சி அளித்தார். திகைத்த பட்டர்மார்களுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. இப்போதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று உச்சிக்காலத்தில் பெருமாள் தன் பக்தருக்காக சிராத்தம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் இதை பக்தர்கள் காணமுடியாது. தன் உண்மையான பக்தனுக்காகக் கடவுள் எவ்வளவு தூரமானாலும் இறங்கி வந்து சேவை சாதிப்பார் எனப்புரிய வைக்கும் அரிய நிகழ்வு இது.
அடுத்து நாம் பார்க்கப் போவது மிக மிக முக்கியமான கோயில். ஆயிரம் வேலி நிலம் உள்ள பணக்கார சுவாமியையும், அம்மனையும் பார்க்கப் போகிறோம். அதோடு அவர்கள் இப்போது பிச்சைக்காரர்களை விட மோசமான கோலத்தில், மோசமான ஸ்திதியில், திருப்பணி என்பதையே கண்டு பல்லாண்டுகளான ஒரு கோயிலில் குடி இருப்பதையும் பார்க்கப்போகிறோம். தமிழ்நாட்டிலே நீதி நெறி தவறா அரசர்கள் பலர் ஆண்டு வந்தாலும் இந்த ஊரின் மன்னன் மிகவும் பிரசித்தி பெற்றவன். ஒரு பசுங்கன்றுக்காகத் தன் அருமை மகனையே பலியிடத் துணிந்தவன். அத்தகைய மன்னர்கள் ஆண்ட நகரிலே உள்ள கோயிலின் நிலைமை இன்று பரிதாபமாக இருக்கிறது. கண்ணில் ரத்தம் வருகிறது.
Thursday, February 11, 2010
நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம்! குடந்தை சார்ங்கபாணி!
பிருகு மஹரிஷி(பிருங்கி முனிவர் இல்லை) மும்மூர்த்திகளிலும் பொறுமையும், சாந்தமும், அன்பும் கலந்து பக்தனுக்கு அருள் பாலிப்பதில் மஹாவிஷ்ணுவிற்கு நிகரில்லை எனச் சொல்ல, அதை ஏற்காத மற்ற ரிஷிகள் அவரிடம் அதை நிரூபிக்கச் சொன்னார்கள். வைகுந்தம் சென்ற பிருகு மஹரிஷி, திருமாலின் மார்பில் எட்டி உதைக்கிறார். தன் பக்தன் ஆன பிருகு தன்னுடைய மார்பில் உதைத்ததால் ரிஷியின் கால்கள் நோகுமோ என எண்ணிய மஹாவிஷ்ணு அந்தக் கால்களைப் பற்றி அன்போடு பிடித்துவிட்டார். ஆனால் அவர் மார்பில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீயின் மேல் அவர் பாதம் பட இருந்தது. அதை மஹாவிஷ்ணு தடுக்கவில்லை. அனைத்து வளங்களையும் அளிக்கவல்ல ஸ்ரீயின் மேலே பாதம் பட இருந்ததால்/ ஒருவேளை பட்டிருந்தாலோ அவருக்கு வறுமை ஏற்படும், அதைத் தடுக்கவில்லையே என மஹாவிஷ்ணுவை ஸ்ரீ கேட்க, அவர் மெளனம் சாதித்தார்.பிருகு ரிஷியோ தன் தவறை உணர்ந்து ஸ்ரீயிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், "தாயே. எம்பிராட்டி, யாகத்தின் பலனை தெய்வங்களில் சாத்வீகமானவருக்கே அளிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவித்திருந்தனர். அதை அறியும்பொருட்டே நான் நடிப்பிற்காகவே விஷ்ணுவை உதைத்தேன். நீ கோபம் கொள்ளாதே! என்னை விட்டுப் பிரிய எண்ணும் நீ என் மகளாக பிறந்து வளர்ந்து வரும் பலனை எனக்கு அளிப்பாய். உன்னை இந்த மஹாவிஷ்ணுவிற்கே மணமுடித்து அவருக்கே நான் மாமனாராக ஆகவும் விரும்புகிறேன். தயவு செய்து பொறுத்துக்கொள்வாய்!" என வேண்டினார். ஏற்கெனவே விஷ்ணுவிடம் கோபம் கொண்டிருந்த ஸ்ரீயும் இப்போது நல்ல தருணம் என நினைத்து பிருகுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஸ்ரீ மகளாகப் பிறக்கவேண்டுமெனில் பிருகு முனிவர் இன்னும் தவம் செய்யவேண்டும் என்றும் கும்பகோணம் பகுதியில் போய்த் தவமிருக்குமாறும் கூற, அவ்வாறே பிருகு தவம் இருந்தார்.
