எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 01, 2007

சிதம்பர ரகசியம் - தெரிந்து கொண்டு சொல்லறேன்!







அபி அப்பா கேட்டதற்குப் பதில் சொல்ல முடியலை. ஏனெனில் நான் அந்தப் பக்கம் போய்த் தரிசனம் செய்யலை. ரொம்பவே வெட்கமாய் இருக்கிறது. என் கணவரிடம் கேட்டதில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த, பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இருப்பதாய்க் கூறினார். ஆனால் நாங்க போனப்போ அந்தப் பக்கம் போகவே இல்லை. போய்ப் பார்க்காமல் எழுத முடியாதுனு நான் அதைப் பத்தி எழுதலை. சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய் அபி அப்பா கூறினார். உண்மையில் அவர்தான் இதை எழுதத் டகுதி படைத்தவர்னு சிலசமயம் தோணும்.

அடுத்து வேந்தர் கேட்ட தீட்சிதர்கள் பத்தின கேள்வி. சிலர் இதற்குப் பதில் சொல்லவேண்டாம்னு சொன்னாலும் எனக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறதாய் நினைத்துக் கொண்டு நானாகத் தான் சொல்கிறேன். தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும், நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்புக்களைத் தேடி ஆராய்ந்தபோது "திண்ணை"யில் அரவ்ந்தன் நீலகண்டன், எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும், இது பற்றி "அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை" விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப் படும் ஆயிரக்கால் மண்டபம். இன்று பூரா படத்துக்குத் தேடியும் படம் கிடைக்கலை. போட்ட படமே சரியா வரலை. தெரிய மாட்டேங்குது. :(((

சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும், இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான், ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர், தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும், இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப் படுகிறது. இதைத் தவிர, கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும், தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர், பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது.

8 comments:

Geetha Sambasivam said...

2 முறையாக இந்தப் பதிவில் போடும் படம் எனக்குத் தெரியறதே இல்லை, மத்தவங்களுக்குத் தெரியுதா இல்லையானு புரியலை. :(((((((((((

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா, அபி அப்பாவிடமே சொல்லி அந்த ஸ்ரீசக்ர பிரதிஷ்டை பற்றிய பதிவினை இடுங்களேன்....

ஆயிரங்கால் மண்டபச் செய்திகள் அருமை.

இந்த பதிவில் படங்கள் தெரியவில்லை.

Geetha Sambasivam said...

படம் இரண்டு போட்டிருந்தேன், சரியா வரலை, காரணம் புரியலை. முடிந்தவரை கிழக்குக் கோபுரத் தோற்றத்தை மட்டும் கொண்டு வந்திருக்கேன். மெளலி, இது சரியா இருக்கா?அப்புறம் பார்க்காத ஒரு விஷயத்தை அபி அப்பா கிட்டே கேட்டுச் சொல்றது சரியா வராதுனு தோணுது. மன்னிக்கவும் மெளலி.

Geetha Sambasivam said...

முந்தைய பதிவில் தெரியாமல் இருந்த 2 படங்களிலும் ஒன்றுதான் சரியா வந்திருக்கு. :(((((

வடுவூர் குமார் said...

ஒரு படம் தான் தெரிகிறது

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்புறம் பார்க்காத ஒரு விஷயத்தை அபி அப்பா கிட்டே கேட்டுச் சொல்றது சரியா வராதுனு தோணுது. மன்னிக்கவும் மெளலி//

புரிகிறது. அவர் சொல்லி நீங்க எழுத வேண்டாம், அவரையே ஒரு பதிவினை போடச் சொல்லுங்களேன்..

மெளலி (மதுரையம்பதி) said...

இப்போ படம் தெரிகிறது.

Mohandoss said...

//கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும்//

இது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அல்லவா?

(நீங்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் நான் எஸ்கேப்.)

எப்படியிருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தைப் வெளியிடவேண்டாம். ப்ளீஸ்.