எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 01, 2020

அரங்கன் வருவானா?

 பல மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு சில பிரச்னைகளால்  கிட்டத்தட்ட இதை வேண்டாம்னு விட்டுடலாம்னு கூட ஓர் எண்ணம். இன்னொரு பக்கம் எடுத்த காரியத்தை முடிக்காமலா என்று மனம் கேட்டது. என்ன செய்ய என்றே தெரியவில்லை. அதே சமயம் கிடைத்த ஓரிரு புத்தகங்களின் உதவியோடு தொடரச் சொல்லி மனதில் ஓர் எண்ணம். துணைப்புத்தகங்கள் தேடினால் கோயில் ஒழுகு இணையத்திலும் கிடைக்கவில்லை. பத்மா அவர்கள் கொடுத்த சுட்டியில் வேலையும் செய்யலை. எரர் காட்டுது. முன்னால் எல்லாம் ஒலிநாடா மூலம் இணையத்தில் கிடைத்து வந்தது. இப்போது அது வேலையே செய்வதில்லை. பத்மா கொடுத்த சுட்டியில் இன்னொன்று புத்தகம் விலைக்கு அமேசானில் வாங்கணும். இப்போதைக்கு வாங்க முடியாது என்பதால் மற்றத் துணைப்புத்தகங்கள் உதவியோடயே படிச்சதை ஓரளவுக்கு மெருகூட்டி எழுதணும். இதற்கு நடுவில் வேறு சில புத்தகங்கள் வெளியீட்டுக்காகச் சில, பல வேலைகளும் செய்யணும். அதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.  முடிஞ்ச வரை வாரம் ஒரு பதிவாகப் போட்டுவிட நினைக்கிறேன். மற்றவை அரங்கன் சித்தப்படி. 

3 comments:

நெல்லைத் தமிழன் said...

ஓ...இன்னும் ஆரம்பிக்கலையா?

ஆரம்பிக்கலாம் என்று நினைச்சதுக்கே ஒரு இடுகையா?

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு கீதாமா.
அரங்கன் நல்ல மனது வைக்கட்டும்.
உங்கள் புத்தகங்களும் முக்கியமானவை தான்.
நிதானமாகச் செய்யுங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரங்கன் துணை நிற்பான்.