இங்கே இருந்த ஹேம புஷ்கரிணி என்னும் தீர்த்தத்தில் தினம் பூத்துக்கொண்டிருந்த தாமரை மலர்கள் ஒன்றில் ஸ்ரீ அவதாரம் செய்தாள். பூஜைக்கு மலர் பறிக்க வந்த பிருகு ரிஷி அந்த மலரில் ஸ்ரீயைக் கண்டதும் எடுத்துத் தன் அருமை மகளாக வளர்த்து வந்தார். கோமளவல்லி என்ற பெயரையும் சூட்டினார். திருமாலையே மணம் முடிக்க ஆசைப்பட்ட அவளுக்குத் தேடிப்பிடித்துத் திருமாலையே மணமகனாகவும் கொண்டு வந்தார். திருமால் சார்ங்கம் என்னும் வில்லேந்தி ரதத்தில் வந்தார். விளையாட்டிற்குப் பாதாளத்தில் ஒளிந்து கொள்ள, ஸ்ரீக்குக் கலக்கம் ஏற்பட்டது. பின்னர் அவள் முன் தோன்றிய சார்ங்கபாணி அவளை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் "பாதாள ஸ்ரீநிவாசர் சந்நிதி" என அழைக்கப் படுகிறது. திருமணம் ஆனதும் மேட்டுப் பகுதியில் மேட்டு ஸ்ரீநிவாசராக இரு தாயார்களுடன் தனி சந்நிதியில் இருக்கிறார்.
இந்தத் தலம் தாயாரின் அவதாரத் தலம். தாயாருக்கே இங்கே முக்கியத்துவம். முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதும் ஐதீகம்.
நாம் தரிசனத்துக்குச் செல்லும் அமைப்பே அவ்வாறு அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பும், சொர்க்கவாசலும் கிடையாது. பெருமாள் நேரே வைகுந்தத்தில் இருந்தே இங்கே வந்துவிட்டதால் இவரை வணங்கினாலே பரமபதம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இரு வாசல்கள் உள்ளன. உத்தராயண வாசல், தக்ஷிணாயண வாசல். தற்சமயம் தை மாசம் முதல் ஆனி வரை உத்தராயண வாசலும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயண வாசலும் திறந்திருக்கும். மூலவர், உற்சவர் இருவரும் சார்ங்கம் என்னும் வில்லை வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆராவமுதன் என்னும் அழகிய தமிழ்ப்பெயராலும் பெருமாள் அழைக்கப் படுகிறார். திருமழிசையாழ்வார் இந்தத் தலத்திற்கு வது பெருமாளை வணங்கி. "நடந்து, நடந்து உன் கால்கள் வலிக்கிறதோ? பள்ளி கொண்டுள்ளாய்?" என்ற பொருள் தரும் பாசுரம் ஒன்றைப் பாட, சுவாமி எழுந்து அவர் பாடலைக் கேட்டார்.
சுவாமியின் அருளைக் கண்டு மகிழ்ந்த திருமழிசை ஆழ்வார், இனி அனைத்து பக்தர்களுக்கும் இந்தக் கோலத்திலேயே காட்சி கொடுக்குமாறு பெருமாளை வேண்ட, பெருமாளும் அவ்வாறே அருளினார். முழுமையாகப் பள்ளி கொண்டிராமல் சற்றே எழுந்த கோலத்தில் பெருமாள் காணப்படுவார். இதை உத்தான சயனம் என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்தப் பெருமாளைக் காணவந்த நாதமுனிகள் அங்கே இருந்த பக்தர்கள் பாடிய நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்டார். ஒரு பாசுரத்தில், "ஓராயிரத்துள் இப்பத்தும்" என வரவே, இதைக் கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளனவா?" என வியந்தார்.
Subscribe to:
Posts (Atom)